மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 6 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) தமிழ்த்தேசியம் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் முக்குலத்தவர் ஆட்சி செய்த நாடுதான் தமிழ்நாடு. எனினும் இனம் என வரும் பொழுது சேர இனம், சோழ இனம், பாண்டிய இனம் என இல்லாமல் தமிழினமாகத் தழைத்திருந்தனர். எனவேதான், தமிழ்த்தேசியத்தை உணர்த்தத் தமிழகம் எனச் சேர்த்தே புலவர்கள் பாடி உள்ளனர். இதை உணர்த்தும் வகையில், அரசால் மூவர் என்றாலும் இனத்தால் ஒருவரே என உணர்த்தும் வகையில், ” நாம்மூவர் ஆனாலும் ஒரும னத்தார்! நாட்டினில்வே…

பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து!   பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!   பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து!   பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து!   பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து!   பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து!   பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து!   பொங்கல் திருநாள்  புதுக்கட்டும் சாதிமதம்…

இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.

இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.     இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை.   கணியத்தை – சோதிடத்தை – நம்பி ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப் போட்டுக் கொண்டான்! மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என மக்கள் காட்டிவிட்டனர்.     அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்…

நாள்தோறும் நினைவில் 10 : உடலைப் பேணு – சுமதி சுடர்

உடலைப் பேணு உடற்பயிற்சி செய் தூய்மையாக இரு அளவோடு உண் தட்பவெப்ப பாதுகாப்பு பெறு பொருள்படைக்க உழை உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வை இயற்கையொடு இணைந்து வாழ் நோய்க் குறிகளை அறி மருத்துவத்தின் துணைகொள் ஆழ்ந்து உறங்கு  – சுமதி சுடர், பூனா

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!   காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் –…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! காட்சி – 6 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குடில் முன் உள்ள மரக்கிளை நிலைமை  :     (நாடகம் பற்றிய கருத்துரையில் பேடும் சிட்டும் ஈடுபடல்) ஆண் :     நாடகம் எப்படி உள்ளது சொல்? பேடே! நீயும் பெண் தானே! பெண் :     எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல?     உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு! ஆண் :     நடப்பிற்கும்…

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்   பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை…

‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து!

  தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! இனப்படுகொலையாளன் பக்சே வீழ்ந்தான் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம் இப்பொங்கலை! வரும் புத்தாண்டில் தமிழ் ஈழத் தனி நாட்டிலும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் புத்தாண்டை என்னும் நம்பிக்கையில் கொண்டாடுவோம் இப் பொங்கலை! அகரமுதல இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் எல்லாரும்  எண்ணியவாறு நல்லன எல்லாம்  எய்தி இன்புற்றிருக்க வாழ்த்துகள்! பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழிய! வையகம் வாழ்க! வான் தமிழ் வெல்க! (-தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்…

பொங்கலோ பொங்கல்! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பொங்கலோ பொங்கல் என்றுபா டுங்கள் மன்றிலா டுங்கள் எங்கள்நா டெங்கள் அன்புநா டென்று நன்றுபா டுங்கள் பொங்கியா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! தங்கமே தங்கம் மண்டுநீ ரெங்கும் இங்கும்வா னெங்கும் நன்றுகா ணுங்கள் மிஞ்சியா டுங்கள் சிந்துபா டுங்கள் பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! எங்கும் ஆதந்து லந்தபா லுங்க ரும்பினோ டும்க லந்துமே பொங்க நைந்தவா கும்ப ழங்கள் தே னுங்க லந்துவா னுங்க மகிழ்ந்தவா றுண்ட பொங்கலோ பொங்கல் பொங்கிற்றுப் பாலே! இங்குநா மின்று கண்டபே ரின்பம் என்றுமே…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 5

(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) 10.3. கபிலர் பாடல் — 05         தினைஅளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட          பனைஅளவு காட்டும் படித்தால் — மனைஅளகு          வள்ளைக்[கு] உறங்கும் வளநாட..! வள்ளுவனார்          வெள்ளைக் குறட்பா விரி ] பொருள் உரை      தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர்…

நாள்தோறும் நினைவில் 9 : வாழ்வைத் திட்டமிடு – சுமதி சுடர்

வாழ்வைத் திட்டமிடு முதன்மையை அறி உயர்ந்த குறிக்கோள் கொள் பட்டறிவைச் சேகரி வாழ்வை வடிவமை கால்வரை திட்டமிடு நேரத்தைப் பகிர்ந்துகொள் கலந்து முடிவு செய் திட்டத்தை நிரல்படுத்து முடிவுகளைப் பரப்புக விளைவுகளைக் கணி தொலை நோக்கு பார்வைகொள்  – சுமதி சுடர், பூனா