தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் + பதிப்புரை

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் முன்னுரை – க. அன்பழகன் தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் – தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால்,…

குவிகம் சிறுகதைப் போட்டி

குவிகம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி முதல் பரிசு உரூ.5000/ இரண்டாம் பரிசு உரூ-3000/ மூன்றாம் பரிசு  உரூ.2000/ கதைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் நவம்பர் 30,2023 அனுப்ப வேண்டிய மின்வரி !  magazine.kuvikam@gmail.com

தோழர் தியாகு எழுதுகிறார் 175 : ஓய்வு கொள்ள நேரமில்லை!

(தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது தொடர்ச்சி) ஓய்வு கொள்ள நேரமில்லை! இனிய அன்பர்களே! பொள்ளாச்சி அருகே கள்ளிப்பாளையத்தில் இருந்து எழுதுகிறேன். இங்கே தொலைபேசித் தொடர்பே திணறும் போது இணையத் தொடர்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கிருந்து நாள்தோறும் தாழி மடல் அனுப்புவதே போராட்டமாகத்தான் உள்ளது. இந்தத் திங்கட் கிழமை செய்தி அரசியல் நடத்த முடியாமற்போயிற்று. இன்று அறிவன் கிழமையில் ‘தமிழ்நாடு இனி’ அரசியல் வகுப்புக்கும் விடுமுறைதான்! எவ்வளவு இடர்ப்பாட்டிலும் அரசியல் வகுப்பை நிறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஏப்பிரல் 15 கந்தர்வக்கோட்டை அருகே…

தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 172 : பார்ப்பனப் பெருவாழ்வு! 8/8தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் பொழில்வாய்ச்சி (பொள்ளாச்சி) கள்ளிப்பாளையம்புதூர் தாய்த் தமிழ்ப் பள்ளியின் வெள்ளி விழா நேற்று(10.04.23) இனிதே நடந்து முடிந்தது. இனிய நண்பர் சந்துருவை நீண்ட காலத்துக்குப் பிறகு பார்த்துப் பேசிக் கொண்டிருக்க இது நல்ல வாய்ப்பாயிற்று. அவருடனான நட்பு-தோழமை பற்றி நிறைய எழுத வேண்டும். பிறகு எழுதுகிறேன்.நேற்றைய நிகழ்வில் அவர் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைப்பட்டோர்…

ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும்

(ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் இறைவன் உறையும் துறைகள் பலவும் ஒரு திருப்பாட்டிலே தொகுக்கப் பெற்றுள்ளன. “கயிலாய மலையெடுத்தான் கரங்களோடுசிரங்கள் உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்பயில்வாய் பராய்த்துறைதென் பாலைத்துறைபண்டெழுவர் தவத்துறை வெண்துறை”. என்று பாடினார் திருநாவுக்கரசர். திருப்பராய்த்துறை காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் அப் பெயர் பெற்றது போலும்: காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட…

தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி தாெடர்ச்சி) இனிய அன்பர்களே! ·         ஒடுக்கப்பட்ட மாணவர்களை இழிவுபடுத்தித் தற்கொலைக்குத் தள்ளி விடுதல்;         பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடதுசாரி, அம்பேத்துகர்வழி, பெரியார்வழி, சிறுபான்மை நலன், தேசிய இன நலன் சார்ந்த மாணவர் இயக்கங்கள் மீது இழிவும் வன்முறையும்  ஏவுதல்;         தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி வழி இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கத் தூண்டுதல்;         மாணவர் சங்கத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்தல், கெடுத்தல்;         வெறுப்புக் கூச்சல், வெறுப்புரைகள் வழியாகப் பலகலைக்கழக அறிவுச் சூழலையும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 118 : கம்பிக்குள் வெளிச்சங்கள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று-தொடர்ச்சி) அன்பர் குருநாதன் சிவராமன் எழுதுகிறார்…’கம்பிக்குள் வெளிச்சங்கள்‘ “வசந்தத்தின் இடிமுழக்கம்” எனக் கொண்டாடப்பட்ட நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மரணத் தண்டனை வரை சென்றவர் தோழர் தியாகு. காங்கிரசு, நக்குசல் இயக்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு) எனப் பல அரசியல் தளங்களில் பயணித்தவர். தனது அரசியல் பாதையைத் தன்னாய்வு செய்து கொள்வதிலும், படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதிலும் சிறிதும் தயக்கம் கொள்ளாதவர் என்பது அவரது எழுத்துகளில் புரிகிறது. மார்க்குசியக்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 . சான்றோரும் ஊர்ப்பெயரும்

                  ( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி)  சான்றோரும் ஊர்ப்பெயரும்       தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன. நாவீறுடையார்       நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப்…

தோழர் தியாகு எழுதுகிறார்  62

(தோழர் தியாகு எழுதுகிறார் 61 தொடர்ச்சி) தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு திறந்த மடல் பாராட்டே அவமானம்? இந்து- தமிழ், திசை நாளேட்டில் சென்ற திசம்பர் 12 ஆம் நாள் அண்ணல் அம்பேத்துகர் குறித்து நீங்கள் எழுதியுள்ள “அவமானமே பாராட்டு!” என்ற கட்டுரை படித்தேன். அம்பேத்துகர் தாம் வாழ்ந்த காலத்தில் ஏசப்பட்டார், இழிவுபடுத்தப்பட்டார், அவர் மறைந்து இத்துணைக் காலம் கழித்தும், அவரது 65ஆம் நினைவு நாளிலும் (2022 திசம்பர் 6) அவமதிக்கப்பட்டார். அன்று போலவே இன்றும் இந்தச் சமூகம் மாறாமல் இருப்பதே காரணம் என்று நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சரியானது. அம்பேத்துகருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் நீறு பூசுவதும், அவருக்குச் செருப்பு மாலை போடுவதும்…

தோழர் தியாகு எழுதுகிறார்  58: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! – நலங்கிள்ளி

(தோழர் தியாகு எழுதுகிறார் 57 தொடர்ச்சி) நலங்கிள்ளி எழுதுகிறார்: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! தோழர் தியாகு “தாழி மடல்” என்னும் இதழை மின்ம அஞ்சல் வழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தி வருகிறார். தியாகு எழுதுவது அனைத்தும் அறிவுச் சுரங்கத்தைச் சளைக்காமல் தேடும் பணியே! அதனைத் “தாழி மடல்” மீண்டும் மெய்ப்பித்துள்ளது. தாழி மடல் வாசகர்கள் தோழர் தியாகுவிடம் அவர் எழுதும் எழுத்துகள் குறித்து வினாத் தொடுக்கலாம். வினாக்களுக்கு அடுத்தடுத்த இதழ்களில் விடையிறுக்கப்படும். தாழி மடலைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி) பளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி:            அதோ            பாரடி            மயிலே                                       அதோ  பாரடி                                       மயிலின்        அழகு  பாரடி                              இதோ           பாரடி            இனிமை                                              இன்னும்        பாரடி                                       இருசிட்         டிணைதல்      பாரடி                              கொஞ்சம்                 பாரடி            கிளிகள்                                       கொஞ்சல்                பாரடி                                       அணிலும்                விரைதல்        பாரடி                             …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 30   தமிழில் தொல்காப்பியர் காலம்வரை  இன்ன இடைநிலைகள் இன்ன காலத்தை உணர்த்தும் என்ற வரையறை ஏற்படாமல் இருந்திருக்கலாம். பழந்தமிழில் சொற்களெல்லாம் ஓரசை, ஈரசை உடையனவாகவே இருந்தன. அவற்றுடன் துணை வினை சேர்ந்து காலம் அறிவித்தன. த் இறந்த காலத்தையும், உம் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும், வ், ப் எதிர்காலத்தையும், இன் அல்லது இ இறந்தகாலத்தையும், பகுதி இரட்டித்தலால் இறந்த காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை பழந்தமிழ் இலக்கியங் களாலும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். நிகழ்காலத்தை அறிவிக்கின்ற கிறு,…