மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 3 தொடர்ச்சி   “அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?” அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன. “இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்” என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5

 (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 1 தொடர்ச்சி மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள். “ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?”மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே…

குவிகம் – க.சுப்பிரமணியத்தின் வேரும் விழுதும் – அளவளாவல்

புரட்டாசி 31, 2052 / 17.11.2021 மாலை 6.30 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய கூட்ட எண்  / Zoom  Meeting ID:  619 157 9931கடவுச் சொல் /  Passcode:  kuvikam123    பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.   குவிகம்  இணையவழி அளவளாவல் நிகழ்வு க.சுப்பிரமணியத்தின் வேரும் விழுதும் புதினம் இராய செல்லப்பா இரமேசு கல்யாண் சதுர்புசன் க.சுப்பிரமணியன்

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 31

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 30. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 13 மாசி மாதம் தொடங்கியது. பொதுவாக எல்லாருமே படிப்பில் முனைந்து நின்றார்கள். பகலும் இரவும் எல்லாரும் புத்தகமும் கையுமாக இருந்தார்கள். சிறப்பாக, இரண்டாம் இடைநிலை(இண்டர்) வகுப்பில் இருந்தவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுக்குச் செல்லும் மற்ற மாணவர்களும் ஓயாமல் படித்தார்கள். அவர்களின் அறையில் இரவில் நெடுநேரம் விளக்குகளின் ஒளி காணப்பட்டது. சந்திரனும் படித்தான். தேர்வு நெருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திரனுடைய தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சந்திரனைக் கண்டு நன்றாகப் படிக்குமாறு சொல்லவேண்டும்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 23

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 22. தொடர்ச்சி) அகல் விளக்கு இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எசு. எசு. எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 21

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 20. தொடர்ச்சி) அகல் விளக்கு எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே ‘சொஞ்சரி சொஞ்சரி’ என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 17

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 16. தொடர்ச்சி) அகல் விளக்கு பள்ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திரனும் மேல் வகுப்பில் உட்கார்ந்தோம். அங்கே தலைமையாசிரியர் வந்து, ‘சந்திரன்!’ என்று பெயரைக் கூப்பிட்டு, அவனிடம் வந்து முதுகைத் தட்டிக்கொடுத்தார். “எல்லாப் பாடத்திலும் இவன்தான் முதன்மையான எண்கள் வாங்கியிருக்கிறான். இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவான். நம் பள்ளிக்கூடத்துக்கும் இவனால் நல்ல பெயர் கிடைக்கும். இப்படியே படித்து வந்தால், அடுத்த ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில்(எசு.எசு.எல்.சி.யில்) மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறமுடியும். மற்ற மாணவர்கள் இவனைப் போல் பாடுபட்டுக் கற்கவேண்டும்”…

அகல் விளக்கு – மு.வரதராசனார். 3 .

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  தொடர்ச்சி)   அகல் விளக்கு.  3 .     மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி கன்னெய்(பெட்ரோல்) கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார்….

அகல் விளக்கு – மு.வரதராசனார் 1. அறிமுகம்

அகல் விளக்கு  1 அறிமுகம்   சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது. சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது. சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக்…