மலைபோல் பற்று எனக்கில்லை! – கெருசோம் செல்லையா

மலைபோல் பற்று எனக்கில்லை! மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும், மாபெரும் பற்றும் எனக்கில்லை. கலையழகுள்ள சிலைபோல் கட்டும், கைத்திறன் அறிவும் எனக்கில்லை. விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும், விண்ணின் அன்பும் எனில் இல்லை. இலைபோல் கருகும் இவ்வாழ்வைக் காட்டும், இறைமுன் வந்தேன், குறையில்லை! – கெருசோம் செல்லையா

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 490.3 பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 491.4 செப்பிய…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 251. சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4 252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 373.3 253. தணிவு இல் காதலினால்…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250   226. அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 295.4 227. பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 297.2 228. புந்தி…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225   201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்:…

அல்லல் அறுப்பானை வாழ்த்துக! – மாணிக்கவாசகர்

அல்லல் அறுப்பானை வாழ்த்துக! சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறர் உருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே!  – மாணிக்கவாசகர்

வாசிங்டன் சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டம்

பிப்பிரவரி 16-இல் வாசிங்டன் பகுதியில் நடந்த சிறப்புத் தமிழ் இலக்கியக் கூட்டமான “தமிழ் இலக்கியத்தில் சமயம்” மிகவும் நன்றாக நடந்து முடிந்தது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ”இமயம் முதல் குமரி வரை முருகன் வழிபாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் வாசு அரங்கநாதன் சித்தம் பற்றித் ”திருமூலரும் எட்மண்ட் கூசெரியும்” (Edmund Husseri) தலைப்பில் நல்லதொரு உரை ஆற்றினார்கள்.                              …

இலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்

இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர்.  இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…

காரைக்கால் பேயின் பெண்ணியம் – முனைவர்.ப. பானுமதி

    ஆண்களுக்குத் துணையாக நின்று  அவர்களின் வாழ்வில் சுவை சேர்ப்பவர்கள் பெண்கள். தமிழகம் கண்ட பெண்மணிகள் பலரும் “தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்னும் வள்ளுவரின் வாக்கின் படி சிக்கல்களின்போது தம் கற்பையும் நிலை நிறுத்திக் கொண்டு தம் குலத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் துணிச்சலுடன் வாழ்ந்து வரலாறு படைத்துள்ளனர். அதே சமயத்தில் அநீதி கண்ட போது ஆர்த்தெழுந்து அதனை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்தி வெற்றியும் பெற்றுள்ளனர். மன்னனின் மடத்தனத்தைச் சுட்டிக் காட்டி, முலை திருகி மூட்டிய நெருப்பால் ஊரை…