தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை
தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது என்பதே உண்மை மணிப்பிரவாள நடை முதலியவற்றால் தமிழ் ஆரியத்துக்கு முற்பட்ட தென்பது அங்கைக் கனிபோல் விளங்குகின்றது. தமிழ் ஆரியத்துக்கு முற்பட்டது எனக் கூறுவனயெல்லாம் உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக் குறைகூற வந்ததன்று -மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.230.
பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி
பழந்தமிழ் நிலமே உலகின் நடுப்பகுதி இத்துணை யாராய்ச்சியானே குமரிக்குத் தென்பால் பெரு நிலப் பரப்புஇருந்த தென்பதும் அது உலகிற்கு நடுமையாமென்பதும் ஆண்டிருந்தோர் தமிழரென்பதும் சிறந்த பல காரணங்களாற் பெறப்பட்டமை காண்க. – மாகறல் கார்த்திகேயனார் : மொழிநூல் (1913) ப.5
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.
தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது. திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல. – கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன்
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) (தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி) நிறைவு மணிமேகலையின் தாக்கத்தால் பொன்னரசி புத்தத்தைத் தழுவியதாகக் கூறிக் காப்பியத்தை முடிக்கிறார். தொடக்கத்தில் தமிழ்வாழ்த்து பாடியவர், மொழியையும் நாட்டையும் மக்கள் பண்பையும் வாழ்த்தி, புத்த முழக்கத்துடன், தென்மொழியும் தென்னாடும் தென்னர் பண்பும் செழித்துலகம் புகழ்பாட வாழி! வாழி! புத்தம் சரணம் கச்சாமி தருமம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி (மாங்கனி : 40. புத்தர் வழியில் பொன்னரசி) என நிறைவு செய்கிறார்….
சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்
சனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன். அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப்…
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு)
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 6 (நிறைவு) (மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) 10.5. இடைக்காடரது பாடற்கொடை — 54 கடுகைத் துளைத்[து]ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள் பொருள் உரை திருக்குறளின் சொற்சுருக்கத்தையும், பொருட்சுருக்கத்தையும் ஆய்ந்தால், கடுகின் நடுவே துளைபோட்டு, ஏழு கடல் நீரையும் அத் துளைவழி உட்செலுத்தி, அளவில் குறுகி இருக்கும்படித், தறித்து வைத்தது போன்ற வடிவினது திருக்குறள். நுட்பங்கள் சொல்: கடுகு கடுகு =…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி) அருகிய அயற்சொற்கள் அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார். செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7) கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4) சீவன் (மாங்கனி :38 சாகாத சித்திரங்கள் 9-1) .துட்டனும் (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.8) என்பன போன்று அயலெழுத்து நீக்கித்…
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ
ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர். ஆரிய திராவிட நாகரிகம். இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) தமிழ்த்தேசியம் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் முக்குலத்தவர் ஆட்சி செய்த நாடுதான் தமிழ்நாடு. எனினும் இனம் என வரும் பொழுது சேர இனம், சோழ இனம், பாண்டிய இனம் என இல்லாமல் தமிழினமாகத் தழைத்திருந்தனர். எனவேதான், தமிழ்த்தேசியத்தை உணர்த்தத் தமிழகம் எனச் சேர்த்தே புலவர்கள் பாடி உள்ளனர். இதை உணர்த்தும் வகையில், அரசால் மூவர் என்றாலும் இனத்தால் ஒருவரே என உணர்த்தும் வகையில், ” நாம்மூவர் ஆனாலும் ஒரும னத்தார்! நாட்டினில்வே…
இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.
இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க. இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை. கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான்! மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர். அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்…
விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!
விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா! காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் –…
இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்
இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார் பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை…
