புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.51-55

(இராவண காவியம்: 1.2.46-50 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் பாலை   51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார் படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய் வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால் அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே. 52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின் திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர் விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே. தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக் கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன் ஆட்டிநீ ‘பிரிக்கலை’ யென் றவ் வன்னையை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.46-50

(இராவண காவியம்: 1.2.41-45 தொடர்ச்சி)   இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை & பாலை கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான் குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர் முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால்,   பாலை எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும் பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம். வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும் துற்றிய…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.41-45

(இராவண காவியம்: 1.2.36-40தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச் சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர் பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும் முல்லையம் புறவடர் முல்லை காணுவாம். பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும் பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந் தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல் ஆவின மொருங்குற வருக ணைக்குமால். மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர் கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட் டக்கறைக் கொண்டு பார்ப் பணைக்கும் பேடையைக் கொக்கரக் கோவெனக்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40

(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் குறிஞ்சி 36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும் துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும் மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே. 37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங் கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற் றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர் கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர். 38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்; குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35

(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம்…

ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 18 நாடக இலக்கியம் தொடர்ச்சி   4 ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாடகத்தைக் கவிதை வகைகளுள் ஒன்றாகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருகின்றனர் போலும். இதனால் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள்பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழியுண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பாநாடகம் என்று…

ஈழத்து நாடக இலக்கியம் தொடர்ச்சி – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

  (முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 17 நாடக இலக்கியம் தொடர்ச்சி இயற்பண்பு சார்ந்த நாடக நெறி பேராசிாியர் கணபதிப்பிள்ளைக்குப் பின் இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒரு பிாிவினர் பேராசிாியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்களைத் தயாாித்தனர். நூலுருவம் பெற்ற அசட்டு மாப்பிளை இதற்கு உதாரணமாகும். இது தவிர புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவன், கலாட்டா காதல், ஆச்சிக்குச் சொல்லாதே, இலண்டன் கந்தையா, புளுகர் பொன்னையா ஆகியவையும் இத்தகைய நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். வரலாற்று, சமய, இதிகாச,…

ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 16 நாடக இலக்கியம் தொடர்ச்சி 2   ஆங்கிலக் கல்வி சிருட்டித்துவிட்ட மத்தியதர வருக்கத்தின் ஒரு பிாிவினர் மேனாட்டு மொழிபெயர்ப்பு நாடகங்களையும் புராண இதிகாசக் கதைகளையும் கையாண்டு நாடகத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாகக் கொள்ள இன்னொரு பிாிவினர் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வளம் ததும்பிய சமூகநாடகங்களை நாடக உலகுக்கு அளித்தனர். இவர்களே ஈழத் தமிழ் நாடக உலகில் இயற் பண்பு வாய்ந்த நாடக நெறி ஒன்றினை உருவாக்கினர். இவர்கள் கையில் நாடகம் வெறும் பொழுதுபோக்குச்…

இராவண காவியம்:பாயிரம்: புலவர், அரசர்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 11-15 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 16-20 16.ஒருது ளிகடு வுண்ணினும் பால் கெடும் பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம். புலவர் 17.பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய் துலக மின்புற வோதியுந் தாய்மொழிக் கலகி லாததொண்டாற்றிய முத்தமிழ்ப் புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம். 18.மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும் யாப்பி யற்படி நூல்செய் தனித்ததொல் காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம். வேறு…

ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 15 6. நாடகம்  ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகங்களும் நவீன நாடகங்களாகும். மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது.  ஈழத்தில் நாடக…