செய்தியாளர் வீட்டை நொறுக்கியது தொடர்பான முறையீடு

  பதிவஞ்சல் – அஞ்சல் அட்டை ஒப்புகையுடன் அனுப்புநர் எசு.சபியுதீன்(செய்தியாளர்) 42 அ., .பட்டகால்தெரு, திட்டச்சேரி-609 703. நாகப்பட்டினம் மாவட்டம் பேசி : 98425-22442 பெறுநர் மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை-600 009. பொருள்: என்னையும் என்குடும்பத்தாரையும் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்-திட்டச்சேரி பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன் (தி.மு.க)தலைமையில் அடையாளம் தெரியாத 40க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை அடித்து நொறுக்கியது – தொடர்பாக   ஐயா   நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். என்னுடைய வருமானத்திற்கு வீட்டில் செடி வளர்ப்புத்…

“இது இனப்படுகொலையா? இல்லையா?” – சென்னையில் ஆவணப்படம் வெளியீடு!

   இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியுள்ள “இது இனப்படுகொலையா இல்லையா?” ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு,   சித்திரை 30, 2046 / 13.05.2015 மாலை, சென்னை வடபழனி ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது.   உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையேற்றார். ஆவணப்படத்தின் இயக்குநர் வ. கவுதமன் முன்னிலை வகிக்க, படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.  படத்தைத் தலைவர்கள் வெளியிட, மாணவத் தோழர்கள் செம்பியன், சோ.பிரிட்டோ முதலானோர் ஆவணப்படத்தைப் பெற்றுக் கொண்டனர்.  உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்தியப்பொதுவடைமைக்…

இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்

 சென்னை,  அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015  சனிக்கிழமை  (படத்தின் மேலழுத்திப்  பெரிதாகக் காண்க.)  

தொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்

  குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!  

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.  முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.   இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர்…

பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும்

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.   தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு…

பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா

சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி “தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்”- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை சித்திரை 11, 2046 / ஏப்பிரல் 24, 2015 அன்றுநடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் கணினிகளில் தமிழின் அறிமுகத்தைப் பற்றியும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. மறைந்த திரு நா.கோவிந்தசாமி, இணையத்திற்கு தமிழை அறிமுகப்படுத்தியது நினைவுகூரப்பட்டது. [மென்பொருட்ளைக் கொண்டு தமிழ் கற்றல், கற்பித்தல் எப்படி என்பதைப் பற்றி மாணவர்கள் உரையாற்றுகின்றனர்.]…

ந.மணிமொழியன் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழா – படங்கள்.

உலகத்திருக்குறள் பேரவை சார்பில் அதன் பொதுச்செயலர் ந.மணிமொழியனின் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழாவை முன்னிட்டு ஐந்து நாள் திருக்குறள் திருவிழா  கடந்த திங்கள் நடைபெற்றது. நிறைவுநாளில் இலக்கியச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கவியரசு நற்பணிமன்றத்தலைவர் இரா.சொக்கலிங்கம் தொடக்கவுரை யாற்றினார். நகைச்சுவைப்  பேரரசர் முனைவர் கண.சிற்சபேசன் நடுவராக இருந்து தமிழ்இலக்கியம் அழகு விருந்தா? அறிவு மருந்தா?  என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  முனைவர் இரா.மோகன் பொன்.சந்திரசேகரன்,  கவிஞர் இரா.இரவி,  முனைவர  நிருமலா மோகன், ச.செந்தூரன், ச.திருநாவுக்கரசு ஆகியோர் வாதிட்டனர்.  கவிஞர் அசோக்குஇராசு நன்றி நவின்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட…

தென்னாப்பிரிக்கஉலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பணி

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளை ஆற்றிவரும் அளப்பரிய கல்விப் பணி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிப்ரிக்கக் கிளை கடந்த வாரம் வரலாற்று முதன்மை மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வைத் தென்னாப்பிரிக்காவின் தர்பன் நகரில் நடத்தியது. தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சும் நிலை நிலவும் தென்னாப்பிரிக்காவில் இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை ஏற்பாடு செய்த அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான பட்டயச் சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழாவில் உலகெங்கும் இருந்து…