ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்
சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014 அன்று நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா ஒளிப்படங்கள் படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.
உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசு பெறும் த.சீனிவாசன்
செல்வா-குமரி அறக்கட்டளை வழங்கும் 2014 ஆம் ஆண்டிற்கான உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசை திறமூல ஆர்வலர் திரு. த. சீனிவாசன் வென்றுள்ளார். இளைஞரான இவருக்கு நல்ல கணிநிரல்அறிவும் பட்டறிவும் இருப்பதுடன், நல்லஉள்ளமும், தமிழார்வமும், தன்னறிவைப் பகிரும் பேருள்ளமும் கொண்டுள்ளார். பல இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவும்விளங்குகின்றார். ‘கணியம்’ என்னும் மின்னிதழில் ஏறத்தாழ இரண்டாண்டுகளாக நல்ல பங்களிப்புகள் செய்து வருகின்றார். இவையனைத்தும் படைப்புப்பொதுமை (‘கிரியேட்டிவ் காமன்சு’) பகிர்வுரிமத்தின்கீழ் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை. பார்க்கவும்: http://www.kaniyam.com/ இந்திய இலினக்ஃசு (Linux) பயனர் குழுவின் சென்னைக்கிளையின்தலைவராகவும் திரு த.சீனிவாசன் இருக்கின்றார். இவரது…
புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்தக்திற்கான ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன. கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கப் படங்கள்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துத்தான் கல்லூரியில் புரட்டாசி 5, 2015 / 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. (பெரிய அளவில் காண ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காணவும்)
‘கண்மதியன் கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா
புழுதிவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
புழுதிவாக்கம் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கம், புழுதிவாக்கம் அரிமா சங்கத்துடன் இணைந்து வரும் புரட்டாசி 5, 2045 / 21.09.14 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 2.30 மணி வரை இத் தெருவில் இலவச மருத்துவ முகாம் நடத்துவதாகவும் பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெருமாறும் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கத் தலைவர் திரு இ.நல்ல பெருமாள் என்ற குமரன் தெரிவித்துள்ளார். குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை மருத்துவர் முத்துக்குமார் தலைமையில் மருத்துவர்கள், பொது மருத்துவச் சோதனை, எலும்பு தொடர்பான பரிசோதனை, சருக்கரை…
பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.
ஆட்சிமொழிக்கருத்தரங்கம், புதுவைத் தமிழ்ச்சங்கம்
ஆட்சிமொழிக்கருத்தரங்கம் , புதுச்சேரி
புதுவைத் தமிழ்ச் சங்கம் ஆவணி 14, 2045 / ஆக.30, 2014 இல் ஆட்சிமொழிக்கருத்தரங்கம் ஒன்றைநடத்தியது. அதன்தலைவர் வெ.முத்து தலைமை தாங்கினார். செயலர்மு.பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். தனித்தமிழ் இயக்கத் தலைவர்முனைவர் க.தமிழமல்லன் புதுச்சேரியின் ஆட்சிமொழியே என்பதைச் சட்டப்பொத்தகம்அரசாணைகள் சட்டமன்றத்தில் 1965 முன்வடிவு வைக்கப்பட்டபோது ச.ம.உக்கள் அதன்மேல் நிகழ்த்திய உரைகள் முதலியவற்றைச் சான்றுகளாக்கி நிறுவிக்காட்டினார். தமிழுக்கு இதுவரை நன்மை செய்த முன்னாள் முதல்வர்கள் பாரூக், இராமசாமி ஆகியோரைப் பாராட்டியும் பேசினார். இதில் ந.மு.தமிழ்மணி, கல்லாடன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். கடைசியில் விசாலாட்சி நன்றி கூறினார்.
மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா (கி.பி. 1014-2014)
ஆடித் திருவாதிரையில் இராசேந்திர சோழன் பிறந்த நாள் விழா மாமன்னன் இராசேந்திர சோழன் 1000ஆவது முடிசூட்டு விழா, கங்கை கொண்ட சோழபுரத்தில் மக்கள் வெள்ளத்தோடு சீரோடும்சிறப்போடும் ஆடி 8, ஆடி9, 2045 / 24, 25-சூலை, 2014 நாள்களில் நடைபெற்றது. விழாவில் மாமன்னன் இராசேந்திரன் பற்றிய நூலும் குறுந்தகடும் வெளியிடப்பெற்றன. கருத்தரங்கமும் நடைபெற்றது. கங்கை கொண்ட சோழபுரம் காட்சிகள் சூலை ‘கண்ணியம்’ இதழில் மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை, இந்திய அரசும் தமிழக அரசும்…
ஐரோப்பிய பண்டுவ மருத்துவக் கழகத்தின் விருது பெறும் முதல் ஆசியர் – தமிழர் மரு. வீரப்பன்
விருதாளர் மரு.சி.வீரப்பனைப் பாராட்டிய பொறி.இ.திருவேலன் அறிமுக உரை! தலைமை விருந்தினர் மாண்பமை நீதிபதி இராசேசுவரன் அவர்களே! சுழற்கழக மாவட்டம் 3230-இன் மேனாள் ஆளுநரும், இந்நாள் உறுப்பினர் சேர்க்கைக் குழுவின் அறிவுரைஞருமான, சிறப்பு விருந்தினர், சுழலர்(ரோட்டேரியன்) ஏ.பி. கண்ணா அவர்களே! இவ்விழாவை நடத்தும் தலைவர் திரு கணேசன், செயலாளர் திரு வெங்கடேசன், திரு இராமநாதன், திரு இளங்கோ, பிற பொறுப்பாளர்களே!! எனது கெழுதகை நண்பரான, மருத்துவத்துறையில் சீர்மையாளர் (Vocational Excellence Award) என விருது பெறவிருக்கும் தகைமையாளர் மருத்துவமணி சிதம்பரம் வீரப்பன் அவர்களே! அவர்கள்தம்…
அ.வாடிப்பட்டியில் பரிசுகள் வழங்கும் விழா
விடுதலை நாளை முன்னிட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விடுதலை நாளை முன்னிட்டுப் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, நடனப்போட்டி முதலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமாலா பிச்சைமணி தலைமை தாங்கினார். ஒன்றியப்பெருந்தலைவர் செல்லமுத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளும் சுழற்கேடயங்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், முன்னாள் கெங்குவார்பட்டிப் பெருந்தலைவர் காட்டுராசா, தேவதானப்பட்டிமன்ற…
