உலகின் மிக நீளமான காவியத்தின் சிறப்புப் பதிப்பு திபெத் மொழியில் வெளியீடு
உலகில் மிக நீளமான காவியமான கசார் மன்னரின் திபெத் மொழி சிறப்புப் பதிப்பு, சீனாவின் சில தலைமுறை அறிஞர்களின் 30 ஆண்டுக்கால முயற்சிகளுடன், தொகுக்கப் பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. சீனத் திபெத் தன்னாட்சிப் பகுதியின் குமுகாய அறிவியல் கழகத்தினர் இதனை அறிவித்துள்ளனர். மன்னர் கசார் என்னும் திபெத் இனத்தின் வீரக் காவியம், உலகளவில் மிக நீளமான காவியமாகும். இந்தக் காவியத்தில் 120 அத்தியாயங்கள் உள்ளன; 10இலட்சம் பாடல் வரிகளும் 2 கோடிக்கும் அதிகமான எழுத்துக்களும் உள்ளன. எண்ணிக்கையைப் பார்த்தால் உலகில் மிக புகழ்…
ஒட்டோவியத்தில் திருவள்ளுவர் – காரைக்குடிப் பள்ளியின் அருந்திறல்
காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு : காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது. 27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை என மூன்று பள்ளிகள் உள்ளடங்கியது இப்பள்ளிக்குழுமம். மாணாக்கர்களிடம் தமிழ் உணர்வை வளர்க்கவும் திருவள்ளுவரைப் போற்றும் உணர்வை ஏற்படுத்தவும், இலிம்கா (Limca) அருந்திறலுக்காக மாணாக்கர்கள் துண்டுத்…
காங்.உடன் கூட்டணி இல்லை – எதிர்பார்த்தவாறு கலைஞர் அறிவிப்பு
சென்னை – இன்று (15.12.13) நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடனான கூட்டணிக்கு எதிராகப் பேச இசைவளிக்கப்பட்டனர். குத்தாலம் கல்யாணம், மேனாள் அமைச்சர் நேரு, மதுரை முனியாண்டி, திருச்சி சிவா, மேனாள் அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் பழனிமாணிக்கம், சென்னை அன்பழகன் முதலான பலரும் வஞ்சகக் காங்.உடன் கூட்டணி வேண்டாம் எனக் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான மக்களின் உணர்வினை இதுவரை ஏற்காத தி.மு.க. தலைமை, சூழ்நிலையின் உந்துதலால் – பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இணங்க உடன்படுவதுபோல் – இப்பொழுது…
திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா
பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், கலைச்செல்வன், முனைவர் ஐயாதுரை, சுந்தரராசன்,சங்காமிருதம் குருசாமி, மரு.இராமகிருட்டிணன் முதலானோர் நினைவுரை ஆற்றினர். திருவாட்டி மலர் வரவேற்புரையும் திருவாட்டி எழிலரசி நன்றியுரையும் ஆற்றினர். வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன்,…
சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையைத் தடுக்க வேண்டும் – மரு.இராமதாசு
சிங்கப்பூரில் சிற்றிந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகப் பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்:– சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் சிற்றிந்தியா (லிட்டில் இந்தியா) பகுதியில் நிகழ்ந்த சாலை நேர்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சிற்றிந்தியா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உட்பட 25 இந்தியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும் தளையிட்டுள்ளனர்….
தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடின்றிக் கண்டபடி எழுதும் போக்கு உள்ளது
– செம்மொழி இராமசாமி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியில்துறையும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா 09.12.12 அன்று நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் பேசினார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் இயக்குநர் முனைவர் க.இராமசாமி கருத்துரையாற்றினார். அப்பொழுது அவர், “தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடு இல்லாமல், வரன்முறை இன்றிக்…
மானாமதுரை பெண்ணிற்குத் தேசிய விருது
மானாமதுரை: இந்திய அரசின் “சங்கீத நாடக அகாதமி’ சார்பில், 2013ம் ஆண்டிற்கான அகாதமி விருதுக்கு, மானாமதுரை கடம் உருவாக்குநர் மீனாட்சி தேர்வாகியுள்ளார். நான்கு தலைமுறையாக கடம் உற்பத்தியில் கேசவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசின் இயல், இசை நாடக அகாதமிக்குட்பட்ட, சங்கீத் நாடக அகாடமி சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இசைக்கருவிகள் உருவாக்தக்தில் பங்களிப்போரையும் கலைஞராகக் கருதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு, மானாமதுரை குலாளர் தெரு, கேசவன் மனைவி மீனாட்சி (60), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின்…
கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?
– கலைஞர் வினா? கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில், ”கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?” எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு: “கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில், வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு, வெளியேற வேண்டும்’ எனக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது….
இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை
“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :- “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில்…
தமிழகம் முழுவதும், மலிவு விலை காய்கறிக் கடைகள் – முதல்வர் ஆணை
சென்னை : திசம்பர் 11: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய பொழுதுமுதல்வர் செயலலிதா, “விலைவாசியைக் கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை – காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற காய்கறிக்கடைகளை, மாவட்டங்களில் தேவையான இடங்களில் தொடங்க, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டார்.
மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட வரைவு
மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட வரைவு 11.12.13 அன்று மகாராட்டிரச் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமூக நீதித்துறை அமைச்சர் சிவாசி(இராவு மொகே) இந்தச் சட்ட முன்வடிவை அளித்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவிப் பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும் என்று சட்டப்பேரவையில் சிவாசி கூறினார். எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துரைகளும் சேர்க்கப்பட்டுத் திருத்திய சட்டவடிவே சட்டமாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பிற மாநில அரசுகளும் இந்திய நாடாளுமன்றமும்…
மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு
“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…
