மாணிக்கவாசகம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கலந்தாய்வுக் கூட்டம்

பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கலந்தாய்வுக் கூட்டம்   தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்தோரை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். இறைவணக்கமாக அபிராமி அந்தாதி மாணவிகளால் பாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்குத் தலைமை தங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சார்ந்த தாமோதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறிவியல்…

மாணிக்கவாசகம் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை பெருந்தலைவைர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா   தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகப் போட்டி போட்டு அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   காரைக்குடி   தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில்…

புதுச்சேரி – தனித்தமிழ்க் கழகத்தின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஒளிப்படங்கள்

  .ஆ. 2047   மாசி – கும்பம் 3  -15.02.2016 புதுச்சேரி தனித்தமிழ்க் கழகம் நடத்திய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா! தலைமை :பெ.தமிழ்நாவன் வரவேற்புரை: சீனு.அரிமாப்பாண்டியன் கருத்துரை: சி.தமிழ்மாறன், சி.வெற்றிவேந்தன், முத்து.சேரன், புதுவைத் தமிழ்நெஞ்சன் சிறப்புரை: முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் நன்றியுரை: கு.அ.தமிழ்மொழி   [ படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம். ]

தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது – கவிஞர் முருகேசு

   உழைக்கும் மக்களின் நாவில் இருக்கும்    தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது.    – உலகத் தாய்மொழி நாள் விழாவில் கவிஞர் முருகேசு உரை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாசி 08, 2047 /  பிப்.20, 2016  அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில், “உழைக்கும் மக்களின் நாவில் உயிர்த்திருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும்,…

தேவகோட்டை மாணிக்கவாசகர் பள்ளியில் தேசியக் குடற்புழு நீக்க நாள்

தேசியக் குடற்புழு நீக்க  நாள்(பிப்.10) பள்ளியில் மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா   தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு  நல்வாழ்வுத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும்  தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர்  சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தாங்கினார். மத்திய அரசு சார்பில் தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு   நல்வாழ்வுத்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு  இரத்த சோகை ஏற்படுவதைத்…

தருசன் படுகொலைக்கு எதிரான மே 17 இயக்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

  தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே!   சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசிப் படுகொலை செய்யப்பட்ட ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தருசன் படுகொலைக்கு நீதி கேட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் தை 22, 2047 / 05-02-2016 வெள்ளி அன்று மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.   தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே! இலங்கையின் அரசியல் சட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதே உண்மை. அமெரிக்கத் தீர்மானம் என்பது…

தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா – கருத்துரைக் கூட்டம்

  2047, தைத்திங்கள் / சுறவத்திங்கள் 24ஆம் நாள் / பிப்.07, 2016/ முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா- கருத்துரைக் கூட்டம் நடைபெற்றது.   அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையுரை ஆற்றினார்.   திருவாவடுதுறை இளையபட்டத்தார், முனைவர் க.தமிழமல்லன் முதலியோர் கருத்துரை வழங்கினர். [படத்தை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]

புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது”

திருக்குறள் அறிஞர் புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “திருக்குறள் 2016 விருது”   புரோபசு சங்கம் (PROBUS CLUB OF CHENNAI) கொண்டாடிய பொங்கல் விழா   சுழற் சங்கத்தின் (ROTARY CLUB) ஆதரவில் இயங்கும் புரோபசு சங்கம் அரசுப் பணியினின்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (IAS OFFICERS) முதலான 350-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைத் தன்பால் கொண்ட ஒரு மாபெரும் சங்கம். 1992-இல் தொடங்கப்பெற்ற இச்சங்கம் உலகளாவிய நிலையில் பாங்கான பல தொண்டுகளை ஆற்றி வருகின்றது. ஆதரவற்ற…

தேவாரம் ஒப்பித்தல் போட்டி: வென்றவர்களுக்குப் பாராட்டு விழா

தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  பள்ளியில் தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களில்  6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள  பிரிவில்  8 ஆம் வகுப்பு  மாணவி  இராசேசுவரி    முதல்  பரிசையும், 7 ஆம் வகுப்பு மாணவி  தனலெட்சுமி,  6 ஆம் வகுப்பு   மாணவர் இரஞ்சித்து  ஆகிய…

அபுதாபியில் சேலம் மேனாள் மாணவர்களின் ஆண்டு விழா -2016

சேலம்  அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்களின்  ஆண்டு விழா -2016   சேலம்  அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்களின்  ஆண்டு விழா அபு தாபி பூட்லண்ட்சு  உணவகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை சபீர் வரவேற்றார்.  நிபல் சலீமின் குரான் குறிப்போடும்  இளைய பழமலையின்  முழக்கத்துடனும் நிகழ்ச்சி தொடங்கியது . குழுமத்தின் தலைவர் பாசுகர்  கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் வருங்காலத் திட்டங்களையும் விவரித்தார். குழந்தைகளின் நடனம், பாடல்கள் அனைவரையும் மனம் குளிர்வித்தது. சிறுவன் துகிலன் மோகன்  எவ்வாறு நவீன விளையாட்டுக்கருவிகள் அவர்களின் குழத்தைப்…

சிறுவர்கள் செய்தார்கள்! வென்றார்கள்!

செய்தார்கள்! வென்றார்கள்!  சுட்டி விகடன்  கவின்கலைச் சான்றிதழ்களைப் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வழங்கிப் பாராட்டுதல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2015- திசம்பர்   மாதம் நடைபெற்ற  கவின்கலை(FA) செயல் திட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சுட்டி விகடனின் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய…