சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 2

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி) காட்சி இரண்டு வால்மீகி ஆசிரமத்தில் சீதை அடைக்கலம்  [இடம்: கங்கை யாற்றின் தென்கரை ஓரம்.  நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதை, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]  [அரங்க அமைப்பு: தேரில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை யாற்றைக் கடந்து இலட்சுமணன், சீதை ஆகியோர் கரையோரத் தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதையின் ஆடை,   ஒப்பனை, அணிகலன் பேழைகளைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 1

நாடகப் பாத்திரங்கள்: சீதை, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர், அனுமான், பத்து அல்லது பன்னிரண்டு அகவைச் சிறார் இலவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்…. [தொடக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்] முதலாம் காட்சி சீதை நாடு கடத்தப்படல்   இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை, நேரம்: பகல் வேளை. பங்கு…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை

[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…

‘தாய்வீடு’ இதழ் வழங்கும் அரங்கியல் விழா

‘தாய்வீடு’  இதழ் வழங்கும் அரங்கியல் விழா எதிர்வரும் 2045, ஐப்பசி 1, 2 (ஒக்டோபர் 18ஆம் 19 ஆம்) நாள்களில் 1785 ஃபிஞ்ச்சு நிழற்சாலையில் (Finch Avenue) அமைந்திருக்கும் யார்க்கு உடு (York wood) கலையரங்கில், மூன்று நாடகங்கள்:   கே. கே. இராசாவின் நெறியாள்கையில் ‘தீவு’   ஞானம் இலம்பேட்டின் நெறியாள்கையில் ‘காத்திருப்பும் அகவிழிப்பும்’   பொன்னையா விவேகானந்தனின் நெறியாள்கையில் ‘சுமை’ ஐப்பசி 1, 2045 / அக்.18 ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் ஒன்று முப்பதுக்கும் ஆறு மணிக்குமாக இரண்டு காட்சிகள்,…

செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013

மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது :  நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…

இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்

இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்   –  சு.கிருட்டிணன்  காட்சி – 1  சேரன் : டேய்! சேந்தன் என்ன இது புது மிதிவண்டியா? அருமையாக இருக்கிறதே! எப்பொழுது வாங்கினாய்? சேந்தன்   :நேற்றைக்குத்தான்! எங்க மாமா எனக்குப் பிறந்த நாள் பரிசாக வாங்கித் தந்திருக்கிறார்.