மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை
மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அதன் பின்னர் ஏற்பட்ட அயலவர் படையெடுப்பாலும், ஆரியப்பண்பாட்டு மொழியான சமசுகிருதக் கலப்பாலும் தமிழின்நிலை தாழ்வுற்றது. மீண்டும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழை மீட்டுருவாக்கும் பணியினைப் புலிப்பாய்ச்சலோடு தொடங்கியவர்கள் தமிழறிஞர்களே ஆவர். பிரித்தானியர் ஆட்சியில் நான்கு தேசிய இனத்தவரின் நிலமாக சென்னை மாகாணம் இருந்தது. அதில் ஒன்றான தமிழ்த் தேசிய இனம் மட்டுந்தான் ஆரியப் பண்பாட்டு மொழியான சமசுகிருதத்தையும், இந்தியையும் எதிர்த்துப் போரிட்டது. இதை முன் நின்று தொடங்கி வைத்த…
வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்
வணிக நோக்கிலான கருத்தரங்கங்களும் மோசடிப்பேர்வழிகளும் கருத்தரங்கங்கள் கருத்துப் பரவலுக்கும் புத்தறிவிற்கும் மனமகிழ்ச்சிக்கும் படைப்புப் பெருக்கத்திற்கும் வழி வகுப்பன. ஆனால், இப்பொழுதெல்லாம் கருத்தரங்கம் என்றாலே அச்சம்தான் வருகின்றது. சிலர் தங்களுக்கு வேண்டிய பேச்சாளர்களை முடிவெடுத்துக் கொண்டு கருத்தரங்கம் என அறிவிப்பார்கள். அக்கூட்டத்தில் யாரும் கேள்வியும் கேட்கக்கூடாது என்பார்கள். சொற்பொழிவாக இருந்தாலும் 1 மணி நேரம் பேசினால் 10 மணிக்கூறாவது கலந்துரையாடல் இடம் பெற வேண்டும் என்பார் நாவரசர் அறிஞர் ஒளவை நடராசன். ஆனால், இவர்கள் தாங்கள் மட்டும் பேசிக்கொண்டு கருத்தரங்கம் என்பர். குறிப்பிட்ட…
அதிமுக-வைச் சிதைக்கிறாரா திவாகரன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிமுக–வைச் சிதைக்கிறாரா திவாகரன்? திவாகரன் மீது தினகரனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள சினம் சரிதான் என்று தோன்றுகிறது. நேற்று வெளியான 2.5.18 நாளிட்ட இளைய விகடனாகிய சூனியர் விகடனில் திவாகரன் தெரிவித்த கருத்துகள் வந்துள்ளன. அதைப் படித்ததும் திவாகரன் மனம் கலங்கிய நிலையில் உள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் எதிர்பார்த்தது நடக்காத போது அல்லது நம் நம்பிக்கை பொய்க்கும்போது இத்தகைய மனநிலை ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இந்த நிலைக்குக் காரணம் அவர்தான் என்பதை அவரது வாக்குமூலமே உறுதிப்படுத்துகிறது. பொதுவாகத், தினகரன்…
11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்
11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில் மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது. நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு தொடுத்த பொழுதே இவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாமே! மற்றொன்று தமிழகத் தலைவிதியை…
ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்! – குவியாடி
பிற கருவூலம் அனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்! குவியாடி உரிமைக் குரல் கொடுத்துப் பெயர் பெறுவோர் உலகில் உண்டு. அடிமையாய் அடங்கிப் பெயர் பெறுவோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அடிமைத் தனத்தின் அடையாளம்தான் போலிப் பணிவு! மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இந்தப் போலி பணிவுக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார். தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதை உணராமல் தற்காப்பு என எண்ணிச் சில முத்துகளை உதிர்த்து வருகிறார் அவர்! 30 ஆண்டுகளாகச் சசிகலா, செயலலிதாவை ஆட்டி வைத்ததாகக் கூறி வருகிறார்…
அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா? – குவியாடி
பிற கருவூலம் அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா? குவியாடி முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் செயல்பட்டுவந்தது. இப்பொழுதோ சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் மட்டுமல்ல, சொந்தக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில்கூடப் பெரும்பான்மை இழந்து அல்லாடுகிறது அதிமுக!…
எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? – குவியாடி
எந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்? விசுவ இந்து பரீச்சத்து என்னும் அமைப்பு இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்ப்பாடத்தில் மேனிலைக்கல்வியை முடிக்கும் முன்னர் இராமகாதையைக் கம்பரின் வரிகளில் படித்து விடுகின்றனர். பிற மாநிலங்கள் குறித்துத் தெரியவில்லை. ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கல்வி ஒரே சமயம் என வெறி பிடித்துக் கூக்குரலிடும் அமைப்பு இப்பொழுது நாடு முழுவதும் இராமன் கதையைப் பாடமாக வைக்க வேண்டும் எனச் சொல்வதால் சில ஐயங்கள் ஏற்படுகின்றன. வரலாறு…
வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! – குவியாடி
வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே! – குவியாடி ஒடுக்கப்பட்ட மக்களின் – பாரதியின் மொழியில் சொல்வதானால் தணிந்த சாதியினரின் – நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்து இல்லை. அவர்களுக்கு எதிராக இன்றும் வன்கொடுமைகள் தொடர்வதும் உண்மைதான். எனவே, வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் மூலமாகவாவது அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். நடைமுறைக் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக இச்சட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் நலன்கருதிச் சில திருத்தங்கள் தேவை. அதே நேரம், பொய்க்குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் பிற வகுப்பினரின் நலன்களைக் காக்கவும் சட்டத்தில் திருத்தம் தேவை. இதைக் காலங்கடந்தேனும் உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது. ஆனால்…
கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? கலைகளைப் பேணவும் கலைஞர்களைப் போற்றி ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தரும் விருது ‘ கலைமாமணி’. இவ்விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. விருதுகள் வழங்க அரசிற்குப் பரிந்துரைப்பதும் நடவடிக்கை முற்றுப்பெறாமல் போவதுமாகச் சிலமுறை நிகழ்ந்துள்ளன. கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வரும். ஆனால் காற்றோடு கரைந்து போகும். நாட்டில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும்பொழுது இதற்கெல்லாம் முதன்மை கொடுக்க வேண்டுமா என எண்ணலாம். ஆனால், நாட்டு வளர்ச்சியில் கலைவளர்ச்சியும் அடக்கம். கலைவளர்ச்சியில்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ”! என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த…
வழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்! இலக்குவனார் திருவள்ளுவன்
வழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்! இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா…
எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5
(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4 தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 “இலம் என்றசை இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்” என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள்! அந்த திசைநோக்கி தடக்க வேண்டும். நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம்….
