நல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளியீட்டு விழா
‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நூல் வெளியீட்டு விழா முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா சென்னை, இராசரத்தினம் கலையரங்கில் மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 அன்று நடைபெற்றது. முதல் நூலை நூலாசிரியர் நன்னன் வெளியிட, தி.மு.க. பொருளாளர் மு.க.தாலின் பெற்றுக்கொண்டார். மு.க.தாலின், தன்னுடைய வெளியீட்டுரையில், “தமிழை – தமிழாக எழுத வேண்டும் என்று 13 நூல்களை நன்னன் எழுதியிருக்கிறார். ‘தமிழ்படும்பாடு’ என்று 9 நூல்களை…
கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’
கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது. மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி…
மருத்துவமாமணி கண்ணப்பன் போற்றி விழாக்கள்
மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின் 81-ஆம் பிறந்தநாள் விழா & 5-ஆம் நினைவுநாள் மறைமலை இலக்குவனார், திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு, பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார். இசைப்பாவலர் இரமணன், பா.ச.க.தலைவர் இல.கணேசன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன், மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்
மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி – இராபியா குமாரன்
மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற துய்ப்பறிவும், மகிழ்ச்சியும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக விமானம் ஏறித் துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனத்தை ஆட்கொண்டிருந்தது. அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி தந்த…
புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரதாசு சுவாமிகள் விழா
நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கம் நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கார்த்திகை 19அ 2046 / திசம்பர் 05, 2015 அன்றுநடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து விழாவுக்குத் தலைமை வகித்தார். புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு,பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார். புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு, வேணுகோபால் பொருளர் தி.கோவிந்தராசு, துணைச் செயலர் பாவலர் கோ.கலியபெருமாள் ஆகியோர்…
வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர்
வந்தவாசியில் வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிலவேம்பு மருத்துவநீர் வழங்கப்பட்டது. கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015: வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எலும்பு முறிவுக் காய்ச்சல் (Dengue fever)பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் நில வேம்புக்கருக்கு (கசாயம்) வழங்கும் விழா வந்தவாசி தேரடியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். சங்கச் செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். சங்க அறிவுரைஞர் கவிஞர் மு.முருகேசு, சங்கப் பொருளாளர் எ.தேவா, கிளை நூலகர்…
தகவல், தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி
விக்கிபீடியர்களுக்கான பயிற்சி கடந்த ஒரு மாதமாகத், தமிழ்நாட்டின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனம் (SCERT) மூலமாகத் தமிழ்நாட்டின் 30 மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தகவல், தொடர்பாடல் நுட்பப் (ICT) பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 50 ஆசிரியர்கள் என்று மொத்தம் 1500 ஆசிரியர்கள் மூன்று நாட்களுக்கு இப்பயிற்சி பெறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒரு முழு நாள் முழுதும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆசிரியர்கள் பங்களிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மா.க.ஆ.ப.நி.(SCERT) நியமித்த பயிற்றுநர்களுடன், சேலத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும்…
மன்னையில்…தமிழன்னை ஊர்வலம்
மன்னையில் #தமிழர்_தேசிய_முன்னணியின் தமிழன்னை ஊர்வலம் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழரினம் எங்கள் ஆணி வேர்! படத்தைப் பெரிதாகக் காண அழுத்தவும்
வந்தவாசி வாசகர் வட்ட முப்பெரு விழா
தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ – மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா . வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம் இன்போடெக்கு கணிணி நிறுவனம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம், இணைந்து 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழாவினை நடத்தின. இதனை முன்னிட்டுப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் கார்த்திகை 04, 2046…
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலருக்குச் சமூக இலக்கியச் சுடர் விருது
புதுவைக் கவிதை வானில் கவிமன்றம் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அவரின் சமூக, இலக்கிய பணிகளைப் பாராட்டிச், சமூக இலக்கியச் சுடர் விருது வழங்கப் பட்டது. விருதினை புதுச்சேரி காவல்துறையின் முதுநிலை கண்காணிப்பாளர் முனைவர் சந்திரன் வழங்கினார்கள். உடன் கவிதைவானில் கவிமன்ற நிறுவனர் திருமதி கலாவிசு, புலவர் இரெ.சண்முவடிவேல், கவிஞர் பைரவி தொழிலதிபர் கணேசன் ஆகியோர் உள்ளனர்
கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் வினைதீர்த்தான் தலைமையுரை
கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் வினைதீர்த்தான் தலைமையுரை கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு “வங்கத்தின் கங்கை” இலக்கிய கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த ஐப்பசி 19, 2046 / 01.11.2015 ஆம் நாள் கூட்டத்திற்குத் தலைமைதாங்கும் வாய்ப்பு சங்கத்தின் 75 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் செயலர் திருமிகு சித்ரா இராமகிருட்டிணன், துணைத்தலைவர் திரு நக்கீரர் அன்பால் சொ.வினைதீர்த்தானுக்கு அமைந்தது. அவர் தம்முடைய உரையில் “தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டு” அங்கு வந்திருந்த சுவைஞர்கள், பங்காளர்களை வரவேற்றார்; இளம் மாணவர்களுக்குப் பாரதியார்…
மறைமலை இலக்குவனார் பங்கேற்ற மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரி விழா
மயிலாடுதுறை அ.வ.அ.கல்லூரியில் பாவேந்தர் 125-ஆம் பிறந்தநாள்விழா ஐம்பெரும்விழா பேராசிரியர் துரை.குணசேகரன் எழுதிய இரு நூல்கள் வெளியீடு
