வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்
அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே! துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்
நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்
நாம் இரண்டல்ல ஒன்றெனச் சொல்லுங்கள். கடற்கோள்கள் பிரித்த தமிழாண்ட தேசங்கள்.. அடிமை தேசங்களாய்… அவனியில் இன்று.. ஆயினும் உணர்வழியா இனமாய்.. ஒன்றெனச் சொல்லுங்கள். உரத்துச் சொல்லுங்கள்.. எங்கள் இனம் இன்று ஒன்றானதென்று! இல்லை என பார்ப்பவர்கள் பகைவர்கள்! . பிரித்துப் பார்ப்பவர்கள் பித்தர்கள்…!! ஒன்றான மாந்தர் ஒன்றுபட்ட இனம்.. ஒற்றை தாய் மொழி.. கடல் பிரித்த தேசங்கள்.. இரண்டானாலும் தமிழினம் என்றும்… ஒரு குடி காண்! ஒற்றுமை ஒன்றே உயர்வெனக் கொண்ட வேற்றுமை இல்லா தமிழர் நாம்!.. ஒன்றே எம் இலக்கு. விடுதலை எம்…
எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன்
சிங்களன்நீ தமிழன்நான் தீங்கெமக்குச் செய்தாய்! சிங்களமே உன்நாடு! நாடெமெக்கு ஈழம்! கங்குலென்றும் பகலென்றும் பாராது நின்று காட்டினிலும் களத்தினிலும் கடுந்துன்பம் வென்று பொங்கிவரும் காட்டாறு போல்புலிகள் வருவார்! புத்துயிரை ஊட்டியினி புதுயீழம் பெறுவார்! மங்கிடாத புகழுடைய தமிழீழ நாடு மாவீரர் படைத்திடுவார் நடுங்கியினி ஓடு! முள்ளி வாய்க்கால் போர்முனையில் முழுவெற்றி என்றே மூர்க்கன்நீ முதிர்ச்சியின்றி முழங்குகிறா யின்று! கள்ளரைப்போல் வல்லரசர் களமாட வென்றாய்! கதறிநீயும் அழுதலறித் தோற்றோடி வீழ்வாய்! வெள்ளம்போல் மாவீரர் விளைகின்ற மண்ணில் வீணன்நீ வெகுவிரைவில் வீழ்ந்தழிவாய் எண்ணு! துள்ளுகின்ற சிங்களனுன் துடுக்குயினி…
எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை
முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும்…
“அகர முதல” கண்டு மலைத்தேன்.
“அகர முதல” விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துக்களுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்
ஈழத்தாயே பொறுத்திடு! – துயிலகா
ஈழத்தாயே பொறுத்திடு, தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு! தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை, நீண்டகாலம் நீடிக்காது, நிலைத்து நிற்போம் தமிழர் நாம்! முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம், இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம், ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை, சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை! சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள், நாங்களோ வாழ வழியின்றி வீதியில்! எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை, தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்! ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில், அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்! கேட்பார்…
இடர்கள் தந்தபோதும்…,எம் இலட்சியத் தாகம் தீராது – ஈழப்பிரியன்
அன்று…., கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை…., இன்று…, கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ …என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்…. அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ? என ஏங்கும் ஒருவன் அங்கே…! பிணமாய்க் கிடக்கும் ஒருவனுக்கு ……, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே…! தமிழன் அல்லவா…..? இறந்தும் அவன் பறவைகளுக்குத் தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த…
முள்ளிவாய்க்கால்
எங்கள் தேவதூதுவனின் இறக்க முடியாத சிலுவையைப் போல் என் மனக்கிடங்கினுள்ளும் அமிழ்ந்து கிடக்கும் பளுவையும் என்னால் இறக்க முடிவதில்லை! ஓட ஓட விரட்டப்பட்டோம் ஒன்றின் மேலொன்றாய்ப் பிணமாய் வீழ்ந்தோம் வீழ்த்தி விட்டோமென்ற வெற்றிக்களிப்பில் இன்று நீ வீழ்ந்து கிடக்கின்றாய்! பார் விழிகளில் நீர் வழிய வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம் கொடி ஏற்றி, கொலு வைத்து குடம் நிறைந்தது போலநிறைந்த நிறைந்த எம் வாழ்வில் குடியேற்றங்களுக்காய்க் காத்துக்கிடக்கின்றோம் அகதிகளாகி! அழகுதமிழ்ச் சோறும் ஆடிக்கூழுமுண்ட எங்கள் வாயினுள் பரிசென்று பால்சோறு திணிக்கின்றாய் நீ புசிக்கின்றோம்…
பொங்கி எழு தமிழா பொங்கி எழு! – கவிச்சிங்கம் கண்மதியன்
கரைக்காயைப் போன்றிருக்கும் ஈழ நாட்டில் கண்டைக்காய் என நினைத்துத் தமிழர் தம்மை வெறிநாயாய்க் கடித்திங்கே குதறி மாய்த்தான்! வெந்தணலில் இராசபக்சே குளியல் போட்டான்! அரக்கனந்தக் கொடியவனின் இலங்கை நாடா அமைதிபுத்தன் அறத்தினையும் போற்றும் நாடு? கரைமீதில் எழுந்தகடல் சுனாமி போல கயவனவன் மனிதநேய மாண்ப ழித்தான்! விண்மழையாய்க் குண்டுமழை கொத்துக் கொத்தாய் விழுந்ததடா அப்பாவித் தமிழர் மேலே! புண்மீது நெருப்பானான் இராச பக்சே! புத்தனுக்கே களங்கத்தைச் சேர்த்த ‘கோட்சே’! பெண்டிர்தம் கற்புமங்கே குரங்கின் கையில் பிடிபட்ட மாலையாகிப் பிய்ந்த தாச்சே! கண்விழித்துப் பூமி…
வீழ்ந்ததெல்லாம் விதை – உமா சுப்பிரமணியன்
சுய மண்ணைச் சுடுகாடாய், பிணப்பண்ணை ஆக்குகின்றான் சுண்டினால் சுருண்டு விடும் சுண்டைக்காய் தேசத்தான் சுழல் தெரிந்திருந்தும் சூறையாட விட்டு விட்டோம். கருவியோடு களமிறங்கிய காவல்தெய்வம் ஆயிரம் குருதியோட, கொலையுண்ட குடும்பங்களோ மாயிரம் நூறாயிரம் பொறுமையோடு பார்த்திருக்க பொம்மைகளா அழிந்தது? ஞாலத்து மக்களிலே ஈழத்துத் தமிழனின் இனம் செத்துக் குவிவதை தினம் பார்த்துக் குமைவதை விதியென்று விடலாமா தமிழனே முடிவொன்று முனைவோம் வா போராடத் துணிந்தெழுந்தான் புலிக்கூட்டம் வழிநடத்த அப்பாவித் தமிழர்களின் கொடும்பாவியைக் கொய்திட அர்ப்பணித்தான் வாழ்வெல்லாம் சமர்ப்பித்தான் சக குடும்பம் பிணம் தின்னும் கமுகனை,…
ஓ நந்திக்கடலே! – மட்டு மதியகன்
பார்வைக்காக விடப்பட்ட போர்க்கருவிகள் பாரிலிருந்து வந்த இராணுவ மேதைகள் மலைத்துப் போயினர் கொள்ளிக்கட்டைகளாக அள்ளி அடுக்கப்பட்ட வித்துடல்களைச் சுமந்த இயந்திர வண்டி கொலைகாரக்கொடியவன் இளம் பெண்ணை இழுத்து வருகிறான் நிருவாணமாக வீரமாது வித்தாகி விழுந்து கிடக்கிறாள் படிந்த குருதியோடு ஈரேழு வயதான எங்கள் பாலகன் பசியால் ஏதோ சுவைக்கும் புகைப்படம் பிஞ்சி மார்பில் பஞ்சு ரவை வேட்டுககள் ஏந்தியபடி வீரமரணம் போர் வீரர்கள் அடுக்கப்பட்டுகிடக்கும் அநியாயமான காட்சி இறந்த மங்கையின் மார்பில் நல் குலம் பெறாத நாசிக்காரன் காலை ஊன்றிய புகைப்படம் உயிருக்காய்ப் போராடும்…
கனவோ நனவோ – கிரிசாசன்
கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக் காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம் புண்பட உள்ளமும் நோகும் – தேகம் புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும் விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான வீதியிலே எங்கும் கேட்பது போலும் எண்ணம் பிரமித்து நிற்கும் – அங்கே என்ன நடந்தது காணவிழைந்தேன் நட்ட நடுநிசி நேரம் – ஒரு நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன் கொட்டும்மழை பெய்தபின்பு – பனி கூதலிடப் புகைபோலும் நிசப்தம் வட்டமதி மேலே நிற்க – அதன் வீசுமொளிதனில் சென்ற இடமோர் வெட்ட வெளிப்பிரதேசம் –…
