தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!
: தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்! தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன் (பரிபாடல்: 9) “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத…
நா.கணேசன் சிறப்புச்சொற்பொழிவு : நிகழ்ச்சிப்படங்கள்
[பங்குனி 19, 2047 /ஏப்பிரல் 01, 2016 பிற்பகல் 3.00 தமிழ்த்துறை, சென்னைப்பல்கலைக்கழகம் பொழிவு : விண்கலங்கள் ஆய்வறிஞர் முனைவர் நா.கணேசன்: சங்கக்காலக்கலைகளில் மழுவாள் நெடியோன் தலைமை : முனைவர் அ.பாலு வாழ்த்துரை : கவிஞர் ஈரோடு தமிழன்பன் வரவேற்புரை : முனைவர் ய.மணிகண்டன் [பெரிதாகக்காணப் படங்களை அழுத்தவும்!] [embpicasa id=”6270073482500500321″]
புறநானூற்று அறிவியல் வளம் -இலக்குவனார் திருவள்ளுவன்
புறநானூற்று அறிவியல் வளம் அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன. சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய…
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 1 அறிவியல்துறைகளில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகிறது; எனினும் தக்கத் தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பின்றி ஒலி பெயர்ப்புச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையுமே மிகுதியும் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்தளத்தினர், வலைப்பதிவர்கள் எனப் பல்வகையினரும் கலைச்சொற்கள் வெளியீட்டிலும் கலைச்சொல் ஆக்கத்திலும் ஈடுபட்டுவருவதும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் துறைதோறுமான கலைச்சொற்களஞ்சியங்கள் பெருக வேண்டி உள்ளன. கருத்துச் செறிவு மிக்க, சுருங்கிய வடிவிலான கலைச்சொற்களை ஆயிரக்கணக்கில் உருவாக்க…
அரபிக்கடலில் தமிழர் ஆட்சி! – மயிலை சீனி.வேங்கடசாமி
அரபிக்கடலில் தமிழர் ஆட்சி! அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப்பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத்தீவுகளில் அதற்கு முன்னர் ஆட்சி புரிந்து வந்த அரசர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்.1 மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப்போரில் ஈடுபட்டான்.2 கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும்,…
இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன் – சீனி.வேங்கடசாமி
இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன் நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர் குடிச் சின்னமாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த அரசர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ண வேண்டியுள்ளது. குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன் மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை….
சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் – மயிலை சீனி.வேங்கடசாமி
சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம். நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு…
புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 1/3
1 சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்பு நூல்களான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு வகையான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங்காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட…
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள்
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள் கூடல் (மதுரை) பொய்யா விழாவின் கூடற் பறந்தலை – அகநானூறு: 16:14 கொடிநுடங்கு மறுகிற் கூடற்குடா அது அகநானூறு:149: 14 யாம்வேண்டும் வையைப்புனல் எதிர்கொள்கூடல் பரிபாடல் : 10:40 4.மதிமலை மாலிருள் கால்சீப்பக் கூடல் பரிபாடல் : 10: 112 வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல் பரிபாடல் : 10:12 கூடலொடு பரங்குன்றினிடை பரிபாடல் : 17: 23 கொய்யுளை மான்தேர்க் கொடித்தேரான் கூடற்கும் பரிபாடல் : 17:45 புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்…
சென்னைப்பல்கலைக்கழகம் – சுந்தர ஆவுடையப்பன் பொழிவு
கந்தையா-செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 பொழிஞர் : முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்
அசோகர் காலமே வள்ளுவர் காலம் வள்ளுவர் காலம் சங்கக் காலம் என்றோம். சங்கக் காலப் புலவர்களில் பலர் இவருடைய திருக்குறளை எடுத்தாண்டுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனார் “தெய்வம் தொழான் கொழுநன் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை என்ற பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” என்று கூறுகின்றார். இதில் வள்ளுவர் மொழியை எடுத்தாண்டு அவரைப் பொய்யில் புலவர் என்று பாராட்டுவதையும் காண்கின்றோம். அதனால் வள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு முற்பட்டவர் என்று அறிகின்றோம். சாத்தனார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும்…
சங்கக்கால வாழ்த்துகள் சில!
வாணாள் வாழ்த்து பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 5 அறம் நனி சிறக்க அல்லது கெடுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 7 அரசுமுறை செய்க! களவுஇல் ஆகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 8 நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 9 மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 10 ஆயிர வெள்ள ஊழி வாழி!…
