சிங்களப் படையே வெளியேறு!

 வடக்கில் நிலைகொண்டுள்ள படையினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி வடக்கிலுள்ள மாவட்டங்களின் இளைஞர்கள்,  இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நேற்று நகரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கலை மண்டபத்தில் தங்கியுள்ள படையினருக்கு எதிராக இன்று முற்பகல் 9 மணிக்கு இந்தப் போராட்டம்  தொடங்கப்பட்டது. அங்கிருந்து இந்தப் போராட்டம் ஓமந்தை, திருவையாறு, பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி, இயக்கச்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், வழியாகக் காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.  பேருந்தில் பயணித்த போராட்டக்காரர்கள் ஒவ்வோர் இடத்திலுமுள்ள படைமுகாம்களுக்கு முன்னாலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

யாழ்.பல்கலையில் இனவெறி மோதலைத் தூண்டும் சிங்கள அரசு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி இனவெறியைத் தூண்டுவதைக் கண்டனம் செய்!   இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின்பொழுது, மாணவர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் ஆடி 01, 2047 / சூலை 16, 2016 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி, தமிழர் எதிர்ப்பு இனவெறிச் சீற்றத்தைத் தூண்டி விடுவதற்கு, அரசின் பகுதியினரும் முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சவைச் சூழ்ந்து கொண்டுள்ள இனவெறிக் கும்பலும் மேற்கொள்ளும் முயற்சிக்குப் பொதுவுடைமை நிகருரிமைக் கட்சியும் (சோசலிச சமத்துவக் கட்சி – சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான (சமத்துவத்துக்கான)…

ஐ.நா. போட்டியில் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி

ஐக்கிய நாடுகள் அவை நடத்திய போட்டியில் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி  தேவகோட்டை :   மாநில அளவில்  ஐக்கிய நாடுகள் அவை சென்னை அக்கினி கல்வி நிறுவனம் இணைந்த  மாநில அளவில் ஆற்றல் சேமிப்புப்போட்டி  நடத்தின.  இப்போட்டியில் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசுஉதவிபெறும் நடுநிலைப் பள்ளி  பங்கேற்றது.  இப்பள்ளி மாணவி காவியா மாநில  அளவிலான இரண்டாம் பரிசினை வென்றார்.                                                         ஐக்கிய நாடுகள் அவையின் இந்தியாவிற்கான தேசியத் தகவல் அலுவலர் இராசீவு சந்திரன், அக்கினி கல்வி நிறுவனங்களின் செயல்  இயக்குநர் அக்கினீசுவர்…

தண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்) – கே.இராசு

தண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்)   வறட்சி தாண்டவமாடும் மரத்துவாடா பகுதியில் பல கல் (மைல்) தொலைவு நடந்து சென்று ஒரு பானைத் தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலையில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் ஒவ்வோர் ஊரிலும் பார்க்க முடியும். “நீருக்காய் அவள் நடந்த தூரத்தை ஒரு நேர்கோட்டில் இழுத்தால் பூமத்திய ரேகையாகிப் போகும்!”  என்கிறது ஒரு கவிதை. ஆனால், ஔரங்காபாத்து நகரத்தின் அருகில் உள்ள படோடா என்கிற சிற்றூரின் கதை வேறு. சுற்றிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட சிற்றூர்கள் இருந்தாலும் இந்த ஊர் மக்கள்…

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை   புதிய கல்விக் கொள்கை என்ற மத யானையைத் தமிழகத்தில் நுழையவிடக் கூடாது எனத் தமிழக அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.    தன்னுடைய அறிக்கையில் இது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   ”மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எசு.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன் ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில்  நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில்   முனைவர் க.தமிழமல்லன  பங்கேற்றார். மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில்  கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில்  நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச்…

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள்

துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள் ! துபாய் :  மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சிற்றூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் பொருளூர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய்  செபல் அலி (Jebel Ali) பகுதியில் ஏற்படுத்திய  நேர்ச்சியின்(விபத்தின்)போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த  நேர்ச்சியை ஏற்படுத்தியதற்காக நூறாயிரம் திர்ஃகாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த  நேர்ச்சியில் தொடர்புடையவருக்குக் காப்பீட்டு நிறுவனம் சில காரணங்களைக் கூறி இழப்பீடு வழங்க மறுத்து…

மறைந்த தலைவர்களின் ஈகங்களைச் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு

  மறைந்த தலைவர்களின்  ஈகங்களை இளைய தலைமுறையினரிடம் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு  காமராசர், மறைமலையடிகள் பிறந்த நாள் விழாவில்                    நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில்  ஆடி 01, 2047 / சூலை 16 இல்நடைபெற்ற கருமவீரர் காமராசர், தமிழறிஞர் மறைமலையடிகள் ஆகியோரின் பிறந்த நாள் விழாவில், மறைந்த நம் தலைவர்களின் ஈகங்களையும், மொழிப் பற்றையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது…

உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்

உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்!   தொல்காப்பியரின் புகழ் பரவும் வகையில் உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ச.வே.சுப்பிரமணியம் பேசினார். தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர். அங்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தொல்காப்பியரின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சதாசிவம் மனோன்மணிபுரம் கோயில் வளாகத்தில் இவ்விழா…

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை –  மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தற்பொழுது 440 ஆசிரியப் பயிலுநர்கள் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இந்த ஆசிரியப் பயிலுநர்கள் தங்குவதற்கான விடுதிகள்,  கற்றல் சூழல் முதுலியன பெரும் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. இதனைக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்காகவும் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்  இதனைப் பார்வையிட்டார்.  இதன்போது பாராளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், கல்வி…

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா

யாழ் இந்துக் கல்லூரியின் தமிழ்மொழி நாள் விழா ஆனி 20, 2047 / சூலை 04, 2016 அன்று  முதன்மை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தலைமை விருந்தினராக மாநிலக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்   துணைஅதிபர் த.நிமலன், தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் சி.ரகுபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் விசாகனன், யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் மருத்துவர் (இ)யோகேசுவரன் உட்பட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க  வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ  அறிவுரைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி  ஆ.கா.க.(எல்.ஐ.சி.)க் கிளை சார்பாக நடைபெற்றது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு  தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ  அறிவுரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். தேவகோட்டை  ஆ.கா.க. கிளையின் மேலாளர் மோகனசுந்தரம் தலைமை தாங்கிப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் முன்னிலை…