மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1
மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் [embpicasa id=”6247669920340483393″] (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3
கல்கத்தா அருங்காட்சியகப் பதிவுகள் -சொ.வினை தீர்த்தான்
[பெரிய அளவில் காணப் படத்தை அழுத்தவும்] [embpicasa id=”6241501948191427681″]
ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் – மு. இராமநாதன் உரை
ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் தமிழ்க் கல்வி அறிவுரைஞர் மு. இராமநாதன் உரை ஆங்காங்கு (Hongkong) தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல நேரத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் தேவையைப் பற்றியும் சொல்லலாம் என நினைக்கிறேன். நான் ஆங்காங்கு பொறியியல் கலந்தாய்வு (ஆலோசனை) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில், கிழமைக்கு (வாரம்) ஒருநாள் பகல் உணவு…
மொழிப்போர் 50 மாநாடு, மதுரை
தை 10, 2047 / சனவரி 24, 2016 நேரலை – காலை 9.30 முதல் இரவு 8.30 வரை கீழுள்ள தளங்களிலும் நேரலையைக் காணலாம்.. https://www.youtube.com/embed/lUREnLmb-ME http://www.kannotam.com/ மொழிப்போர் – 50 மாநாடு அன்பு அழைப்பு! பேரன்புடையீர்! வணக்கம். தமிழ் வளர்த்த மதுரையில் தை 10, 2047 / 2016 சனவரி 24-இல் நடைபெறும் மொழிப்போர் – 50 மாநாட்டிற்கு உங்களை அழைக்கவே இம்மடல்! பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை விரட்டிட நடந்த விடுதலைப் போராட்ட காலத்திலும், இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும்கூடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1965 மொழிப் போருக்கு ஈடான…
வட்டுக்கோட்டை இளைஞர்கள் இல்ல மாணாக்கர்களுக்கு உதவி
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்லச் சிறார்களுக்கு உரூபா 65000 பெறுமதியான 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன. அத்துடன் இல்லச் சிறார்களுக்கு சிறப்பு நண்பகல் உணவும் வழங்கபட்டது. [படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப்பார்க்கவும்!]
முனைவர் இ.சூசைக்கு இராவணகாவிய உரைவேந்தர் விருது
அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், இ.சூசைக்கு இராவணகாவிய உரைவேந்தர் விருது அளித்த நிகழ்வு தை 03, 2047 / சனவரி 17, 2016 அன்று மாலை திருவரங்கம் சிறீராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விடுதலைவாசகர்வட்டம் மானமிகு மீனாட்சிசுந்தரம் வழக்கறிஞர் அரிகரன் முதலான நண்பர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். இருநூறுபேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திக, திமுக, மதிமுக, காங்கிரசு, பா.ச.க. கட்சிகளில் உள்ள இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். நண்பர் முனைவர் நெடுஞ்செழியனார், பெரியார் பாசறை அன்பழகனார் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் நாச்சிமுத்து ஐயா, திருவரங்கம் தமிழ்ச்சங்கம் செயபாலனார்…
தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்- சுபாசினி திரெம்மல் உரை
செருமனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசு பள்ளிகளே! தங்க நகையே அணியாத நாடு செருமன்! வாழ்க்கையில் கல்விதான் நண்பன்! “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்” எனச் செருமனியிலிருந்து வந்திருந்த பெண் ஆராய்ச்சியாளர் சுபாசினி திரெம்மல் பேசினார். தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். விழாவில் செருமனி தமிழ் மரபு அறக் கட்டளைச் செயலரும், கல்வெட்டு…
ஓய்வறியாக் கல்விப் பணியாற்றும் ஆசிரியை முத்து மீனாள்
ஓய்வறியா கல்விப் பணியாற்றும் ஆசிரியை முத்து மீனாள் தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியாக் கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2015 ஆண்டு முழுவதும் தற்செயல் விடுப்பு உட்பட எந்த விடுப்பும் எடுக்காமல் ஒப்படைப்பு உணர்வுடன் பணியாற்றிய இடை நிலை ஆசிரியர்…
பொ.ப.சம்பந்தம் நினைவேந்தல் ஒளிப்படங்கள்
மார்கழி 18, 2046 / சனவரி 03.01.2016 காலை 11.00 சென்னை படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க. [embpicasa id=”6237217892898428497″]
இசை நாட்டியத்துடன் திருக்குறள் கற்பிப்பு
பள்ளி மாணவர்களுக்கு நடனமாடி இசையோடு திருக்குறளைக் கற்றுக் கொடுப்போம்! நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர்(சேர்மன்) மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லிக் கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயிற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது. பயிற்சிக்கு வந்திருந்தோரை மாணவி பரமேசுவரி வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் இலெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை-அறிவியல் கல்லுரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கிப் பேசுகையில், என் அன்னை தொடக்கப்பள்ளி…
அரிக்கமேடு – ஓர் ஆவணம் : தாழி இதழியல் கருத்தரங்கம்
எமது நிறுவனத்தின் சார்பாக பல அரிய வரலாற்று, கலை, மொழியியல், பண்பாட்டு மீட்டுருவாக்க முயற்சியில் தொடர்ந்து எம்மை ஈடுபடுத்தி வருகின்றோம். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத் தூய பேதுரு மேனிலைப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் கல்விச் சுற்றுலா, புதுவையில் எமது நிறுவனம் சார்பாக நடைபெற்றது; புதுச்சேரி வரலாற்றில் “அரிக்கமேடு – ஓர் ஆவணம்” என்ற தலைப்பில் புதுவை நகரில் அமைந்துள்ள தாழி இதழியல் அலுவலகத்தில் கருத்தரங்க நிகழ்வும் நடைபெற்றது. இந்தத் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கென எமது நிறுவனத்தால் நடத்தப்படும் நான்காம் கருத்தரங்கம் இதுவாகும்….
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மாக்கவி பாரதியார் பிறந்தநாள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மார்கழி 10, 2046 / 26-12-2015 நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி,செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு, துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ எனும் தலைப்பில் கவியரங்கம்…
