ஒருங்குகுறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் -கருதத்தக்கன

தமிழ் இணையக் கல்விக்கழகம் ‘ஒருங்குகுறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்‘ – ஒருநாள் கருத்தரங்கம் 21.02.2045 / 05.03.2014   சென்னை கருத்தாளர் : இலக்குவனார் திருவள்ளுவன் தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்     மேற்குறித்த தலைப்பிலான த.இ.க. கருத்தரங்கத்திற்குக் கட்டுரை அளிப்பது தொடர்பாக இயக்குநருடன் தொடர்பு கொண்ட பொழுது யாரிடமும் கட்டுரை வாங்கவில்லை என்றும் உத்தமம், கணித்தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள், என்றும் பார்வையாளர்கள் அவற்றின் அடிப்படையில் கருத்துகளை வழங்கலாம் என்றும் தெரிவித்தார். அவ்வாறாயின் இந்நிகழ்வு சொற்பொழிவுக்கூட்டம் என்றுதான் கருதப்பட வேண்டும். அனைவரிடமும் கட்டுரை கேட்டு…

செய்திக்குறிப்புகள் சில

    ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க  நாடாளுமன்றில்அறிக்கை     இந்தோநேசியாவில் காநீர்ப்பழத்தை உண்ணும் புனுகுப்பூனையின் கழிவில் வெளியேறும் கொட்டையிலிருந்து உருவாக்கப்படும் காநீர் : 1 குவளை 5,000 உரூபாய் நிதி முறைகேடு தொடர்பாகச் சீக்கிய அமைப்புக்கள்  தொடுத்த வழக்கில் இந்தியத் தலைமையாளர் மன்மோகனுக்கு  அழைப்பாணை அனுப்பியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்   தேர்தல் நாடகம் : இலங்கைக் கடற்படை மீது, இராமேசுவரம் காவல்நிலையத்தில்  கண்துடைப்பு வழக்கு மரபணு மாற்றப்பட்ட…

செய்திக்குறிப்புகள் சில

வேளாண்மைத் துறை சார்பில் உரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்: முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார் உரூ.12.81 கோடி செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்,  புதிய கட்டடங்களை முதல்வர் செயலலிதா திறந்து வைத்தார்.   உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 159 ஆவது பிறந்த நாளில் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் அதன்  தனி அலுவலர்(பொ) முனைவர் க. பசும்பொன் அவர்கள் தல்லாகுளம் அருகில் உள்ள உ.வே.சாமிநாத(ஐய)ர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து  வணக்கம் தெரிவித்தார்கள்.   மொகாலி: பஞ்சாப் மாநில வேளாண் மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற …

‘மறுமலர்ச்சி’ இயக்குநர் பாரதிக்கு மறுமலர்ச்சி அளியுங்கள்!

காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி). அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி.. அதன்பிறகு சில திரைப்படங்களை அவர் இயக்கினாலும் கூட மறுமலர்ச்சி எட்டிய வெற்றியை அவற்றால் எட்ட முடியவில்லை.. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்” அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது “மறுமலர்ச்சி” இதுவே இத்திரைப்படத்தின் சிறப்பை வெளிப்படுத்தும். இயக்குநர் பாரதி இதுவரை தான் சம்பாதித்த எதையுமே தனக்கென்று சேர்த்துக்கொள்ளாமல் ஏழை…

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப்பள்ளிகள் – 5 : வெற்றிச்செழியன்

  தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி தாய்த்தமிழ் மழலையர் தோட்டம் கோபி பள்ளி ஏன் தொடங்கப்பட்டது? மேடைகளில் ஏறித் தமிழ்ப்பெருமை பேசுவது, பட்டிமன்றங்களில் தமிழைக்கொட்டி முழங்குவது, கருத்தரங்கம் நடத்தித் தமிழுக்கு வளம் சேர்ப்பது, பக்கம், பக்கமாக எழுதித் தமிழ்ப்பயிரை வளர்ப்பது, இவற்றை எல்லாம் முழுமையான தமிழ்ப்பணி என்று கருதாமல், மானுடத்தின் உயிரான கல்வியை, தமிழர்களின் உயிர் வேரான தமிழ்வழிக்கல்வியை ஓங்கிப்பிடித்து, கல்விப்பணி செய்வதுதான் தமிழ் இனத்தின் கேடு நீங்கச் செய்யும் வழிமுறைகளில் முதன்மையானது என எண்ணி, எதிர்கால நாற்றங்கால்களான நம் தமிழ்க் குழந்தைகளை, நமது…

பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார்

    பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14)  சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது.   தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன்

இனப்படுகொலை காங்.கிற்கு எதிராகத் தமிழ் மாநிலக் கக்கன் காங்கிரசு

பேராயக்கட்சி ஆட்சியல் உள்துறை அமைச்சராக இருந்தும் எளிமையால் பெயர் பெற்றவர் கக்கன்.  இவர் போன்ற உழைப்பாளிகளையும் ஈகையரையும் பேராயக் கட்சி புறக்கணித்தது. அவர்கள் கருத்துகளை ஒதுக்கித் தள்ளியது. இதனால் பேராயக் கட்சியான காங்.கில் பலர் மனப்  புழுக்கத்தில் உள்ளனர்.  அவர்களில் ஒரு பகுதியினர்  கக்கன் பெயரில் தமிழ் மாநிலக் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்க உள்ளனர். மதுரை மாவட்டத் துணைத்தலைவராகக் காங்.கில் இருந்த பெரியசாமி இதற்கான ஏற்பாடுகளை ஆற்றி வருகிறார்.   சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர்  செவ்வி அளித்தார். அப்போது அவர்  பின்வருமாறு கூறினார்….

பேராசிரியர் பழ. கண்ணப்பன் மறைவு

பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர் பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த முதலணித் தமிழர்களுள் ஒருவர்;  வாட்டர்லூ வட்டாரப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி  நடத்தியவர்களுள் ஒருவர்; பல இடங்களில் இருந்தும் தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்; வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா முதலானவற்றில்  கலந்து அருமையான உரைகள் ஆற்றியவர். பேராசிரியர் குடும்பத்தில் அவரை இழந்து வாடும் மனைவி…

நாய்க்கும் கிளிக்கும் தோழமை

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஒலிமடா பகுதியில் கணபதி என்பவர் வசிக்கிறார். இவர் பப்பி  என்னும் நாயையும் ரோசி என்னும் கிளியையும் வளர்த்து வருகிறார்.  நாய் கம்பித்தடுப்பு உடைய  கூண்டுபோன்ற பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் பப்பி/நாய் இருந்த  கூண்டிற்கு ரோசி/கிளி சென்றுள்ளது. உடனே பப்பி/நாய் வெறியுடன் ந்த பப்பி, ரோசி/கிளியைக் கடிக்க முயன்றது.  விர்ரென்று பறந்து ரோசி உயிர் தப்பியது. மீண்டும் ஒரு முறை பப்பி கூண்டிற்கு ரோசி சென்றது.  ஆனால்,  இந்தமுறை  அமைதியாக இருந்தது. இதையடுத்து, நாட்கள் செல்ல..செல்ல….

திமுக. காங்.கூட்டணி அமைந்தால் எதிர்த்துப் பரப்புரை: சீமான்

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைக் காங்கிரசு சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.   திருச்சியில் 01.02.14 சனிக்கிழமை அவர் அளித்த செவ்வி:   நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.    இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியை எதிர்த்துப் பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தோற்றுப் போன…

மலேசிய முத்து நெடுமாறனுடன் ‌செவ்வி – இரா.தமிழ்க்கனல்

  மலைக்கவைக்கும் செல்லினம் செயலி!       ’செல்பேசி இல்லாதவர்கள், செல்லாதவர்கள்’ என்று ஆகிவிடும் போல உலகம் முழுவதும் நிலைமை மாறிவருகிறது. அலைபேசியின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காகத் தொலைத்தொடர்பு வல்லுநர்கள் இடைவிடாது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை மெய்ப்பித்து வருகிறார், மலேசியாவைச் சேர்ந்த கணினிக் கணிய(மென்பொருள்) வல்லுநர், முத்து நெடுமாறன். தமிழில் இணையம் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, கணினித் தமிழ்த் துறையில் களம் இறங்கி, இன்று உலக அளவில் முன்னணி எழுத்துரு வல்லுநர்களில் ஒருவராகப் பாராட்டப்படுகிறார். அலைபேசிகளில்  தமிழைப் பயன்படுத்துவதற்கான…

எண்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் வழங்கப் பெற்றன

பண்ருட்டி ராமச்சந்திரன்  முதலான எண்மருக்குத்  தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர்  செயலலிதா வழங்கினார். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா  வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர்…