சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17: பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! உள் இலோர்க்கு வலியாகுவன்கேள் இலோர்க்குக் கேளாகுவன்                புறநானூறு 396 : 10-11 பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.திணை: பாடாண்.துறை: கடைநிலை. மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான். உள் = மனவெழுச்சி (ஊக்கம்). வலி = பற்றுக்கோடு (ஆதரவு), வலிமை. கேள் = உறவு. வாட்டாறு என்னும் பெயருடைய ஓர் ஊர்…

நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!   – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை –  தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி : 11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர். நாலடியார், அறிவுடைமை, 243 சொற்பொருள் : கொன்னாளர் = கரிசாளர் (பாவிகள்) ; காழ் = விதை; எனவே, காஞ்சிரங்காயின் /காஞ்சரங்காயின் விதை எனலாம். காஞ்சரஞ்காய் என்பது பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டி…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 : மக்களுக்குத் தேவை நல்லாட்சி!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 மக்களுக்குத் தேவை நல்லாட்சி! “அரசுமுறை செய்க களவில் லாகுக”         – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார்திணை: மருதம்சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார். அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி) பூங்கொடி           எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன்,               அருளறம் பூண்டது குறளகம், ஆதலின்   290           தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்;  ஒருதலைக் காமம்           நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும் பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி ஆடவர் திரியின் யானென் செய்வல்?     —————————————————————           முரணினர் – மாறுபட்டனர், உரி – தோல்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 : நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!  “நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்”         – புறநானூறு, பாடல் எண்-3, அடி 14. பாடியவர்: இரும்பிடர்த் தலையார்பாடப்பட்டோர்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதிதிணை : பாடாண்துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும் வழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியை அடையும்வழி           `வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள் பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி                   ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில்    235 —————————————————————           எய்யாது – சளைக்காமல், ஒய் – விரைவுக்குறிப்பு. ஒல்கா – அடங்காத, கனல – எரிக்க. ++++++++++++++++++++++++++++++++++++++++           குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு, பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி நழுவா வகையில் நயந்துரை…

நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன  செய்க! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை எனக்குத்தா யாகியா ளென்னையீங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள்–தனக்குத்தா யாகி யவளு மதுவானாற் றாய்தாய்க்கொண் டேகு மளித்திவ் வுலகு -நாலடியார், இளமை நிலையாமை 15 பொருள்: எனக்குத் தாயானவள் என்னை விட்டுத் தன் தாயைத் தேடிச் சென்று விட்டாள். அவளும் தன் தாயைத்தான் தேடிச் சென்றுள்ளாள். அதுபோல் வழிவழியே முன்னவரைத் தேடிச்செல்லும் நிலையாமையை உடையது இவ்வுலகு….

சங்கப்புலவர்கள்பொன்னுரை – 12 : அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! –தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 12 அறநெறியே ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படை!  “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”                     – புறநானூறு  55, 10. திணை :  பாடாண்திணை துறை : செவியறிவுறூஉ பாடியோர் : மதுரை மருதன் இளநாகனார் பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்  (இம்மன்னன் குறித்துச் சங்கப்புலவர்கள் பொன்னுரை – 2 இல் குறித்துள்ளோம்.) கொற்றம் என்றால் வெற்றி என்று பொருள். அரசியலாட்சி என்றும் பொருள். ஆனால் அரசின் கொற்றம் என வருவதால் இங்கே அது…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்-தொடர்ச்சி) பூங்கொடி வஞ்சியின் எழுச்சியுரை           கருதிய காதற் களந்தனில் நீதான்           ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180           காதல் எளிதெனக் கருதினை போலும் சாதல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி; நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை             தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின்    185           ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ? நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம் எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது? மறுத்தும் வெறுத்தும்…

நாலடி நல்கும் நன்னெறி : 9 இளமையிலேயே நல்லன  செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 8 : காமவழி செல்வோர்க்கு ஏமவழி யில்லை  – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 9. இளமையிலேயே நல்லன  செய்க! தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார், இளமை நிலையாமை 14 பொருள்: கூன் விழுந்து உடல் தளர்ந்து தலை நடுங்கிக் கைத்தடி ஊன்றி வாழும் இம் மூதாட்டி முன்பு இவள் தாய் மூதாட்டியாக இருக்கும் பொழுது இளமை நலம் திகழப் பிறர்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! – இலக்குவனார்திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11  யார் யாரையோ இணைப்பது அன்புதான்!  “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”               – செம்புலப் பெயனீரார்               – குறுந்தொகை : பாடல் 40 பொருள்: யாய்=என் தாய்;…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்

( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 92 : வஞ்சியின் வஞ்சினம்- -தொடர்ச்சி) பூங்கொடி 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை கோமகன் நிகழ்ந்தன கூறல்           இழுக்கல் நிலத்திடை இடர்ப்பட் டேகுவோன்            வழுக்கல் தவிர்க்க வாய்த்தகோல் இவளென  135           வஞ்சிக் குரைப்போன், முகுந்தன் வாய்மொழி தன்செவி கேட்டுத் தென்புலப் பொழிலுட் பூங்கொடி காண்பான் போய்ப்புகுந் ததூஉம், தாங்கா வேட்கை தாங்கவோன் றன்னைக்                கண்டு வெரீஇக் கற்றோர் பலர்தாம்       140           மண்டும் படிப்பகம் மங்கைபுக் கதூஉம், மெல்லியல் அல்லியை…