மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா ?
கண்ணாடியைத் தின்னும் வித்தை எப்படி ? மந்திரமா? தந்திரமா ? அறிவியல் நிகழ்ச்சியில் சுவையான நிகழ்வுகள்! காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி? அறிவியல் உண்மை விளக்கம் தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ‘அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி!’ வாயிலாகப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் வித்தைக்காட்சியும், அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இலெட்சுமி தேவி தலைமை தாங்கினார் சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர்…
த.தமிழ்ச்செல்வி – க.தமிழமல்லன் மணிவிழா
‘வெல்லும் துாயதமிழ்’ மாத இதழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி – தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் மணிவிழாவைக் க.ப.அறவாணர் நடத்தி வைத்தார். முனைவர் தாயம்மாள் அறவாணர் வாழ்த்துரை வழங்கினார். இசைஞர் முருகேச கந்தசாமி வாழ்த்துப்பா பாடினார். த.தமிழ்நேயன், ச.கலைமதி ,செனித் இனியா ஆகியோர் தமிழ் உணர்வுப் பாடல்களைப் பாடினர். முன்னதாக அனைவரையும் ஆசிரியை த.தமிழ்க் கொடி வரவேற்றுப் பேசினார். இம்மணிவிழா குயவர்பாளையம் மகிழ்ச்சி(போன்சிழார்) உணவகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் தமிழ்ச்செல்வி முனைவர் க.தமிழமல்லன் இணையரை வாழ்த்தினார்.
தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டும்! – கடலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டும்! – கடலோனியா நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டுமென இசுபெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரிப் போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்போன்சு உலோபெசு தேனா தெரிவித்துள்ளார். கடந்த பங்குனி 10, 2047 / மார்ச்சு 23, 2016 அன்று பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நடத்தப்பட்டது….
பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு 23 பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒவ்வோர் ஆண்டும் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்பு 23 ஆம் நாள் பங்குனி மாதம் அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கெமரொன் (David Cameron) வாழ்த்துச் செய்தியுடன் நடைபெற்றது. இந் நிகழ்விற்குத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் சேம்சு பெர்ரி (James Berry MP) தலைமை வகித்தார். தலைமை விருந்தினராகத் தெற்காசிய நாடுகளுக்கான வெளி நாட்டுத்துறை அமைச்சர் …
கொழும்பு கம்பன் விழா 2016
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழா 2016 இரண்டாம் நாள் இரண்டாம் (26) அமர்வில் விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந் நிகழ்வில் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் என்ற இராமயண நாடகமும், மேல் முறையீட்டுப் பட்டிமன்றமும் நடைபெற்றன. பா.திருஞானம் – 0777375053
உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைச் சிறையில் அடை !
உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை ! உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு ! தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்! உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்கத் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 11.03.2047 / 24.03.2016 காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. உழுபொறி எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில், பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய…
மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் கணிணிப் பிரிவுத் தொடக்கம்
கணிணிப் பிரிவுத் தொடக்கம் மாத்தளை இந்து தேசியக் கல்லூரியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட கணிணிப் பிரிவினைக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் திறந்து வைத்தார். இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] பா. திருஞானம் – 0777375053 thirunewsfirst@gmail.com
திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கமும் நூல் வெளியீடும்
திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் தை 24, 2047 / 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்(தரமணி), சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுசுமித்து பல்கலைக்கழகப் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான திரு.சிவாபிள்ளை, இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.விசாகன், குமாரபாளையம் எசு.எசு. எம். கல்விக்குழுமத்தின் தலைவரும் நடிகர் பிரபு அவர்களின் சம்பந்தியுமான திரு.எம்.எசு.மதிவாணன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. விசயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இக் கருத்தரங்கில்,…
ஈழத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்துக் காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்!
ஈழத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்துக் காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்! சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு அஞ்சித் தாய்த் தமிழகம் நோக்கி ஏதிலியராய் வரும் தமிழீழ மக்கள், தமிழ்நாட்டில் துன்பங்களுக்கு ஆளாகும் கொடுஞ்செய்திகள் வந்தபடி உள்ளன. கடந்த 06.03.2016 அன்று மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள உச்சப்பட்டித் தமிழீழ ஏதிலியர் முகாமில் அரசு அலுவலர்கள் ஆய்வு நடத்தச் சென்றபொழுது இரவீந்திரன் என்ற ஏதிலியர் தன் மகன் மதுரை அரசு மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலைக் கூறியும் கூட அதை ஏற்க மறுத்த வருவாய்த்துறை அலுவலர் துரைப்பாண்டி என்பவரின் வன்பேச்சால் மனமுடைந்து தற்கொலை செய்து…
புதுவைத் தமிழ்ச் சங்க மகளிர் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மகளிர் விழா, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். விழாவில் பேராசிரியர் இரா.விசாலாட்சி தலைமையில் ‘மகளிர் எழுச்சி‘ எனும் தலைப்பில் பாட்டரங்கம் நடைபெற்றது. கல்லூரி, பல்கலைக்கழக மாணவியர் பதின்மர் கவிதை வாசித்தனர் புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் சிறப்புரையாற்றினார் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச்செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு துணைச்செயலர்…
முனைவர் க.சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது – வாழ்த்துப்பா
தமிழகப்புலவர்குழு கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் க. சிரீதரனுக்குத் தமிழ்ச்சான்றோர் விருது வழங்கியது. பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று நடைபெற்ற தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டத்தை முன்னிட்டுப்பிற்பகல் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க இலக்கியங்களில் அறம், வீரம், காதல், நட்பு, போன்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ்ச்சான்றோர்கள் உரையாற்றினர். முனைவர் மறைமலை இலக்குவனார், கவிஞர் பொன்னடியான் வாழ்த்துரையாற்றினர். கி. ஆ. பெ.வி. கதிரேசன் நன்றி நவின்றார். இந்நிகழ்வின் பொழுது . கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் …
தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் : தீர்மானங்கள்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர் தீர்மானம் – 1 : நன்றியும் பாராட்டும் தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு…
