“மொழிகாக்க உயிர் நீத்த தமிழ் மறவர்கள்”
ஆதிக்க இந்தி, தமிழ்வேரில் கொதிநீர் ஊற்றிய கொடுமையைக் கண்டு சிறையில் மாண்ட வீரச்செம்மல் “நடராசன்!” இந்தி எனும் தேள் தமிழன் தோள் மீது ஏறுவதைக்கண்டு அதை நசுக்கிட எழுந்தான் “தாளமுத்து!” அவன் சிறையில் மடிந்த தமிழ்ச்சொத்து. இந்தியை எரிக்க தன்னுடல் எரித்த முதல் நெருப்பு “கீழப்பழுவூர் சின்னச்சாமி!” இவன்தான் நெருப்புக்குத் தமிழை அறிமுகம் செய்தவன்! தமிழுக்காக தீயைத் தீண்டியது “சிவலிங்கத்தின்” சந்தன உடல்! அது இந்தியை எரிக்க, செந்தீயைத் தின்றது. தமிழைக் காக்க தன்னுடலைத் தீயாக்கி, “இந்தி”யப் பேயைப் பொசுக்க, உயிரைச் சிந்திய தீரன்……
பொங்கல் வாழ்த்து
பாரினில் எங்கும் மக்கள் பலநலம் பெற்று வாழ சீரிய வழியில் எல்லாம் சிறப்புகள் மேன்மே லோங்க மார்கழித் திங்கள் சென்று மலர்ந்த தைத்திங்கள் நாளில் ஆர்வமோ டளித்தேன் இந்த அணிமிகு பொங்கல் வாழ்த்தை! – புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி புள்ளியியல் அலுவலர்(ஓய்வு) தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம் திருவொற்றியூர் பாரதிப்பாசறை துணைத்தலைவர், சோழர் கலாலயம், இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்
செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…
எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!
குறள்நெறி ஓங்கி குடியர சுயர்ந்து பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழியர் வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க உழைப்பே உயிரென உலகுக் குணர்த்தும் பொங்கற் புதுநாள் பொலிவுடன் சிறக்க எங்கும் இன்பம் இனிதே பொலிகவே. – செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !
உலகின் வடிவம் உருண்டை என்பதை உருபெரும் அறிவியலாளர் கலிலியோ கூறினார் கலிலியோ கூற்றை கண்கண்ட நாடுகளுக்கு கருத்துரையாகப் பரப்புரை செய்தார் ஆனால் ஈராயிரத்து ஐநூறுக்குமுன்னே சீராயிரம் படைத்த இருவரிமறை ஆசான் திருவள்ளுவப் பெருமகன் உருவான உலகம் உருண்டை என்றே இருவரியிலே உலகிற்கு இயம்பினார் அன்றே ! ” சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் ; அதனால் உழந்தும் உழவே தலை ” என்றாரே படித்தனர் ஆயினும் பரப்புரை செய்தனரா ? பிறநாட்டார் சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே ! சுழலும் உலகம்கூட உழவரின் பின்செல்லும் நிழலாக இருக்கிறதென …
வெல்வீர் இனி… – புதுவைத் தமிழ்நெஞ்சன்
மதுவிலக்கு மாணவப் போராளிகள் நந்தினி, சோதிமணி….. தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது தமிழினத்தைச் சிந்திக்காது செய்வதற்கே மதுபோதை- அடடா திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும் தீயபாதை சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு மானமுள்ள தமிழனென்று உலகிற்குக்…
இயற்கை எழில் !
வான்மிதந்து சென்றடையும் கதிரவனைத் தான்தழுவி ஒளிஉமிழும் தண்நிலவில் கண்நிறைந்த காட்சிகாண கடல்வெளியில் மண்மீது படுத்தேன்என் கண்முன்னே தொங்கிச் சுழலும்இப் பூமிப்பந்தில் தங்கிவாழும் மக்கள்குலம் தழைக்க பொங்கிவழியும் அழகுடன்நம் பூமித்தாய் இங்கிருக்கும் மக்களுக்கே படைத்தாள் குறிஞ்சிமுல்லை குறையாத மருதத்துடன்நாம் அறிந்த நெய்தல்பாலை எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை அழகுடன் பார்த்தேன் மூவகைத் தமிழுடன் முத்திரைபதித்து பாவகையுடன் பைந்தமிழ்ப் புலவர்கள் பாடக்கேட்டேன் இயற்கை எழில்பற்றி ! எங்கு பார்க்கினும் மக்களெல்லாம் பொங்கும் மகிழ்ச்சியால் பூரித்ததையும் வறுமையைப் புறந்தள்ளி வாழும் வளமையும் கண்டேன் நாட்டில் ! இயற்கை அன்னை …
என் தாய்
– திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன் 92802 53329 தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன் தன்னலச் சேற்றினில் மாயேன்! கோயிலில் உறையும் கொற்றவை போலே குடியினைக் காப்பவள் நீயே! சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்! செல்வமே பிள்ளைக ளென்றாய்! ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்! உனக்கிலை ஒருவரு மீடே! பற்பல தெய்வம் படைத்தன ரெனினும் பண்புடை தாய்முதற் தெய்வம் நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய் நல்லறப் பேற்றினால் பெற்றேன்! வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின் விழைவது அம்மையே…
தமிழைப் போற்ற வாருங்கள்!
– இளவல் அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம்…
சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!
சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :- தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…
புதிது புதிதாய் சிந்தனை செய்
-கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் – நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் – நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, மேல் ஏறுவதில்லை. புதிது உள்ளது சிறத்தல் வளர்ச்சியின்…
கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!
– திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன் விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்! வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்! அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்! ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்! பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள் பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்! எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும் ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்! வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா? எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும் இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே! பறித்தவாழ்வை யார்தருவார்? பாவிகளே! பிள்ளை பெற்றவளின் வயிறெரியப் பச்சை மண்ணைச் சுட்டீர்!…