சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி- விசய் இராசுமோகன்

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு   ஒரு வருடம் முன்பாக ஒரு நாள் திரு.இராசேந்திரன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து மேசையில் இருந்த அவரது குடும்ப ஆவணங்களை எடுத்துக் காண்பித்து, அவரது குடும்ப வரலாற்றை எழுதிவருவதாகக் கூறினார். நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன வழக்கமாக எல்லாரும் சொல்லும், பெருமைப்பட்டுக் கொள்ளும் குடும்ப வரலாறாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.   ஆனால் நூலை எடுத்து இரு நாள் கீழே வைக்கமுடியவில்லை. சாமியாடி சொல்லவந்த குறியைச் சொல்லிவிட்டே…

செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013

மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது :  நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…

புதின இலக்கிய முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற சூன் 14 (14/06/2014) சனிக்கிழமை,  புதினம் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன்.   இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாசு, ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த புதினங்கள், தமிழ்ப்புதினத்தின் சமகாலப் போக்குகள், தசுதாயெவ்சுகியின்  புதினங்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன்  புதினம் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும்…

தமிழுக்குத் தலைவணங்கிய மலையாளம்..! – கவிமணி

     எழுத்தாளனின் எழுத்துகளே வருங்கால மன்பதைக் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றன. தரமான முற்போக்கான எழுத்துகள் மூலம் இந்த மன்பதையைச் சமன் செய்வது நல்ல எழுத்தளார்கள் கையில்தான் இருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் என்றால் பெரும் படிப்பறிவும் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இந்த மன்பதையைப்படித்து, அதனைத் திருத்தும் வகையில் எழுதும் இரண்டு கட்டுரைகள் போதும் ஒருவன் எழுத்தாளனாக ஏற்கப்படுவதற்கு!   ஆனால், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, எழுத்தாளுமை உள்ள எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள்….

கவிதை உறவு இலக்கியப் பரிசுப் போட்டி

 கவிதை உறவு இலக்கியப் பரிசுகள் பெற ஏப்பிரல் 10-ஆம் நாளுக்குள் புத்தகங்களை அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிப்பிரிவுகள் பரிசுகள் விவரம் வருமாறு:-  மரபுக் கவிதை  :  துரைசாமி(நாடார்) -இராசாம்மாள் நினைவுப் பரிசு புதுக்கவிதை : ஊர்வசி செல்வராசு நினைவுப் பரிசு மனிதநேயம்-வாழ்வியல் : சுப்பையா – தங்கம்மாள் நினைவுப் பரிசு சிறுகதை : சு. சமுத்திரம் நினைவுப் பரிசு இலக்கிய கட்டுரைகள் :  முனைவர் மு. வரதராசனார் நினைவுப் பரிசு ஆய்வு- பொதுக் கட்டுரைகள் :  முனைவர் சி. இலக்குவனார் நினைவுப் பரிசு மேலும்…

இலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்

இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர்.  இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…

1 9 10