சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 311-320 311. Acceptable ஏற்கத்தக்கது   ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோ திறனோ உடையது. ஏற்கத்தக்க ஒலி அளவு. மன்பதையில் ஏற்கத் தக்க நடத்தை.   இரு தரப்பும் ஏற்கத் தக்க இணக்கத் தீர்வு. நடைமுறை, செயல்முறை, அல்லது கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றல். 312. Acceptable reliability level ஏற்பு நம்பக அளவு   ஒரு பொருளின் நம்பகத் தன்மை குறித்த அளவு. 313. Acceptability ஏற்புத்திறன்  …

உ.வே.சா.வின் என் சரித்திரம் 90 : அத்தியாயம்-55 : சிறு பிரயாணங்கள்

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 89 : எழுத்தாணிப் பாட்டு-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-55 சிறு பிரயாணங்கள் நான் பட்டீச்சுரம் சென்ற பின் என் தாய் தந்தையர் சூரிய மூலையில் ஒருவாரம் இருந்துவிட்டு உத்தமதானபுரத்துக்குச் சென்று அங்கே என் சிறிய தந்தையார் முதலியவர்களுடன் வசிக்கலானார்கள். பட்டீச்சுரத்திலிருந்து ஒரு முறை என் ஆசிரியரும் ஆறுமுகத்தா பிள்ளையும் திருவலஞ்சுழி, ஆவூர், நல்லூர் முதலிய தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்கள். நானும் உடன் சென்றேன். நல்லூரில் சுவாமி தரிசனம் செய்த பிறகு ஆசிரியர் என்னைப் பார்த்து, “உத்தமதானபுரம்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர் – தொடர்ச்சி) தமிழர் வீரம்வீரப் புகழ்மாலை வீரமும் ஈரமும்தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தையும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். “பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு” என்பது அவர் கொள்கை. ஔவையாரும் செல்வரும்புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. “ஔவை வாக்குத் தெய்வ வாக்கு” என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி நெஞ்சே தொடர்ந்து வருக! ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும். நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது….

சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 301-305: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 306. Accelerator   முடுக்கி   முடுக்குப்‌ பொறி   விசை முடுக்கி   முடுக்குநர்   ஊர்தியில் காலால் அழுத்தி இயக்கும் முடுக்குப் பொறி.   ஒரு செயலை அல்லது குற்றச் செயலை விரைவாகச் செய்வதற்கு முடுக்கி விடுபவர். 307. Accent அசை அழுத்தம், ஒலி எடுப்பு   ஒருவருடைய நாடு, நாட்டின் பகுதி, குமுகாயப் பிரிவு, இனவழிக்குழு, இயற்கைச் சூழல் முதலியவை சார்ந்து அமையும்…

ஐந்திரம் தமிழ் நூலே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஐந்திரம் தமிழ் நூலே! தொல்காப்பியப் பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்னும் அடியில் குறிப்பிட்டுள்ள ‘ஐந்திரம்’ என்பது தமிழ் நூலே. இது குறித்த கருத்துகள் அடிப்படையில் இக்கட்டுரையைக் காண்போம். இலக்கணம் அறியார் இலக்கண நூலை எங்ஙனம் எழுதியிருப்பர்? ஐந்திரம் என்பதைச் சமற்கிருத நூலாகச் சிலர் திரித்துக் கூறுகின்றனர். அதை நம்பும் சிலரும் அவ்வாறே கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்திலோ அதற்கு முன்னோ சமற்கிருதத்தில் இலக்கண நூல் உருவாகவே வாய்ப்பில்லை. “ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் 161-180 161.       பொருள் மலர் – கட்டுரை : ஈ. த. இராசேசுவரி 1937 162.       ஆரோக்கியமும் தீர்க்காயுளும் 1937 – சுவாமி எம். கே. பாண்டுரங்கம்     163.       அகப்பொருளும் அருளிச் செயலும்  1938 – திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு   164.       வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 165.       தமிழர் திருமண நூல்   1939 வித்துவான் மா….

சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 296-300: இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 301-305 301. accelerated soil erosion விரைவான மண்ணரிப்பு   விரைந்த மண் அரிமானம்   மாந்தவியல் செய்முறைகள், மண், தாவரங்கள் அல்லது தட்ப வெப்ப நிலைகளை மாற்றியமைக்கும்போது இயல்புத் தன்மைக்கு மீறிய அரிமானம் நிகழ்கிறது. 302. Acceleration   முடுக்கம்   நடைபெற உள்ளதன் காலத்தைச் சுருக்குவதைச் சட்டம் முடுக்கம் எனக் குறிக்கிறது.   முன்னுறல் உரிமை முன்னுறல்.   எதிர்நோக்கும் உரிமை அதற்கு முன்னவர் செயற்பாடின்றிப்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 89 : எழுத்தாணிப் பாட்டு

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 88 : இராமசாமி பிள்ளை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்- 54 : எழுத்தாணிப் பாட்டு சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும் போது மிகவும் உற்சாகமாகவே இருந்தது. கலியாணமானபின் சவுளிக் கடைக்காரர்களும் மளிகைக் கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக்கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக் கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வர வர அதிகமாயிற்று. இதனால் மிக்க…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 16 : வீர விருதுகள்-தொடர்ச்சி) தமிழர் வீரம்அத்தியாயம் 14 : பேர் தெரியாப் பெருவீரர் தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்களில் வீரம் விளைத்தவர் எண்ணிறந்தவர். அன்னார் பீடும் பெயரும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் ஆண்மைக்குச் சில ஊர்களே சான்றாக நிற்கின்றன. பாலாற்று வென்றான்பாலாற்றங் கரையில் நிகழ்ந்த போர்கள் பலவாகும். அப் போர்களங்களில் பெருகிய செந்நீர் பாலாற்றில் சுரந்த தண்ணீரோடு கலந்து ஓடிற்று. அவ்வாற்றங்கரையில் வெம் போர் புரிந்து வெற்றி பெற்றான் ஒரு வீரன். அவனைப் “பாலாற்று வென்றான்” என்று…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 04. உள்ளுறை உவமம்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 03. நெஞ்சே எழு! ஒரு தொழிலைத் தொடங்குவார், அத்தொழிலை முற்றுப் பெற முடித்தல் வேண்டும். தொடங்கிய வினைக்கண் வெற்றி வாய்க்கும் வரை. உழைக்காது, அதை இடையே கைவிட்டு, வேறு ஒன்றில் கருத்தைச் செலுத்துவாராயின், அவர்க்குப் பொருட்கேடும் புகழ்க்கேடும் உண்டாம். அதனால் ஒரு வினையைத் தொடங்குமுன் அவ்வினையின் ஆற்றல், அவ்வினையைத் தொடங்கும் தன் ஆற்றல், அவ்வினை வெற்றிபெற முடியாவாறு இடைநின்று தடுக்கும் பகை ஆற்றல் ஆகிய அனைத்தையும் பல முறை…

தோழர் தியாகு எழுதுகிறார் : பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா?

(தோழர் தியாகு எழுதுகிறார் : வலியறிதல் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! ”பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்” என்ற தலைப்பில் செந்தழல் வலைப்பக்கத்தில் அன்பர் குமணன் எழுதியிருப்பதை தாழி மடல் 452இல் பகிர்ந்திருந்தேன். அதற்கான என் மறுமொழி:–::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா? உருநிலைச் சிக்கல்களுக்கு உருநிலைத் தீர்வுகள் (concrete solutions for concrete issues) என்பதுதான் என் அணுகுமுறை. இங்கே சிக்கல்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் செய்ய வேண்டியது என்ன? இதற்கு நான் முன்வைக்கும் உரு…