அகத்தியர் என்ற சொல் தமிழே! – அ.சிதம்பரனார்
அகத்தியர் என்ற சொல் தமிழே! அகத்தியர் என்ற சொல்லை அகத்தியம் என்ற வடசொல்லின் திரிபு என நம் நாட்டில் பலர் நம்பி வருகிறார்கள். அகத்தியம் என்பது அகத்தி என்ற ஒரு கீரைவகைப் பெயரின் அடிப்படையில் தோன்றியது ஒன்றாம். தமிழில் அகத்தி என்பது இருத்தல் போலவே மலையாளத்திலும் அகத்தி என்ற சொல் உண்டு. செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரனார்: தமிழோசை: பக்கம்.48
நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம்! – ஆறு.அழகப்பன்
நல்லனவற்றிற்கு ஆசைப்படலாம்! நல்லனவற்றிற்கு ஆசைப்படுவது தீங்கான செயலன்று. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாலும், நல்ல மனமுள்ள ஒரு மலையேறுபவன் மனம் வைத்தால் அந்தக் கொம்புத் தேனை முடவனுக்குக் கொடுக்க முடியாதா? கலைமாமணி ஆறு.அழகப்பனார்: நாடகச் செல்வம்: பக்கம்.136
தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா! – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழக அரசியல்
தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா! இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்க்காப்புக்கழகத்தலைவர் மறைந்த முதல்வர் செயலலிதா தமிழுக்கு முதன்மை அளித்தவர். ‘சிங்காரச் சென்னை’ என்பதை ‘எழில்மிகு சென்னை’ என மாற்றியவர் கலைபண்பாட்டுத்துறையில் முத்தமிழ்க்கலையறிஞர்களின் நினைவு போற்றும் வகையில் நினைவில்லங்கள் எழுப்பும் திட்டம் அறிமுகமானது. இவற்றை நினைவில்லம் என்று அழைக்காமல் மறைந்த கலை ஆன்றோர்களின் புகழைப் போற்றுவதால் ‘புகழரங்கம்’ என்று அழைக்க வேண்டும் என்று கலைபண்பாட்டுத் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. துறைச் செயலர் இதற்கு உடன்படவில்லை. ஆனால் முதலமைச்சர் செயலலிதா “புதிய நல்ல தமிழ்ச்சொல்லாக உள்ளது;…
இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு! தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்? இந்திய விடுதலைக்கு முன்னரே இந்தித்திணிப்பிற்குக் கால் கோளிடப்பட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்திப்பரப்புரை அவை(இந்திப்பிரச்சாரசபா). இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இந்தித்திணிப்பு என்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பேராயக்கட்சியால்(காங்கிரசால்) செயல்படுத்தப்பட்டது. இன்றைய நரேந்திரர்(மோடி) ஆட்சியில் வெகு விரைவாக இந்தித்திணிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் நல மையங்கள் அல்லது ஊழியப் பகுதியில் பொதுவாக இந்தி அல்லது ஆங்கிலம் உள்ளது; குசராத்தி மொழி மிக விரைவாக எல்லா மத்திய அரசு, அரசு சார் நிறுவனங்களில்…
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது. திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது. இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான். முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது…
நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் -சந்தர் சுப்பிரமணியன்
நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் (Bob Dylan) வழக்கம்போல் 2016-ஆம் ஆண்டுக்கான நோபல்பரிசு குறித்த செய்திகள் வரத்தொடங்கிய கடந்த ஒரு மாதக்காலத்தில், பரிசாளர்கள் பட்டியல் குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் உலவத் தொடங்கின. நோபல் பரிசுகளில் மிக முதன்மையான பரிசான இலக்கியப்பரிசு இந்த ஆண்டு யாருக்கு என்று அதனதன் நோக்கில் அலச ஆரம்பித்தது ஊடகம். அக்டோபர் 6 ஆம் நாள், ‘நியூ (இ)ரிபப்ளிக்கு / new republic‘ என்னும் நாளிதழ், இலக்கியப்பரிசு குறித்த ஒரு கட்டுரையில் “பாபு தைலனுக்கு விருதா?…
உவமைக் கவிஞர் சுரதா – எழில்.இளங்கோவன்
உவமைக் கவிஞர் சுரதா காதல் எப்படிப்பட்டது? வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா, “மலரினும் மெல்லியது காதலே”. காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் – இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”. கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது. காலையில் சூரியனைப் பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் –…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 37(2.07) பரத்தையை விலக்கல் பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள். பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள். மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள். எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள். 363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்; அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள். இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்; இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள். உடைமுதற் பொருளெலா…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 அருங்கேடும் கேடறியாமையும் நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன்…
தமிழ்ச் செல்வங்கள்: ஒல் – முது முனைவர் இரா. இளங்குமரன்
தமிழ்ச் செல்வங்கள்: ஒல் ‘ஒல்’ என்பது ஓர் ஒலிக் குறிப்பே! கல் என வீழ்ந்த அருவி ‘ஒல்’ என ஆறாய்த் தவழ்கின்றதாம்! பரஞ்சோதியார் படைப்பு இது! ஒல்லெனத் தவழ்வது சமவெளியில் அன்று! துள்ளி வரும் காட்டில்! அதனால், “கானத்து ஒல்லெனத் தவழ்ந்து” என்றார். மக்கள் செவியில் தென்னை, பனை ஆகியவற்றின் கீற்று காற்றில் ஆடுதல் ‘ஒல்’ என ஒலித்தது. அதனை ‘ஓலை’ என்றனர். பச்சோலைக்கு இல்லை ஒலி என்பதால், காய்ந்த ஓலைக்கு ஒலியுண்டு என்பது தெளிவாகும். ஓலைதான், செவ்வியல் மொழிக் கொடைச்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 4/7 தொல்காப்பியம் முழுமைக்கும் தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது என்பதை நுட்பமான ஆராய்ச்சித்திறனுடன் உணர்த்துகிறார்; இவற்றை, “எண்வகை மெய்ப்பாடுகள்: இலக்குவனாரின் ஆராய்ச்சித் திறன்” கட்டுரை மூலம்…
கவிஞர் மு.முருகேசின் ஐக்கூ நூல்கள் வெளியீடு, சென்னை
கார்த்திகை 25, 2047 / 10.12.2016, சனிக்கிழமை, மாலை 5.30 மணி ஐக்கூவோடு கை குலுக்குவோம் மு.முருகேசு படைத்துள்ள ‘தமிழ் ஐக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்’ கட்டுரைகள், ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூல்கள் வெளியீடு பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041. ஈரோடு தமிழன்பன் என்.லிங்குசாமி வசந்தபாலன் தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் பனுவல்
