தேவதானப்பட்டியில் நீதிமன்ற வில்லையைப் பிய்த்து விற்போர்…

  தேவதானப்பட்டப் பகுதியில்    நீதிமன்றக்கட்டண வில்லையை விற்பனை செய்யும் ஊழியர்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பபடும் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுப்பும் மனுக்கள் முதலானவற்றில் ஒட்டப்படும் நீதிமன்றக்கட்டண வில்லைகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள, ஊராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் போன்ற வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு மனுக்கள் செய்தால் 2 உரூபாய் மதிப்புள்ள நீதிமன்றக் கட்டண அஞ்சல்தலையும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுக்கொடுத்தால் 10 உரூபாய்க்கான நீதிமன்றக் கட்டண அஞ்சல் தலையும் ஒட்டப்படவேண்டும்.  …

கல்வியாற்றுரைக் கருத்தரங்கு – இந்து

‘தி இந்து’ – மாதா பொறியியல் கல்லூரி நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சி வைகாசி 10 / மே 24  நடைபெறுகிறது   + 2 முடித்து விட்டு அடுத்த என்ன படிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காகவே இந்து இதழ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த படிப்பை எப்படித் தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும்…

கணிணித்தமிழ் – இணைய இதழ் : அறிமுகம்

  தமிழ்க்கணிமை சார்ந்த ஆராய்ச்சிகள் பலகாலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல கட்டற்ற மென்பொருட்களும், தனியுரிம மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.   பல்வேறு கணிணி அறிஞர்கள், பல்வேறு கணிணி மொழிகளில் தமிழுக்காக நிரலாக்கம் செய்து வருகின்றனர். பல்வேறு தமிழ் அறிஞர்களும் பல வகையில் பங்களித்து வருகின்றனர்.   இந்த முயற்சிகள் அனைத்தையும் இணைக்கும் பாலமே இந்த இணைய இதழ். இங்கு நீங்களும் பங்களிக்கலாம். நீங்கள் பங்களிக்கும் தமிழ்க் கணிமை சார்ந்த திட்டங்கள், உரையாடல்கள், கருத்துகளை இங்கே பகிரலாம்.   எவ்வாறு பங்களிக்கலாம்?…

இனப்படுகொலை – ஆவணப்படம் வெளியீடு

அன்பார்ந்த தோழர்களே , உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் “இது,திட்டமிட்ட இனப்படுகொலை!” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனச்சான்றை உலுக்கும் வகையில் இயக்குநர்.வ.கவுதமன் அவர்களின் “இது, இனப்படுகொலையா இல்லையா?” எனும் நெருப்புப் படைப்பு சித்திரை 30, 2046, மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (ஆர்.கே.வி.படநிலையம், வடபழனி, சென்னை) வெளியாக உள்ளது….

ஆடலாம் பாடலாம் – சிறுவர் பாடல்கள்

ஆசிரியர்: என். சொக்கன், பெங்களூரு மின்வரி: nchokkan@gmail.com தளம் : http://nchokkan.wordpress.com வெளியீடு: இலவய மின்தமிழ்நூல்கள் [ FreeTamilEbooks.com ]  புத்தக எண் – 165 உரிமை – எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். அனைத்துவகைக் கணிணி,கைப்பேசிகளில் கட்டணமின்றிப் பதிவிறக்கலாம். மின்னூலாக்கம் : சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com        

தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி

தமிழ் சொந்த மொழி ஆரியம் வந்த மொழி “தமிழ் இந்நாட்டு மொழியே; ஆரியம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே” என்று நிலை நாட்டுவதற்கு ‘நன்னெறி முருகன்’ என்று தம்மைக் கூறிக் கொள்ளும் சுனித்குமார் சாட்டர்சி இயற்றியுள்ள “வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது. – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,   பழந்தமிழ்

காலப்பொறி படைத்தவர் தமிழரே!

காலப்பொறி படைத்தவர் தமிழரே!   “யாண்டும், மதியும், நாளும், கடிகையும்” எனவரும் சிலப்பதிகார அடிகளால் நாழிகையை அளவிடும் கருவி ‘கடிகை’ என அழைக்கப்பட்டதை அறியலாம். இக்கடிகை ‘ஆரம்’ போல் கழுத்தில் அணியப்பட்ட செய்தி “கடிகை ஆரம் கழுத்தில் மின்ன” என்னும் பெருங்கதை வரியால் அறியப்படுகிறது. இக்கடிகை ஆரமே இப்பொழுது கடிகாரம் எனப்படுகிறது.  மேலும், ‘கன்னல்’ என்னும் கருவி மூலம் நேரம் கணக்கிடப்பட்டதை முல்லைப்பாட்டின் மூலம் அறியலாம். நமது நாழிகை வட்டில் பிற நாட்டவராலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுதைய, ஒன்றரை மணி நேர அளவுகொண்ட முழுத்தம் என்பதே…

ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே !

ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே!   பழமையான நாகரிகச் சின்னங்கள் கிடைத்த இடங்களில் சிந்துவெளிக்கரையில் அமைந்துள்ள “ஆரப்பா’ “மொகஞ்சதாரோ’ ஆகியன குறிப்பிடத்தக்கன. இங்குக் கிடைத்த பானை ஓடுகள், முத்திரைகள் ஆகியவற்றில் நட்சத்திரக் குறியீடுகளும், கோள்களின் குறியீடுகளும் காணப்படுகின்றன.   தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுகமாகப் பண்டைய காலத்தில் திகழ்ந்த கொற்கையை இப்போது ஆராய்ந்த போது இங்குக் கிடைத்த பல பானை ஓடுகளில் நட்சத்திரக் குறியீடுகளைப் போலவே கொற்கையில் கிடைத்த குறியீடுகளிலும் காணப்படுகுன்றன. கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்க ஆறுமீன்கள் குறியீடாகக் காணப்படுகின்றன. செவ்வாய்க் கோளைக்…

சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள்

சாலை வழிகாட்டி அமைத்தவர்கள் தமிழர்கள் பச்சை மரத்தில் கூரிய கற்களைக் கொண்டு சாலை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதைத் தமிழர்கள் பொறித்து வைத்திருந்தனர். வழிப்போக்கர்களுக்கு உதவியாக எழுதப்பட்டவற்றைச் சாதாரண மக்களும் படித்தறியும் அளவுக்கு எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது புலனாகும். “செல்லும் தேஎத்துப் பெயருங் கறிமார் கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த“ – மலைபடு கடாம்

திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!

திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!   நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில் சாலைகள் ஒழுங்காகச் சீரமைக்கப்படாததால் சாலை நேர்ச்சி(விபத்து)கள் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு முதலான இறைவழிபாட்டு இடங்களும் தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால், வேதாரண்யம் முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. இப்பகுதியைக் காண ஏராளமான சுற்றுலா ஊர்திகள் வருகை புரிகின்றன. இதன்மூலம் சுற்றுலாவை மையப்படுத்தி சுற்றுலா…

தேவதானப்பட்டியில் இரண்டாம் போகம்

தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் அறுவடைக்குத் தயாரான நிலங்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் நெல் பயிரிடலுக்கு உழவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.   இப்பகுதியிலுள்ள நெல்வயல்கள். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாம் போக உழவுக்கு ஆயத்தமாகி தயாராகி வருகின்றன நெல்வயல்கள்.   தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நெல்வயல்கள் தரிசாகக் கிடந்தன. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னால் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள், கிணறுகள்,…

மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்

மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்   நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலகம் உள்ளது.   இப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில், தங்கள் குறைகளை அரசு களையும் என்ற நம்பிக்கையில் பதிவு அஞ்சலில் தங்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு அனுப்பச் செல்கின்ற பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம், “இங்கு பதிவஞ்சல் அனுப்ப முடியாது. தலைமை அஞ்சலகம் அல்லது மற்ற அஞ்சலகங்களுக்குச் சென்று அனுப்புங்கள்” எனக்கூறுவதும், பொதுமக்களை ஒருமையில் பேசுவதும்   அஞ்சலகப் பணியாளர்களின்…