தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு? இ.பு.ஞானப்பிரகாசன்
தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு? இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காசுமீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்! அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு…
நூல்களை எண்மியமாக்கல் – தமிழக அரசிற்குப் பாராட்டும் வேண்டுகோளும் : இலக்குவனார் திருவள்ளுவன்
படைப்பாக்கப் பொதும உரிமப்பரவலாக்கலுக்குப் பாராட்டு! தொடர்நடவடிக்கைகளுக்கு வேண்டுகோள் எல்லாத்தமிழ் நூல்களும் எண்மியமாக்கப்பட வேண்டும் என்பதே இணையத்தமிழ் ஆர்வலர்களின் உள்ளக்கிடக்கை. இது குறித்துப் பலரும் பேசியிருந்தாலும் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் முறையாக முறையீடு அளித்துத் தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எல்லா நூல்களையும் எண்மியமாக்கல் என்பது பொதுவான கருத்து. அதைப் படிப்படியாக எப்படிச் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளோம். முதலில் அரசுத் துறைகள், அரசுசார் நிறுவன நூல்களை எண்மியமாக்க வேண்டும் என்பது போன்று படிநிலைகளை வேண்டியிருந்தோம். தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் ஆட்சிக்குழுவில் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலர், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குர்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.24. நன்றி யறிதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.23. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 24. நன்றி யறிதல் நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி. மற்றவர்கள் நமக்குச் செய்தவையை நினைவு கூர்தலே நன்றி ஆகும். உறவினர் முதலியோ ருதவுதல் கடனே. உறவினர் முதலியவர்களுக்கு உதவுதல் நம் கடமை ஆகும். பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே. பிறர் நமக்குச் செய்யும் உதவியைவிட பெரியது ஒன்றுமில்லை. உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல். துன்பம் ஏற்பட்ட சமயத்தில் செய்யப்படும் உதவியே சிறந்த உதவி ஆகும். உயர்ந்தது கைம்மா றுகருதா துதவல். உதவியில் உயர்ந்தது பதிலுக்கு…
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! – 2 / 2 தமிழியக்கப்பணிகளாலும் திராவிட இயக்கப்பணிகளாலும் தமிழ் மறுமலர்ச்சி ஏற்பட்டது குறித்து மகிழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார். அவர், ‘இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று புதுமைப் பாவலர்கள் முழக்கம் செய்தனர். எங்கு நோக்கினும் இன்பத்தமிழ்; செந்தமிழ்; இதழ்களில் செந்தமிழ்; மேடைப்பேச்சுகளில் நற்றமிழ்; மாநாடுகளில்வண்டமிழ்; நற்றமிழில் பேசுதலே நற்புலமைக்கு அடையாளம் என்ற எண்ணம் உருப்பெற்று விட்டது. நமஃச்காரம் போய் வணக்கம் வந்தது. சந்தோசம் மறைந்து மகிழ்ச்சி தோன்றியது. விவாகம் விலகித் திருமணம் இடம் பெற்றது….
நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி
(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10 தொடர்ச்சி) நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! நிறைய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் நினைத்தேன். நடைமுறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ்வாறு ஆசைப்பட்டேன். இருப்பினும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை. அந்தத் தடைகளை…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41 தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார். ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம். இக்கவிதை…
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…
சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
சேரனின் கூற்றும் தவறு! மழுப்பலும் தவறு! இருப்பினும் மன்னிப்போம்! இயக்குநர், நடிகர், படஆக்குநர் என்ற முறையில் சேரன் மக்களால் நேசிக்கப்பெறும் கலைஞர்; தம் படங்களுக்கு மூன்று தேசிய விருதுகள் பெற்றவர் என்ற முறையில் அரசாலும் போற்றப்படுபவர்; ஈழத்தமிழர் நலன் சார்ந்த உரை யாற்றி உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்களின் பரிவிற்கும் பாத்திரமானவர். தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (திருவள்ளுவர், திருக்குறள் 104) நமக்குப் பிறர் செய்யும் உதவி மிகச்சிறிய தினை அளவாக இருப்பினும் அதனை நாம் மிகப்பெரிய பனை அளவாகக்…
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
[1] பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும். பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர் அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர்…
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்! படிக்கும் பருவத்திலிருந்தே தனித்தமிழ்நடை பேணியவர்; தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்ததுடன் – தனித்தமிழ் வித்தைப்பிறரிடம் விதைத்தவர்; தனித்தமிழ் அன்பர்களைத் தம் உறவாகவும் தனித்தமிழுக்கு எதிரானவர்களைத் தமக்குப் பகையாகவும் கருதி வாழ்ந்தவர்; தனித்தமிழ் வளர்ச்சிக்கெனவே இதழ்கள் நடத்தியவர்; அவர்தாம் தனித்தமிழ்க்காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவர் புகழுடல் எய்திய நாளில்(ஆவணி 18 / செட்டம்பர் 03) அவரது நினைவைப் போற்றும் நாம் அவரது கனவுகளை நனவாக்க அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பின்வரும் முழக்கங்களைக் கடமைகளாகக்…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 – மறைமலை இலக்குவனார்
(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றது, அரசு இலச்சினையில் விளங்கும் ‘சத்ய மேவ சயதே’ என்னும் இந்தித்தொடரை உடனே அகற்றி “வாய்மையே வெல்லும்” என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியவர் இலக்குவனாரே. சத்தியம் என்பதனை உண்மை என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர். ஆனால் மூதறிஞர் இராசாசி ‘வாய்மை’என்பதே பொருந்தும் எனக் கூறினார். தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்று விட்டதால் உடனே அனைத்துக் கல்விநிறுவனங்களிலும் தமிழையே பயிற்சிமொழியாக ஆக்கவேண்டும் என இலக்குவனார் வலியுறுத்திய…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40 சின்னச்சாமி 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் சின்னச்சாமி என்பவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்ப்பற்று மிகுந்த அன்பர். அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பிற்கு உரியவராக…
