படைப்பிலக்கியங்களால் மட்டுமே முடியும்!
படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின் மன உலகை மாற்றிட முடியும்! குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார். இவ்விழாவிற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.சீவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘படித்துப் பழகு‘…
புதுவைத் தமிழ்ச் சங்கம் : மகளிர் நாள்
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக மகளிர் நாள் விழா விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கத்தில் புதுவைப் பல்கலைக் கழக தமிழியல் துறைத் தலைவர் முனைவர் இளமதி சானகிராமன், புதுவை அன்னை தெரேசா செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன், புதுவை குழந்தைகள் நலக்குழுத் தலைவர் முனைவர் வித்யா இராம்குமார், புதுச்சேரி வாழும் கலை ஆசிரியர் எம்.தையல்நாயகி ஆகியோர் கருத்துரை வழங்கினர். துணைத்தலைவர்கள்…
“சொக்கலிங்கம் அக்கதமி” யின் இலவச வகுப்புகள்..!
புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அக்கதமி” யின் இலவச வகுப்புகள்..! புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேசு) அவர்களது நினைவாக நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் தொடங்கப்பட்ட “சொக்கலிங்கம் அகதமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. தொடக்கத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது கல்விக்கழகமானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட…
இளைஞர்களிடம் படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது
இன்றைய இளைஞர்களிடம் இலக்கிய நூல்களைப் படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் இத்திங்கள் (மாசி/மார்ச்சு) தொடக்கத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் அதிகமாய் அக்கறை செலுத்திவரும் இன்றைய இளைஞர்களிடம் தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்களைப் படிக்கிற ஆர்வம் வெகுவாய் குறைந்தே காணப்படுகிறது என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். வேலூர் கவிஞர் பிரதீப்இரவி எழுதிய ‘வீடு திரும்பும் வேளையில்.. ‘ கவிதை நூலை…
‘மீண்டும் வருவோம்’ – குறும்படம் திரையிடல்
தாயக-தமிழகக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் தமிழீழ மண்ணில் இக்காலத்தில் இளம் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தொல்லைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ‘மீண்டும் வருவோம்’ குறும்படம் சென்னையில் சிறப்பாக வெளியிடப்பட்டுத் திரையிடப் பட்டுள்ளது. பாசறைப் பட்டறை வழங்கிய ‘மீண்டும் வருவோம்’ என்ற இக் குறும்படம் மாசி 24, 2046 / 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக மகளிர் நாளன்று மாலை 6 மணிக்கு வடபழனியில் அமைந்துள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க மண்டபத்தில் வெளியிடப் பட்டது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட்டு வைக்க…
“எங்கள் தேசம்” இதழின் வெளியீட்டு விழா
மாசி 29, 2046 / 13-03-15 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா, மாசி 29, 2046 / 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக்குத் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராசு வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.
மும்பையில் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம்
ஞாயிறு இராமசாமி அவர்களால் நடத்தப் பெறும் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம், மும்பை, செம்பூர் மகளிர் சங்க(மகிலா சமாசம்) அரங்கில் மாசி 17, 2046 – 01/03/15 அன்று மாலை 6.மணிக்கு நடைபெற்றது. கவியரங்கத்திற்குக் கவிஞர் ஆதிரா முல்லை தலைமை வகித்தார். இதில் மும்பைத் தமிழ்ச்சங்கத் தலைவர், செயலாளர் முதலான 13 கவிஞர்கள் கவிதை படித்தனர். கவிஞர் பரணி அவர்களின் கவிதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன. கவியரங்கின் முடிவில் ஞாயிறு இராமசாமி அவர்களால் தமிழிசைப் பாடல்களும்…
இராணி மேரிக்கல்லூரி : தேசியக் கருத்தரங்கம், ஒளிப்படங்கள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்திய செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம், சென்னை [பெரிதாகக் காணப் படங்களைச் சொடுக்கவும்]
உலகத் தாய்மொழிநாள், புதுவைத் தமிழ்ச் சங்கம்
புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பாக உலகத் தாய்மொழிநாள் – பாவாணர் பிறந்தநாள் விழா மாசி 16, 2046 / 28-02-2015 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்றார் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை வகித்தார் புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்கள் கலைமாமணி கோ.பாரதி, செந்தமிழ்ச் செம்மல் சீனு.வேணுகோபால், பொருளர் தி.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்…
குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா
பிரித்தானியா குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா மாசி 16, 2046 – 28/02/2015 மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இந் நிகழ்விற்கு மாணவர்கள் வேட்டியும் சட்டையும் அணிந்தும் மாணாக்கியர் சேலையணிந்தும் வந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து பேச்சு, கவிதை, நாடகங்கள் மற்றும் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. சிறப்பு விருந்தினர்களாகக் குரோளி தன்னாட்சி அவைத் தலைவர் திரு கிளிர் பீட்டர் இலாம்பு(Mr.Cllr Peter Lamb…
கைலாசநாதர் கோயிலில் பிறந்தநாளுக்கான பூசை
பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் மக்கள் முதல்வரின் 67 ஆம் பிறந்தநாளுக்கான பூசை மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கைலாசநாதர் கோயிலில் மாவட்ட இளைஞர்கள், இளம்பெண்கள்பாசறை சார்பாகச் சிறப்பு பூசை செய்யப்பெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஒ.ப.இரவீந்திரநாத்துகுமார், பெரியகுளம் நகர்மன்றத்தலைவர் ஒ.இராசா, மாவட்ட எம்ஞ்சியார் அணி இளைஞர் செயலர் எல்லப்பட்டி முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் முருகானந்தன், நகரத் துணைச் செயலர் அப்துல்சமது, கூட்டுறவுச் சங்க இயக்குநர் ஏ.சி.சிவபாலு, தொழிற்சங்கச்…
பேரூராட்சி நிருவாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்
பேரூராட்சி நிருவாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியைக்கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்தலக்குண்டு பகுதியில் பேரூராட்சி சார்பாக நிலக் கவர்வுகள் நீக்கப்பட்டன. இதில் நிருவாகத் தலையீடு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் எடுத்து விட்டு மற்ற பகுதிகளில் எடுக்காமல் விட்டுவிட்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விளைச்சல் நிலங்கள் அனைத்தும் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இதனைக்கண்டித்து மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் அ.நசீம்,…
