மோடி அரசு பற்றி மாயத் தோற்றம் குசராத்தை விட தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்
புள்ளி விவரங்களை அள்ளிவீசிய முதல்வர் குசராத்துதான் முதன்மையான மாநிலம் என்பது ஒரு மாய த் தோற்றம் என்றும் பல துறைகளில் குசராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது என்றும் முதல்வர் செயலலிதா புள்ளிவிவரங்களுடன் பேசினார். கிருட்டிணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூசாரிப்பட்டி கூட்டுச்சாலை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் முதல்வர் செயலலிதா பேசியதாவது; சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், பா.ச., தலைமயர் வேட்பாளரும், குசராத்து முதல்வருமான நரேந்திர மோடி, அ.தி.மு.க.,வை, தி.மு.க., உடன் இணைத்து,…
திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு
மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார். “தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார் கள ஆய்வுமேற்கொண்டார். அப்பொழுது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில், திருமலை(நாயக்க) மன்னரின் (கி.பி.1623- 1659) அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டன எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை…
சிங்கப்பூரில் முத்தமிழ் விழா
தமிழ் மொழித் திங்கள் விழாவின் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏப்பிரல் 5, 2014 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியது. தமிழ் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சிங்கப்பூர் சுற்றுப்புற நீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அடுத்த அங்கமாகக் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் உரை நிகழ்த்தினார். பின்னர் மாணவமணிகள் கலந்து கொண்ட மாறு வேடப்…
வளைகுடா வானம்பாடிகளின் ஏப்பிரல் கூட்டம்
குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை வாசித்தல், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல நிகழ்வுகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்தனர். நிகழ்ச்சிக்குப் பல அமைப்பின் நண்பர்களும், குவைத்…
தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடலை நிகழ்த்தியது. சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். முனைவர் ப.மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார். முனைவர் க.ப.அறவாணன், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனவைர்…
இலக்குவனார் நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு விழா
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த ஊர் [இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம், திருமரைக்காடு(வேதாரண்யம்) வட்டம்,] வாய்மைமேடு என்னும் ஊராகும். இங்குள்ள இலக்குவனார் நடுநிலைப்பள்ளியில் பங்குனி 17, 2045 / 31.03.14 அன்று விளையாட்டு விழா நடந்தது. விழா தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் : நன்றி : – வாய்மைமேடு மணிமொழி முகநூல் பக்கம்
“வாழ்வைக் கொண்டாடுவோம்” – சொ.வினைதீர்த்தான்
கணினித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு
கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மாநாடு 2014 மார்ச்சு 30 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணிவரை சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய தேர்வரங்க அறையில் நடைபெற்றது. தொடக்கவிழாவில்,பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தி, . மாநாட்டின் மையக் கருத்தை விளக்கினார். தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சி-செய்தித்துறைச் செயலர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கிக் கூறினார்….
தமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார். தமிழ்நாடு தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …
செய்திக்குறிப்புகள் சில : அகரமுதல இதழ் 18
மும்பையில், 1 உரூபாய்க்கு 1 புதுப்படி(இலிட்டர்) நீர் தரும் எந்நரேமும் இயங்கும் நீர்ப்பொறியை வந்தனா நிறுவனம் (Vandana Foundation) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மன்கார்டு என்ற இடத்தில், இதனை அமைத்துள்ளது. இதில்,கட்டண அட்டை மூலம் தண்ணீர் பெறலாம்.. சொகுசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டிற்காகவும் பிற தகவல்களுக்காவும் கருப்புப் பெட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது; பயணிகள் இடுப்புவார் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள பேருந்துகளில் இவற்றை அறிமுகப்படுத்த சட்டம் கொணருவதுடன், புதிய பேருந்துகள் இவற்றுடன்தான் விற்கப்பட வேண்டும் என்று நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது….
இலக்குவனார் இலக்கியப் பேரவை – முப்பெருவிழா ஒளிப்படங்கள்
விழா அழைப்பிதழ்
குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம்
குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம் 14-03-2014 வெள்ளி அன்று மிகச் சிறப்பாக, தோழர் செங்கொடி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை வானம்பாடி நிறுவனர் திரு சேது அவர்கள் தொடங்கி வைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. செல்வி அனு, திருக்குறள்களைத் தன் மழலை மொழியால் வழங்க, நிகழ்ச்சி இனிதே களைகட்டியது. நிகழ்ச்சிக்கு ”அரவணைப்பு” திரு இளங்கோவன், தொழிலதிபர் திரு சாமி, வானம்பாடிகள் உதவித் தலைவர் திரு அலெக்சு ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் மண்ணிசைப் பாடல்களை, திரு பாண்டி, செந்தில்,இராமகிருட்டினன் ஆகியோரும் மெல்லிசைப்…
