ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா, மட்டகளப்பு
வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் முன் நுழைவாயில் திறப்பு விழா மட்டகளப்பு களவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையில் வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் – முன் நுழைவாயில் திறப்பு விழா ஆனி 16, 2047 / சூன் 30, 2016 அன்று நடைபெற்றது. இந். நிகழ்விற்கு தலைமை விருந்தினராக மாநிலக்கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. சீ.இயோகேசுவரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் மாகாணஅவை உறுப்பினர்கள். கல்வி அதிகாரிகள். கல்வி அமைச்சின் பாடசாலை…
ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்
ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் கொழும்பு கல்வி அமைச்சில் ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மங்கள விளக்கேற்றுவதையும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணனின் உரையில், ஒரு நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு அந்த…
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும்
முத்திரை வெளியீடும் நூற்றாண்டு விழாவும் யாழ்ப்பாணம் மாவட்டம் புலோலி புற்றலை மகா வித்தியாலயத்தின் (1916-2016) நூற்றூண்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டார். இதன் போது முத்திரை வெளியீடும், நூல் வெளியீடும், சிறப்பிப்பும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
644 மாணவர்கள் சிறப்பிப்பு – நுவரெலியா
க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் 5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள் சிறப்பிப்பு மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது. மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது….
ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா
எழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில் ஆதிரை முல்லையின் “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. திரைப்பட நடிகர் இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர் நூல்களைப் பெற்றுக்கொண்டார். கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். [படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]
தமிழ் இனப்படுகொலை கூட்டரசு இந்தியா! – வவுனியா மாவட்ட மக்கள்குழு கடுந்தாக்கு!
தமிழ் இனப்படுகொலை கூட்டரசு இந்தியா! – வவுனியா மாவட்ட மக்கள்குழு கடுந்தாக்கு! தமிழர் தாயகத்தின் தலைநகரம் திருகோணமலையில் தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்து, பொருளாதார வளம் கொழிக்கும் மூதூரின் சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து, வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆனி 11, 2047 / 25.06.2016 சனிக்கிழமை அன்று எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ‘தமிழ் இனப்படுகொலை’ கூட்டரசு இந்தியாவின் ‘இன்னுமொரு இனஅழிப்பு’ ‘சம்பூர் அனல்மின் நிலையத்திட்டத்தை நிறுத்து!’ என்று வலியுறுத்தி பதாதையைத் தாங்கியவாறு, வவுனியா மாவட்ட மக்கள்…
மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்
மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும் “கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாகுபாடு காட்டப்பட்டது. பெரும்பான்மைக் கல்விக்கூடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அனைத்துக் கல்விக்கூடங்களுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காகத் தமிழ் அமைச்சர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்…
இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ: படங்கள்
மணிவாசகர் பதிப்பக இராம.குருமூர்த்தி – உமாராணி இணையர் மணிவிழா – ஒய்எம்சிஏ:படங்கள் [embpicasa id=”6298290927512074337″]
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : நிகழ்ச்சிப் படங்கள்
[embpicasa id=”6298293073216002833″]
தமிழர் எழுவருக்கான விடுதலைப் பேரணி, சென்னை : ஒளிப்படங்கள்
சென்னை எழும்பூரிலிருந்து கோட்டை வரையிலான எழுவர் விடுதலைப் பேரணி : ஒளிப்படங்கள் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6295259630384115473″] முகிலன் பிரபாகரன் செகதீசுவரன் பிரசாந்து துறையூர் மயில் வாகனன் பரணிப்பாவலன் வாஞ்சிநாதன்
ஆங்கிலவழிக் கல்வி மோகம் மாறும்!
ஆங்கிலவழிக் கல்வி மோகம் மாறும்! தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும். பள்ளித் தாளாளர் பேச்சு தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஆளுமைப் பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டம் இறகுடி அகோமு (AGM) அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மனோகரன் பங்கேற்றார். இவர்,தமிழ்வழிக் கல்விப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழிக் கல்வி மோகம் மாறும் என்று பேசினார். முகாமிற்கு…
சிவகங்கை இராமச்சந்தினார் நூல் வெளியீடு – நகைமுகன் படத்திறப்பு : ஒளிப்படங்கள்
ஒளிப்படங்கள் கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார் நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6293618733749285777″] ஒளிப்படங்கள் : ஞான அசோகன்
