தலைப்பு-தொல்காப்பியர் மொழிநூல்புலவர் : thalaippu-tholkappiyar mozhinuulpulavar

   சொற்களுள் சில பொருளுணர்த்தும் மரபினையும் புதிய சொற்கள் அவ்வப்போது படைத்துக்கொள்ளப்படலாமெனவும், வழங்கும் சொற்களையே உருக்குறைத்து வழங்குதல் உண்டெனவும், சொல்லுக்குரிய பொருளென்ற குறிப்பால் வேறு பொருள் பெறப்படுதல் உண்டெனவும் ஒரு பொருள் தரும் இரு சொற்களைச் சேர்த்துக் கூறல் இயல்பெனவும் வழக்காற்றில் சொல் பயனுறும் முறையைத் தெள்ளிதின் விளக்குவதனால் ஆசிரியர் மொழி நூற்புலவராகவும் விளங்குகின்றார்.

   மொழி என்பது மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவி; அக்கருவி வழக்காற்றினுள்ளும் செய்யுளுள்ளும் எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்பதனைப் பதினெட்டு இயல்களால் ஆராய்ந்து கூறியுள்ள சிறப்பு வேறு எம்மொழிக்கும் இல்லாத ஒன்றாகும்.

செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  :

தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 119