சந்தனத் தமிழன்

  – கவிஞர் முருகு சுந்தரம் அமிழ்தமாம் தமிழைக் காக்க ஆருயிர் நெருப்பில் தந்த தமிழவேள் சின்னசாமி தமிழர்க்குப் பெரிய சாமி! உமியினைப் போன்று மக்கள் உலகினில் பலபேர் வாழ இமயத்தைச் சிறிய தாக்கி இவன் புகழ் எழுப்பி விட்டான்! மக்களும் மறவன்; ஆட்டு மந்தையில் பிறந்த வேங்கை. தக்கைகள் நடுவே மின்னும் தனித்தவோர் தங்கக் கூர்வாள்; சக்கைபோல் தமிழ ருக்குள் சந்தனத் தமிழன்; அஞ்சிப் பக்கத்தில் பதுங்கி டாமல் பாய்கின்ற சிங்கக் குட்டி. கொழுந்துவிட் டெரியும் தீயில் குந்திய அப்பா அன்று செழுந்தமிழ்த்…

செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி

  – கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…

கை வீசம்மா கை வீசு! – இளவல்

கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! ஆடை வாங்கலாம் கை வீசு!…

அச்சம்

                                                  கல்வியாளர் வெற்றிச்செழியன் paventharthamizhpalli@gmail.com   அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால்             உதுவும் நடக்குமா ! அஞ்சி நாமும் முடங்கிவிட்டால்             உயிரும் நிலைக்குமா !   அச்சம் உள்ள நிலையினிலே             அமைதி கிடைக்குமா ! அஞ்சி வாழும் மக்களிடை             மகிழ்ச்சி தோன்றுமா !   அச்சம் பெற்ற மூளையிலே             அறிவு மலருமா ! அஞ்சி வாழும் அடிமையரின்             கொள்கை பிழைக்குமா ! அச்சம் கொண்ட உறவினிலே             உண்மை இருக்குமா ! அச்சம் உள்ள உயிர்களிடை…

சடுகுடு – வெற்றிச்செழியன்

  சடுகுடு ஆட்டம் ஆடு – நம்                 உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ சடுகுடு என்றே பாடு – நம்                 மண்ணை மீட்டிடப் பாடு – 2    (சடு) சடுகுடு பாடி ஆடி – நீ                 சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு படபடவென்றே பாடு – நம்                 பகையினைக் களத்தினில் வீழ்த்து – 2        (சடு) எட்டிச்சென்றே பாடு – நீ                 எதிர்ப்படும் எவரையும் தீண்டு தொட்டுச் சென்றே விரட்டு – தன்                 தோல்வியை அவரிடம்…