சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097 (கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

சட்டச் சொற்கள் விளக்கம்  181-185: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 176-180-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  181-185 181. absence of injury காயமின்மை   காயம் இல்லாமை என்பது வலியின்மை ஆகாது.   காயமின்மை பாதுகாப்புச் சூழல் இருப்பதைக் குறிப்பதாகாது.   வயது வராச் சிறுமியின்/ பெண்ணின் உடலில் வெளிக்காயமோ உட்காயமோ இல்லாதிருப்பது கற்பழிப்புக் குற்ற வழக்கை விலக்குவதற்குக்காரணமாகாது என ஒரிசா நீதிமன்றம் தெரிவித்துள்ளத.(பிரபுலா முண்டாரி /Prafulla Mundari மேல் முறையீட்டு வழக்கு, 20120) 182. Absence of motive உள்நோக்கம் இன்மை   குற்றச்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46 – தொடர்ச்சி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம் – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-46 – தொடர்ச்சி “என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்த போது சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக் காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங் கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விசயங்களைப் பேசினார். எனது…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் – தொடர்ச்சி) தமிழர் வீரம்மான வீரம் மானங் காத்தான்மானமே உயிரினும் சிறந்ததென்பது தமிழ்நாட்டார் கொள்கை. “மானங் கெடவரின் வாழாமை முன் இனிதே” என்றார் ஒரு தமிழ்ப் புலவர். எனவே, மானங் காத்த வீரனை மனமாரப் போற்றும் வழக்கம் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் உண்டு. நாட்டின் மானத்தைக் காத்தருளிய வீரன் ஒருவனுக்கு “மானங் காத்தான்” என்ற பட்டம் சூட்டிய நாடு தமிழ் நாடு. அவன் பெயரைத் தாங்கிய ஊர்கள் இன்றும் பாண்டி…

வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்

(வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 5. சொல்லும் செயலும் மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண்ணங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம் உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும். வடமொழியில் வழங்கும்…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 176-180

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 176-180 176. Absconding person தலைமறைவாயிருப்பவர்   காண்க: Absconder — தலைமறைவானவர் 177. absconding to avoid summons அழைப்பாணை தவிர்ப்புத் தலைமறைவு   அழைப்பாணையைத் தவிர்க்க தலைமறைவாகுதல் எனப் பொருள்.   இ.த.ச. பிரிவு 172, அழைப்பாணை அல்லது பிற வழக்கு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருத்தலைப்பற்றிக் கூறுகிறது. 178. Absence     வராமை   வாராதிருத்தல்   ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றின்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு – தொடர்ச்சி) பூங்கொடி அரங்கின் தோற்றம் பொய்யும் புளுகும் துணையாய் வாழ்வோர், தெய்வப் பெயரால் தீங்குகள் இழைப்போர், பதுங்கி நின்று பார்த்தனர்; பூங்கொடி           ஒதுங்கிநின் றாரும் உணரும் வகையால்     70           விளக்கி உரைத்தனள், வீணுரை யின்றித் துளக்கம் இலளாய்த் தொகுத்தும் வகுத்தும் இடையறா தருவி இழிதரல் மான நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை                பொழிந்தனள்; மக்கள் புதுமழை கண்டு     75           விளைந்தெழு பயிர்போல் விம்மிதம் கொண்டனர், குளிர்ந்தனர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) குழந்தையைத் தானே சுமந்துபெற்று வளர்ப்பதால், தாயானவள் தந்தையினும் மேல்.பிறந்த நாடும்சுவர்க்கத்தினு மேலானவை ★ (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 171-175 171. Abscondence தலைமறைவு அஞ்சியொளிதல்    ஒருவர் தமது உறைவிடத்திலோ வெளியிடத்திலோ பதுங்கியிருத்தல் அல்லது சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிந்திருத்தல் 175. Absconder தலைமறைவானவர் பதுங்கியவர் அஞ்சியொளியுநர்   நீதிமன்றப் பிடியாணையின் செயல்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு மறைந்து வாழ்பவர்.   (அஞ்சியொளியுநர் பற்றிய வெளிப்படை அறிவிப்பு குறித்து, கு.ந.ச.தொகுப்பு, பி. 82 கூறுகிறது.) 173. Absconding தலைமறைவாகுதல் அஞ்சியொளிதல்    அல்லது அழைப்பாணை பெறுவதில் இருந்து தப்பித்தல்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-46 இரட்டிப்பு இலாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில்ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள்திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும்உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டியவத்திரங்களும் நாங்கள் எடுத்துக் கொண்டு போனவை. மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது.“அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனைஎடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக் கொள்ளும்” என்று அவர்சொன்னார்….

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள் – தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் பேராசைபகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவில்லை; அகில மெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீதிலே ஆணை செலுத்த விரும்புவர்; கடலாட்சி பெற்ற பின்னர் வான வெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். “ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை“1 என்றார் ஒரு தமிழ்க் கவிஞர். பாரதப் போரும் தமிழரசும்மண்ணாசை பிடித்த மன்னர் வாழும்…

வள்ளுவர் சொல்லமுதம் 8 :  அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும்

(வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அத்தியாயம் 6 விருந்தும் மருந்தும் ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்பது தமிழில் வழங்கும் திருந்திய பழமொழி. தொன்று தொட்டு விருந்தும் மருந்தும் தொடர்புடையனவாகவே விளங்கி வருகின்றன. ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’, என்பார் அருந்தமிழ் மூதாட்டியார். தெய்வப் புலவராகிய திருவள்ளுவரும்,” விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.” என்று விருந்தையும் மருந்தையும் பொருந்தவே தெரிந்து கூறினர்.விருந்து என்னும் சொல்…