வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

    உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன்.   பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச்…

தெய்வமாக விளங்குவீர் நீரே ! – பாரதியார்

  இரும்பைக்  காய்ச்சி உருக்கிடுவீரே ! இயந்திரங்கள்  வகுத்திடுவீரே ! கரும்பைச்  சாறு  பிழிந்திடுவீரே ! கடலில்  மூழ்கி  நன்முத்தெடுப்பீரே ! அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல் ஆயிரம்  தொழில் செய்திடுவீரே  ! பெரும் புகழ்  நுமக்கே  இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு  நீரே !!   மண்ணெடுத்து  குடங்கள்  செய்வீரே ! மரத்தை வெட்டி  மனை  செய்குவீரே ! உண்ணக்  காய்கனி  தந்திடுவீரே ! உழுது  நன்செய்ப் பயிரிடுவீரே ! எண்ணெய்  பால்  நெய்  கொணர்ந்திடுவீரே ! இழையை  நூற்று  நல்லாடை  செய்வீரே…

பொங்கி வரும் மேநாள் – தமிழ் ஒளி

  “கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக் கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!” “மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க பொங்கிவந்த மே தினமே!”  

ஓவியக்காரன் – பாவேந்தர் பாரதிதாசன்

ஓவியம் வரைந்தான்-அவன் தன் உளத்தினை வரைந்தான்! ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே ஓவியம் வரைந்தான்! கூவும் குயில்தனைக் கூவா திருத்திக் கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித் தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே ஓவியம் வரைந்தான்! காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான் கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான் ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான் இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான் கோதை…

படத் தொழில் வளர

பாடுமிடம் தெரிந்து பாடவேண்டும் – ஆடுவோர் பாட்டின் பொருள் உணர்ந்து ஆட வேண்டும் – கவிஞன் (பாடும்) பாடும் படக் கலைக்கும் பாடுபட்டோர் தமக்கும் பலருக்கும் பலனளிக்கும் பக்குவ மிருக்கும்படி (பாடும்) கலைஞர்களைக் குழுவாய்க் கூட்ட வேண்டும் – முதலில் கதையமைப்பை விளக்கிக் காட்டவேண்டும் – அந்தக் கருத்தோ டிணைந்து கவிதீட்ட வேண்டும் – அதில் காலத்திற் கேற்ற சுவையூட்ட வேண்டும் – கவிஞன் (பாடும்) ஆடற்கலைக் கழகு உடலமைப்பு-இன்னும் அகத்தின் நிலை விளக்கும் முகக்குறிப்பு பாடற்கலைக் கழகு இசையமைப்பு – கலை பலருழைப்பால்…

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் – பாவேந்தர் பாரதிதாசன்

மந்தையின் மாடு திரும்பையிலே-அவள் மாமன் வரும் அந்தி நேரத்திலே குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன் துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன் எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி! கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள் தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன் தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள் கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக் கோடை படுத்திடும் நாளில்? என்றாள் தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான்-.நீ தொட்ட இடத்தில் சிலிர்க்கு…

குறவர் – பாவேந்தர் பாரதிதாசன்

காடைக் காரக் குறவன் வந்து பாடப் பாடக் குறத்தி தான் கூடக் கூடப் பாடி ஆடிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தனள் சாடச் சாட ஒருபுறப் பறை தக தக வென் றாடினாள் போடப் போடப் புதுப் புதுக்கை புதுப் புதுக்கண் காட்டினாள் ஓடிச் சென்று மயிலைப் போல ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே மூடி மலர்க்கை திறந்து வாங்கி முறிப்பும் முத்தமும் குறித்தனள் தேடத்தேடக் கிடைப்ப துண்டோ சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள் ஈடுபட்டது நேரில் முத்தமிழ் ஏழை மக்களின் வாழ்விலே!

பூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன்

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன் பூத்த முகத் தாமரையாள் புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து….. தேவையடி தாமரை இதழ் என்றேன் தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு பூவைக் காட்டிப் சேர்சொல் என்றேன் பூவை “என்பேர் பூவை” என்றாள்! ஆவல் அற்றவன் போல் நடந்தேன் அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து…. காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர் கண்பட வாடிய மருக்கொழுந்து நீ…

கூடைமுறம் கட்டுவோர் – பாவேந்தர் பாரதிதாசன்

கசங்கு சீவடி பரம்பு சொற்றடி கைவேளை முடித் திடலாம்-நம் பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால் பழயபைக் கொடுத் திடலாம் பிசைந்து வைத்துள மாவும்தேனும் பீரக்கங் கொடியின் ஓரம்-அந்த உசந்த பானை திறந்து கரடி உருட்டிடும் இந்த நேரம் கூடைமுறங்கள் முடித்து விட்டேன் காடை இறக்கை போலே-இனி மூடுதட்டும் குழந்தை மூச்சிலும் முடிப்பதுதான் வேலை காடுவெட்டவும் உதவி யில்லாக் கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க எழுந்திரு கண்ணாட்டி சோடியாக நா மிருவர் கூடி உழைக்கும்போது-நம் ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை உரைத்திட முடியாது பாடி…

தொழிலாளர் விண்ணப்பம் – பாவேந்தர் பாரதிதாசன்

  காடு களைந்தோம் – நல்ல கழனி திருத்தியும் உழவு புரிந்தும் நாடுகள் செய்தோம்: – அங்கு நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம். வீடுகள் கண்டோம்: – அங்கு வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம். பாடுகள் பட்டோம் – புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம். மலையைப் பிளந்தோம் – புவி வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம். அலைகடல் மீதில் – பல் லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம். பல தொல்லையுற்றோம் – யாம் பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம். உலையில் இரும்பை –…

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.

 (சித்திரை 14, 2045 / 27 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)   விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம்…