நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 28. பெரியோரைப் பிணித்துக் கொள்க! அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு. – நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173 [அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரைஉறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.] கருத்துரை: அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை. இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது. எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர். பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில்…
வெருளி நோய்கள் 1336 -1340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1331 -1335 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1336 -1340 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
வெருளி நோய்கள் 1331 -1335 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1326 -1330 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1331 -1335 தூக்கு வண்டி(bucket truck, or boom truck) தொடர்ந்த அளவு கண்ட பேரச்சம் தூக்கு வண்டி வெருளி.வாளி வண்டி என்றால் தண்ணீர் வாளிபோல் எண்ணுவர். மேலே ஏற்றி பணியாற்ற உதவுவதால் ஏற்றி என்று சொல்லலாமா? அப்படியானால் கட்டடம், கம்பம் போன்றவற்றின்மீது ஏறுவதற்கு உதவுவது எனப் பொருள் வரும். வாளி போன்ற தாங்கியைத் தூக்கி உயர்த்துவதன் மூலம் அதில் உள்ளவர்கள் மின் கம்பம் முதலான உயரப்பகுதிகளில் அவற்றில் ஏறாமலேயே பணியாற்ற முடிகிறது….
வெருளி நோய்கள் 1326 -1330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1321 -1325 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1326 -1330 துன்பம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துன்ப வெருளி.துன்பத்தினால் வரும் வருத்தத்தையும் இது குறிக்கும். எனினும் மன வருத்த வெருளி(Lypiphobia) எனத் தனியாக உள்ளதால், இதனைத் துன்ப வெருளி என்றே சொல்லலாம்.எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!எனப் புதிய பறவையில் கண்ணதாசன் பாடல் இடம்பெறும்.இது துன்ப வெருளியின் வெளிப்பாடே.அதுபோல்எங்கே நிம்மதி நிம்மதி என்றுதேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லைஎன மற்றொரு…
வெருளி நோய்கள் 1321 -1325 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1316 -1320 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1321 -1325 துருக்கியர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் துருக்கிய வெருளி. துருக்கியர், துருக்கிய மொழி, துருக்கியர் கலை, துருக்கியர் பண்பாடு, துருக்கிய நாடு, தொழில், விளை பொருள்கள், துருக்கிய அரசியல் முதலானவற்றைப் பேரிடர் தருவதாக எண்ணிப் பெரு வெறுப்பும் மிகு அச்சமும் கொண்டிருப்பர் இத்தகையோர். 00 கருவாய் துழாவுதல்(cunnilingus) தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் துழாவு வெருளி.cunnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பெண்குறி. lingere என்னும் இலத்தீன் சொல்லின்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும்
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 1051. Apprentice at law பயிற்சி வழக்குரைஞர் வழக்குமுறைப் பயிலுநர் பயிற்சிச் சட்டம், 1961 இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது. 1052. Apprenticeship பயிற்சிப் பருவம் பணிப்பயிற்சி தொழிற் பயிற்சிநிலை மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது,…
வெருளி நோய்கள் 1311 -1315 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1306 -1310 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1311 -1315 ஊர்திகளில் முகப்புக் கண்ணாடியில் மழைநீரைத் துடைப்பதற்காக உள்ள துடைப்பி (wiper) மீதான அளவுகடந்த பேரச்சம் துடைப்பி வெருளி.shua என்னும் சீனச்சொல்லிற்குத் தூரிகை, துடைப்பி என்று பொருள்கள்.00 துணிமணிகள் அடுக்கம்(clothing rack) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துணிமணி அடுக்கம் வெருளிஇத்தகையோர் துணிமணிகள் அடுக்கத்தில் துணிமணிகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படவில்லை என்பதுபோன்ற கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.காண்க: உடைப் பேழை வெருளி(Vinitophobia)00 துணி உலர்த்தி(clothes dryer) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் துணி உலர்த்தி வெருளி.சரியாக…
நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27 அறநெறி அறியுங்கள்! அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். [அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய் சொல்.] நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172 பதவுரை: அறம் = அறத்தின்; நெறி =…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : 3 இந்தி எதிர்ப்பு நிதிக்கு இசுலாமியப்பெண்களும் நிதி வழங்கியமை, மே்டையைச் சரிசமமாகப் பகிர்ந்த பெண்கள், பெண்கள் திரளாகப் பங்கேற்ற ‘தமிழ்நாடு தமிழருக்கே’ ஊர்வலம், எல்லா வடிவத்திலும் எல்லா இடத்திலும் பெண்களின் இந்தி எதிர்ப்பு, முதலியவைபற்றியும் இக்கட்டுரையில் விவரித்துள்ளார். இக்காலத்தில் பெண்கள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால், அப்பொழுது பெண்களே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளனர்…
வெருளி நோய்கள் 1306 -1310 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1301 -1305 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1306 -1310 தீவுபற்றிய காரணமற்ற, தேவையற்ற பேரச்சமே தீவு வெருளி.வாய் வாள்வலம்படு தீவின் பொலம் பூண் வளவன்என எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் புறநானூற்றில் (397:21-2) தீவு குறித்துக் குறிப்பிடுகிறார்.பொலம்படு தீவிற்குஎனப்பொன்மலிந்துள் தீவைப் பெருங்கதை (நரவாண காண்டம் 1.2.) கூறுகிறது.பொன் நிறைந்த தீவு மேல் ஆர்வம் ஏற்படுவதுபோல் அதனை அடைவதில் அச்சம் ஏற்படுவதும் இயற்கைதானே! Insula என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தீவு.00 மூச்சுடன் கரித் தூளைக் கலந்து இழுப்பது குறித்த மிகையான பேரச்சம்…
