கனடா : முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை

  கனடாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது களத்திலே வைத்திய பணியாற்றிய  மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை,கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம். https://www.facebook.com/eelamranjanvot/posts/10157045139000637?notif_t=like&notif_id=14637860392190   ஈழம் இரஞ்சன்

ஔவை சண்முகம் பிறந்தநாள் விழா: திருவுருவப் படங்கள் திறப்பு : ஒளிப்படங்கள்

  [சித்திரை 13, 2047 / ஏப்பிரல் 26, 2016 மாலை 6.00] தாமரைத்திரு ஔவை சண்முகம் 104 ஆவது பிறந்தநாள் விழா திருவுருவப் படங்கள் திறப்பு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கல்  [படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்.]

சின்னம் அணிவித்தலும் நீர் வழங்கலும்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பாடசாலை மாணவர்களுக்குச் சின்னம் அணிவித்தலும் பாடசாலைக்கான  நீர்  வழங்கலும்       நுவரெலியா கல்வி வலையத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர்  வழங்கல் திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்குக் கையளித்தல் ஆகிய நிகழ்வு சித்திரை 26, 2047 / மே 09,.2016  அன்று   மாநிலக்கல்வியமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.  இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள்,…

வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தின் வீடமைப்பு அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தினால் வீடு  சீரமைப்பிற்காக  உரூ.50,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு    வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்(வாலிபர்) சங்கத்தினால் கடந்தகாலப்போரில் தன் இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும்   கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு இவ் வீடு  சீரமைப்பிற்கான உதவி (சித்திரை 24, 2047 / மே7,2016) வழங்கப்பட்டுள்ளது.   மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து  இளைஞர் சங்கத்திடம்  விண்ணப்பம் விடுத்திருந்தார். இதன்படி, வீடு  சீரமைப்பிற்காக  அவரது வீட்டில் சனிக்கிழமை(7/05/2016), கூரைத்தகடுகள், காரைக்குழாய்கள், கம்பிகள்,  வீட்டுவேலைகளுக்கான கூலி…

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா

மத்திய அரசின்  சான்றிதழ் வழங்கும் விழா தேவகோட்டை தேவகோட்டைபெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அனைருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விழாவில் 8 ஆம் வகுப்பு மாணவர் சௌமியா  வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தங்கினார்.   மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாகத் “தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில்…

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!

வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!  வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்)சங்கத் தலைமைச்செயலகத்தில்  பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு  மிதிவண்டிகளும் ஒருவருக்குத் தையல்பொறியும் வழங்கப்பட்டுள்ளன.   சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட்டு இந்துஇளைஞர்(வாலிபர்) சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக  மிதி வண்டிகள், தையல் இயந்திரம் என்பன தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி, வட்டு  மத்திய கல்லூரி, வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை, மூளாய் சுப்பிரமணிய வித்திய சாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு …

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வுகள்   சித்திரை  முழுநிலா அன்று இளங்கோஅடிகள் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள  இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் சமூகச்சேவை அலுவலர் திரு. எசு.எசு. சீனிவாசன் அவர்களினால் அன்னாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.   இந்நிகழ்வில் முன்னாள்  நகரத்துணைத்தலைவரும், இளங்கோ அடிகளின் திருவுருவச் சிலையினை நிறுவியவருமான திரு. க. சந்திரகுலசிங்கம், மாவட்டச்சிற்றூர் ஆட்சி அலுவலர் திரு. எம். விசயரட்ணம், மாவட்டக்…

மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா: “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்

  மாம்பலம் ஆ.சந்திரசேகரின் மணிவிழா “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்   [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6276052191905337697″]    

யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ

யாழிசை – நூலறிமுக விழா ஒளிப்படங்கள், தொரந்தோ [embpicasa id=”6278435871778876753″] [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] செந்தமிழினி பிரபாகரன்

மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் அறிவொளி ஏற்றுவிழா

  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடு நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா   தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடு நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக  சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 210 2016 அன்று நடை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒளியேற்று விழா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   ஒளி…

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு

அமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு   மலையகத்தின்  மூத்த தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின்  நிறுவனரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59  ஆவது பிறந்த  நாளை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் முதன்மையாளர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த வழிபாடுகள்  அட்டன் முருகன் ஆலயத்தில் (17/4 அன்று) நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்விஇணையமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், செயலாளர் நாயகம் ஏ. இலோரன்சு. ஊட்பட மலையக மக்கள் முன்னணியின்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]