புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும் 49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம். வரிசை எண் நூலின் பெயர்  1. அறிவியல் சொற்கள் ஆயிரம்       2. அறிவியல் வகைமைச் சொற்கள் 3000     3. அன்றே சொன்ன அறவியல் – சங்கக் காலம்  4. இலக்குவனார் இதழுரைகள்   5. இலக்குவனார் நூறு  6. கட்டுரை மணிகள்  7. கணிணியியலில் தமிழ்ப்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 9: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 9 நம் மொழி தமிழ், நம் இனம் தமிழ், நம் நாடு தமிழ்நாடு. என்றாலும் கூட நாம் திராவிடத்தை, பகுத்து அறிவு வளர்ச்சிக்கும் தன்மதிப்பு எழுச்சிக்கும் அடிப்படையாக எடுத்துக் கொள்கிறோம். இந்தத் திராவிட உணர்வைத்தான் இன்றைக்குப் பெரியாரியம் என்று சொல்கிறார்கள். அதற்கான திராவிட மண்தான் இந்தத் திராவிட உணர்வை விதைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மொழி வாயிலாகப் பார்க்கும் போது நம் மொழி தமிழ்தான். நம்…

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில…

வெருளி நோய்கள் 836-840: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 831-835:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 836-840 குமளிப் பழம் / சீமை இலந்தம் பழம் (Apple) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் குமளி வெருளி.ஆப்பிள் பழம் என்பது பொதுவாகச் சீமை இலந்தை என அழைக்கப் பெறுகிறது. அரத்த(இரத்த) நிறத்தில் இருப்பதால் அரத்தி என்கின்றனர் சிலர். ஆனால் செவ்வல்லியின் பெயர் அரத்தி. எனவே, இதற்குப் பொருந்தாது. ‘உன்னாம்’ என்றும் ‘குமளி’ என்றும் அகராதிகளில் உள்ளன. பயன்பாட்டுவிவரம் தெரியவில்லை. ஓர் அகராதியில் குறிப்பிடப்படும் சொல் வேறு அகராதிகளில் இருப்பதில்லை. ஏதேனும் ஒரு சொல்லை நாம்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19: திசைப்பெயர்கள் இக்கோப்பில் இந்நிலத்தின் வடக்கு திசையில் கோயில் மனை உள்ளது என எழுதப் பெற்றுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனத் திசைகளைக் குறிப்பிடும் திசைப்பெயர்கள் அடுத்து வல்லினம் மிகும்.  வடக்கு + திசை = வடக்குத் திசை கிழக்கு + கடல் = கிழக்குக்கடல் மேற்கு + சுவர் = மேற்குச்சுவர் வடக்கு + தெரு =…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8 திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு செய்யக்கூடியது ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யக்கூடியது ஒன்றிய அரசு செய்யக்கூடியது போன்ற மூவகை திட்டங்கள் போட்டுச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் முன் வந்து செய்யக்கூடியதும் வர வேண்டும். அது மட்டுமல்ல இங்கே சமற்கிருத கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் கருதுநிலை பல்கலைக்கழகங்களாக அஃதாவது டீம்டு யுனிவர்சிட்டி (Deemed University) என்று ஆக்கினார்களோ, அதே போன்று உலகின் பல நாடுகளில் ,பல…

தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 12 : பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரும் மோசடி– தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 13 இடைச்செருகல்கள் இருவகை இடைச்செருகல்களை நாம் இருவகைகளாகக் குறிக்கலாம். ஆரிய நூல்கள் தம் நூல்களில் இல்லாச் சிறப்புகளை இருப்பதுபோல் காட்டுவதற்காகப் பிற நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை உட்புகுத்துவது. இதன் மூலம் ஆரிய நூல்களைச் சிறப்பானதாகவும் செம்மையானதாகவும் பிற நூல்களுக்கு முன்னோடியாகவும் காட்டுவது. மற்றொரு வகை தமிழ் நூல்களின் சிறப்புகளைக் குறைப்பதற்காகவும் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதற்காகவும்  சமற்கிருத நூல்களின் வழி நூலாக அல்லது சமற்கிருத நூல்களில் இருந்து கருத்துகளை எடுத்துக்…

வெருளி நோய்கள் 796-800: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 791-795 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 796-800 கிறித்துப் பிறப்பு நாள் குறித்த பேரச்சம் கிறித்துநாள் வெருளி. கிறித்துப்பிறப்பு(கிறித்துமசு) கொண்டாட்டங்கள் குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் சிறாருக்கே மிகுதியாக வருகிறது.கிறித்துப் பிறப்பு வெருளி என்றால் கிறித்து பிறந்தது குறித்த பேரச்சம் என்றாகிறது. கிறித்துப் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த பேரச்சத்தைத்தான் இங்கே குறிக்கிறது. எனவே, சுருக்கமாகக் கிறித்து நாள் என்பது சரியாக இருக்கும்.00 கிறித்துப்பிறப்பு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி.கிறித்து நாள் வெருளி உள்ளவர்களுக்குக் கிறித்துப்பிறப்பு விளக்கு வெருளி வரும் வாய்ப்பு…

வெருளி நோய்கள் 756-760: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 751-755: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 756-760 காலியாக உள்ள அறை குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் காலியறை வெருளி.காலி என்பது அறிவியல் சார்ந்த நல்ல தமிழ்ச்சொல். அறை வெறுமையாக உள்ளது அல்லது வெற்றிடமாக உள்ளது என்று சொல்கிறோம். ஆனால் அறையில் காற்று உள்ளதே! அப்படி என்றால் அறையில் ஒன்றுமில்லை, வெற்றறை என்பது தவறல்லவா? எனவேதான் வேறு பொருள் இல்லை, ஆனால் காற்று உள்ளது என்னும் பொழுது கால்(காற்று)+இ=காற்றை உடையது என்னும் பொருளில் காலி என்கின்றனர்.காலி அறை என்றில்லை. திடலாகவும் திறந்த வெளியாகவும்…

தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்! – இலக்குவனார்திருவள்ளுவன்

இலக்கியம் – நூல் அறிமுகம் நவம்பர் 17, 2025 தாய் / thaaii.com நவம்பர் 17: தமிழ்ப் போராளி இலக்குவனாரின் 116 ஆவது அகவை நிறைவு நாள். தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்! பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’. இலக்குவனார் பள்ளி மாணாக்கராக இருந்த பொழுதே கவிஞர், சொற்பொழிவாளர், மொழி பெயர்ப்பாளர் என விளங்கினார். புலவர் மாணாக்கராக இருந்த பொழுது கட்டுரையாளர், நூலாசிரியர், தனித் தமிழ்ப்பரப்புநர், தமிழாசிரியர்…

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பெருமங்கலமும், 2025

தமிழேவிழி!                                      தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் & இலக்குவனார் இலக்கிய இணையம் உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 116 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) வுிழா நாள் ஐப்பசி 30,2056 / ஞாயிறு 16.11.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தொகுப்புரை: கவிஞர்…

1 2 45