வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு – மு.கருணாநிதி

வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு   உலகில் பல பகுதிகளில் உருவான இனங்கள் மொழிச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின எனினும்; அவற்றில் மொழியில் இலக்கியம் கண்டு, அதற்கு இலக்கணமும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பே தொடங்கிய வளர்ச்சிக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே மெருகேற்றிக் கொண்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தமிழ் இனத்துக்கே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரமாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் பழங்கால வாழ்க்கை முறைக்குறிப்புகள், ஒழுக்கம் பற்றிய பல செய்திகள், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் நிலத்தில் நடைமுறையில் இருந்தன. எனினும்…

மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – புலவர் செந்துறைமுத்து

  மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்    தமிழ் இலக்கிய உலகு உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது. அந்நூலின் பெயரே அதன் பழமையைக் காட்டுவதாயுள்ளது. தொல்காப்பியத்துக்கு முன் அகத்தியம் இருந்தது என்பர். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையின், கிடைத்துள்ள நூல்களுள் மிகவும்…

தொல்காப்பியம் விழுமிய நூல் – மு.வை.அரவிந்தன்

தொல்காப்பியம் விழுமிய நூல்   தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கணநூல் தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இது ஒளிர்கின்றது. இதனை இயற்றிய தொல்காப்பியரின் குரல், காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. தொல்காப்பியம் தனக்குப் பின் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழிகாட்டி நடத்திச் செல்லுகின்றது. தொல்காப்பியத்தின் கருத்தை உணரவும் உணர்த்தவும் புலவர் பெருமக்கள் காலந்தோறும் முயன்று வந்தனர். அம்முயற்சியின் விளைவாய் உரைகள்…

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே! – சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே!   தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை. வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் “என்மனார்’ “என்ப’ “என்மனார் புலவர்’ எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே…

தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் – சி.இலக்குவனார்

  கிறித்து காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நிலையையும், தமிழ் மொழி இலக்கிய நிலையையும் அறிவதற்குத் தொல்காப்பியமே வாயிலாய் அமைகின்றது. எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்காப்பியமே ஒரு எல்லைக் கல்லாக விளங்குகிறது. தொல்காப்பியர் இலக்கண ஆசிரியராக மட்டுமல்லாமல் புலவராக, மொழியியலாளராக, மெய்யியலாளராக, வரலாற்றறிஞராக மன்பதையியல் அறிஞராகத் திகழ்கிறார். தொல்காப்பியர் தமிழிலும், சமசுகிருதத்திலும் சிறந்த புலமையாளராக விளங்குகிறார். தொல்காப்பியம் அவரது அறிவுக்குச் சான்றாய்த் திகழ்கின்றது. – பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம் 20  

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி – முனைவர் க.இராமசாமி

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி     தமிழினத் தொன்மையையும் தனித்தன்மை யையும்நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள்தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல்மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கணநூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும் கூட இதற்குநிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்குமுன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய் தமிழ்இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.   தமிழால் வாழ்ந்தோர் பலர். தமிழுக்காகவாழ்ந்தோர் மிகச்சிலர். அம் மிகச்…

தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும்

இயல் பகுப்பும் நூற்பா அளவும்      தொல்காப்பியர் நமக்கு அருளிய தொல்காப்பியம் எனும் நூலில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 9 இயல்கள் உள்ளன. இயல்களின் பெயர்களையும் நூற்பா எண்ணிக்கையையும் அறிவதற்குத்துணை செய்யும பாக்கள் வருமாறு:   எழுத்ததிகார இயல்கள்   நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு, மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம் உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம், தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு.   1. நூல் மரபு, 2….

தொல்காப்பிய விளக்கம் 15 – பேராசிரியர் சி. இலக்குவனார்

  (சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி)   3. பிறப்பியல் தமிழ் மொழிக்குரிய எழுத்தொலிகளைப் பற்றியும் அவை பயிலு மாற்றையும் முன் இரு இயல்களில் ஆசிரியர் தொல்காப்பியர் கூறினார். இனி அவை தோன்றும் முறை பற்றிக் கூறத் தொடங்குகின்றார். எழுத்தொலிகள் பிறக்கும் முறைபற்றி மேலை நாட்டு மொழி நூலார்களும் இந்நூற்றாண்டில் கூறத் தொடங்கியுள்ளனர். எழுத்துகளின் பிறப்பிடங்களைக் கொண்டே எழுத்துகளை, மிடற்றினம், பல்லினம், இதழினம், அண்ண இனம் என்றெல்லாம் பெயரிட்டுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு பெயரிடாது போயினும்,…

தொல்காப்பிய விளக்கம் 14 – பேராசிரியர் சி. இலக்குவனார்

(சித்திரை14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி)   76. உப்பகாரம் ஒன்றென மொழிய இருவயின் நிலையும் பொருட்டாகும்மே. உப்பகாரம் = பு, ஒன்று என மொழிப = ஒரு மொழிக்கு ஈறாகும் என்ற கூறுவர். இருவயின் நிலையும் = தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும், பொருட்டாகும் = பொருண்மைத்தாகும். காட்டு: தபு : இஃது ஒலியைத் தாழ்த்திச் சொல்ல ‘நீ சா’ எனத் தன்வினையாகும்; ஒலியை உயர்த்திச் சொல்ல நீ ஒன்றனைக் கொல் எனப் பிறவினையாகப் பொருள்…

தொல்காப்பிய விளக்கம் 13 – பேராசிரியர் சி. இலக்குவனார்

(சித்திரை 07, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 20, 2014 இதழின் தொடர்ச்சி) 67. குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் குற்றியலுகரம் = குறைந்த ஓசையை, உடையது எனப்படும் ‘உ’,  முறைப்பெயர் மருங்கின் = (நுந்தை என்னும்) முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை = ஒற்றாய் நின்ற நகரத்தின் மேல், நகரமொடு முதலும் = நகரமெய்யோடு மொழிக்கு முதலாகி வரும். உகரம் ஓசையில் குறைந்து வருவது, நுந்தை என்னும் சொல்லில் மொழிமுதலில் உண்டு என்று அறியற்பாலது. ‘நுந்தை’ என்பதனையும், ‘நுமக்கு’ என்பதனையும்…