வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்
இவ்வுலகத்தினர் எல்லாரும் இருமைப் பயனும் எய்தி இன்புறுமாறு. எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றவாறு. வாழ்க்கைக்கு வழி வகுத்து அதில் நடந்தும் காட்டிய வள்ளுவர் தமிழ்ப் புலவருள் தலையாயார் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாம். இத்தகைய தலைமை சான்ற வள்ளுவரை, வேண்டுமென்றே ஆரிய வழியினராகக் காட்ட வேண்டி, பிராமணத் தந்தைக்குப் பிறந்தவராகக் கூறுவது ஒருசார் புறத் தமிழர் மரபு. இனி, இதற்கு எதிராக அவரை உயர்த்திக் காட்டுதற் பொருட்டு உண்மைக்கு மாறாய் உயர்வாகக் கருதப் பெறுகின்ற ஒரு குலத்தினராகக் கூறுவது, ஒருசார் அகத்தமிழர் மரபு….
வள்ளுவரும் அரசியலும் 6 – முனைவர் பா.நடராசன்
(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) பொருளும் இன்பமும் 2. இங்ஙனம் இன்பத்திற்கு வித்தாகப் பொருளுக்கு முதலிடம் கொடுத்து, அரசியலுக்குத் துணையிடம் வகுத்த முறையால் சில உண்மைகள் பெறப்படுகின்றன. அரசியல் உரிமை என்பதை விடப் பொருளாதார உரிமையே. தனி மனிதயின்பத்திற்கு வேண்டுவது. இதை குடிகட்காகச் சொல்லப்பெறும் ஒழிபியலில் விளக்க முயல்கிறார். ‘‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’’ என்கிறார். அரச அமைப்பும் சிறப்பும் 3. மேலும் இன்பக் குறிக்கோளுக்குத் துணைக்காரணமாயமையும் அரசியல்…
தமிழ் ஒருங்குகுறியில் மீண்டும் ஏற்படுத்தப்படும் குழப்பம்! -முனைவர் மா.பூங்குன்றன்
உலகெங்கும் பேசப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு. ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா. மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது. அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன….
யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – இ.பு.ஞானப்பிரகாசன்
யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்! இ.பு.ஞானப்பிரகாசன் வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள பெரிய கேள்வி. தெருவில் கிடக்கிற சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குரைத்துக் கொண்டே இருந்தால் என்ன ஏதெனப் பார்ப்பார்கள். ஆனால், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏறத்தாழ…
நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும்
இப்பொழுது (ஏப்பிரல் 24, 2014) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும் எனும் நோக்கில், தேர்தல் களம் அமைந்துள்ள சூழலை, உண்மை நோக்கில் பார்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது. இந்திய ஒன்றியத்தில் வாழும் மொழிவழி இனங்கள், எவ்வகையிலும் ஆளுமையுரிமை அடைந்துவிடக் கூடாது என்பதில், ஆரியம் (பிராமணியம்) கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகிறது. தனது கரவான நோக்கம் நிறைவேற, ஆரியம் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் சிறப்பாக எடுத்து செயற்பட்டு வெற்றியடைகிறது. இந்திய ஒன்றியத்தின் மறைந்த தலைமை அமைச்சர் மதிப்புமிகு வி.பி.சிங்…
பாவேந்தர் பாரதிதாசனின் ஆக்கங்கள்
1) அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம் 2) அம்மைச்சி, 3) அழகின் சிரிப்பு (கவிதை நூல்) 4) இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952) 5) இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944) 6) இரசுபுடீன் 7) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939) 8) இருண்ட வீடு (கவிதை நூல்) 9) இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967) 10) உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948) 11) உரிமைக் கொண்டாட்டமா? குயில் (1948)…
பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்
[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…
பாரதிதாசன் கவிதைகள் – வி.ஆர்.எம்.செட்டியார்.
பாரதிதாசன் கவிதைகளிலே நாம் உண்மையைக் காண்கின்றோம்; அழகை நுகர்கிறோம்; சக்தியை உணர்கிறோம். கவிதையின் படைப்பு எழிலை உணர்ந்து பாடும் பாரதிதாசன், எவ்வளவு சிறந்த உள்ள உந்துணர்வுடன் கவிதை பொழிகின்றார்! கவிஞர் எதையும் அனுபவித்தே எழுதுகின்றார். அவருடைய ஆழ்ந்த ஊழிய தமிழ்ச் சொற்கள், சிந்தனைகளைக் கவ்விச் செல்லும் சிட்டுக் குருவிகள்; குருவியின் கூரிய மூக்குப் போல அவருடைய மொழி கூர்மை பெற்றுவிட்டது. ‘‘அழகின் சிரிப்பு’’ என்ற கவிதை நூலின் தலைப்பே பட்டறிவு மொழியின் அதிகாரத்தை உவமை நயத்துடன் எடுத்துக் காட்டவில்லையா? அழகு…
வள்ளுவரும் அரசியலும் 5 – முனைவர் பா.நடராசன்
(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 06, 2014 இதழின் தொடர்ச்சி) தெரிந்து வினையாடல் தன் மாட்டு அன்பும் அறிவும் தனக்கென அவாவின்மையும், செய்ய வேண்டும் வினையில் துணிவுமுடையாரைத் தெரிந்து செயலில் ஈடுபடுத்த வேண்டும். அந்த வினைக்குந் தகுந்தவனை எவன் என்று கண்டு அவன் மாட்டு வினையின் ஒப்படைத்துவிட வேண்டும். சுற்றம் தழுவல் தனக்கு அதிகாரம் வந்துவிட்டதென்று இறுமாப்படைந்து, பழமையை மறத்தலாகாது. பழைய நண்பர்களைச் சுற்றமாகத் தழுவுதல் வேண்டும். பொதுநோக்கால் பயனில்லை. வரிசையால் அவரவர்க்கேற்ற முறையில் ஆதரவு தருதல் வேண்டும்….
புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம் – வெற்றிவேலன்
தமிழ் மகனே, திரைகடல் ஓடித் திரவியம் காண இருண்ட கண்டம் இலங்கை, பர்மர சென்றாய்; உழைத்தாய்; கல்லை உடைத்தாய்; பிற நாட்டின் முன்னேற்றம் கருதி மாட்டினும் இழிவாய் முனைந்து உழைத்தாய்! ஈட்டியதென்ன? இழி சொல் பகைமை காட்டி நின்றனர், உன் உழைப்பால் உயர்ந்தோர்! அயர்வைக் கருதாது வியர்வை சிந்தி உயர்வைக் கருதி உழைத்தாய் பிறருக்கு! உன்றன் நேர்மையை உணர்ந்த மற்றோர் குன்றா உழைப்பை உறிஞ்சி உயர்ந்தனர்; சாற்றைப் பிழிந்து சக்கை எறிவது உலகின் இயற்கை; பாலைக் கறந்து, பின் பசுவைக் கொல்லும் கயமை…
திருக்குறளில் உருவகம் 6 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 30, தி.ஆ.2045 / ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி) வெள்ளத்தைப் போல் நீருக்கடியில் உள்ள பாறையும் தீங்கின் சின்னமாகிறது. உள்ளதை மறைப்பாரின் ‘இல்லை’ என்ற சொல் நீரினுள் பாறையாகிறது. இரவென்னும் ஏமாப்புஇல் தோணி கரவென்னும் பார்தாக்கப்பக்கு விடும். ஊர்நடுவேயுள்ள குளத்து நீர் ஈவாரின் செல்வத்திற்கு உருவகமாகிறது. ஈயாது செல்வத்தைச் சேர்ப்போரின் உள்ளம் இக்குறளில் பாறையாக மாறிவிடுகிறது. இரத்தல் உடைந்த மரக்கலம்; இரந்து வாழ்பவன் இறைவனின் திருவடியைப் பற்றாது, உடையும் மரக்கலத்தைத் துணை கொண்டு, பிறவிப் பெருங்கடலைக் கடக்க…
பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன்
புரட்சிக் கவிஞர் என்ற பெருஞ் சிறப்புக்குரிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தாழ்ந்துபோன தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவனாகப் பவனி வந்தார். பழமைச் சமுதாயத்தைப் பாட்டால் பண்படுத்திய பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அடிமை வாழ்வினரை புரிய உலகு நோக்கி விரைந்துவர அழைத்தார். அவல வாழ்வினருக்கும் அஞ்சாமைத் திறன் ஊட்டினார். “இருட்டறையில் உள்ள தடா உலகம் சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே – வெருட்டுவது பகுத்தறிவு இலையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்” என்று குரல் கொடுத்தபிறகுதான் மருட்டுகின்ற மதத் தலைவரை விரட்டுகின்ற வீரமெல்லாம் தமிழ் மக்களுக்கு…