வெருளி நோய்கள் 1011-1015: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1006-1010: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1011-1015 1011. சாக்கடைப் புழை வெருளி –  Manholephobia  சாக்கடைப் புழை(Manhole) குறித்த வரம்பற்ற பேரச்சம் சாக்கடைப் புழை வெருளி. manhole என்பதன் நேர் பொருள் மனிதத் துளை.   இது புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பைக் குறிக்கிறது. புதை சக்கடைக்குள் மனிதர் இறங்குவதற்கு அமைக்கப்பட்ட வாயில் அல்லது வழி். இதனைப் புழை என்பர். எனவே,  சாக்கடைப்புழை எனப்படுகிறது. 00 1012. சாச்சன் வெருளி –  Saxophonophobia  சாச்சன் இசைக் கருவி/ சாச்சன் இசைப்பி (சாச்சபோன்/saxophone)குறித்த…

வெருளி நோய்கள் 996-1000: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 991-995 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 996-1000 சனவரி 11 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 11 வெருளி.சனவரி 11 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 11 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.11ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 11 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 12 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 12 வெருளி.சனவரி 12 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை…

க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? – திருத்துறைக் கிழார்

(கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? க.  உன் தாய்மொழி பல வகையிலும் உருக்   குலைக்கப்படுகிறது.   உ.  உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை    ௩.  உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை! வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால்   எழுதியுளர்.     ௪.  உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு         அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில் இல்லை.    ரு.   உனது…

தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் திரு வாரத்திற்கு அனைவருக்கும் வாழ்த்து உரித்தாகுக ! துன்பம் அகன்று இன்பம் நிலைக்கட்டும்! அறியாமை நீங்கி அறிவு வளரட்டும்! இன்மை இன்மையாகி வளமை நிலைக்கட்டும்! சுற்றுப்புறத் தூய்மை சிறக்கட்டும்! பொங்கும் மங்கலம் தங்கட்டும்! உழவும் தொழிலும் உயரட்டும்! கால்நடைச் செல்வம் பெருகட்டும்! சுற்றமும் நட்பும் மகிழட்டும்! செல்வமும் செழிப்பும் ஓங்கட்டும் !      தமிழுடன் வாழ்ந்து தமிழாய் வாழ, போக்கிநாள் வாழ்த்து! பொங்கல் நல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! உழவர் திருநாள் வாழ்த்து ! காணும் பொங்கல் வாழ்த்து! வாழ்த்தி மகிழும் இலக்குவனார் திருவள்ளுவன்…

வெருளி நோய்கள் 971-975: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 966-970: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 971-975 சமச்சீர் தொடர்பான தேவையற்ற பேரச்சம் சமச்சீர் வெருளி.யாவரையும் சமமாக எண்ணாமல் தன்னை உயர்த்திக் கொள்ளும் சமச்சீர்மை காணா மனப்போக்கு குறித்துப் பிறருக்கு பேரச்சம் ஏற்படுகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான தேவையற்ற பேரச்சத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.சமச்சீர்மையின்மையால் மூட்டுப்பகுதிகள் பாதிப்படைந்து ஏற்படும் முடக்குவாத நோய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில் சேர்ப்பர்.sym என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அதே. metri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அளவு.00 சமயம்/மதம் தொடர்பான வெறுப்பும் பேரச்சமும் சமய வெருளி.சமயம்/மதம் பெயரில்…

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும் 49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம். வரிசை எண் நூலின் பெயர்  1. அறிவியல் சொற்கள் ஆயிரம்       2. அறிவியல் வகைமைச் சொற்கள் 3000     3. அன்றே சொன்ன அறவியல் – சங்கக் காலம்  4. இலக்குவனார் இதழுரைகள்   5. இலக்குவனார் நூறு  6. கட்டுரை மணிகள்  7. கணிணியியலில் தமிழ்ப்…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 9: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 9 நம் மொழி தமிழ், நம் இனம் தமிழ், நம் நாடு தமிழ்நாடு. என்றாலும் கூட நாம் திராவிடத்தை, பகுத்து அறிவு வளர்ச்சிக்கும் தன்மதிப்பு எழுச்சிக்கும் அடிப்படையாக எடுத்துக் கொள்கிறோம். இந்தத் திராவிட உணர்வைத்தான் இன்றைக்குப் பெரியாரியம் என்று சொல்கிறார்கள். அதற்கான திராவிட மண்தான் இந்தத் திராவிட உணர்வை விதைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மொழி வாயிலாகப் பார்க்கும் போது நம் மொழி தமிழ்தான். நம்…

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும்  – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில…

வெருளி நோய்கள் 836-840: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 831-835:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 836-840 குமளிப் பழம் / சீமை இலந்தம் பழம் (Apple) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் குமளி வெருளி.ஆப்பிள் பழம் என்பது பொதுவாகச் சீமை இலந்தை என அழைக்கப் பெறுகிறது. அரத்த(இரத்த) நிறத்தில் இருப்பதால் அரத்தி என்கின்றனர் சிலர். ஆனால் செவ்வல்லியின் பெயர் அரத்தி. எனவே, இதற்குப் பொருந்தாது. ‘உன்னாம்’ என்றும் ‘குமளி’ என்றும் அகராதிகளில் உள்ளன. பயன்பாட்டுவிவரம் தெரியவில்லை. ஓர் அகராதியில் குறிப்பிடப்படும் சொல் வேறு அகராதிகளில் இருப்பதில்லை. ஏதேனும் ஒரு சொல்லை நாம்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19: திசைப்பெயர்கள் இக்கோப்பில் இந்நிலத்தின் வடக்கு திசையில் கோயில் மனை உள்ளது என எழுதப் பெற்றுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனத் திசைகளைக் குறிப்பிடும் திசைப்பெயர்கள் அடுத்து வல்லினம் மிகும்.  வடக்கு + திசை = வடக்குத் திசை கிழக்கு + கடல் = கிழக்குக்கடல் மேற்கு + சுவர் = மேற்குச்சுவர் வடக்கு + தெரு =…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 7: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 8 திட்டத்தை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு செய்யக்கூடியது ஒன்றிய அரசுடன் இணைந்து செய்யக்கூடியது ஒன்றிய அரசு செய்யக்கூடியது போன்ற மூவகை திட்டங்கள் போட்டுச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் முன் வந்து செய்யக்கூடியதும் வர வேண்டும். அது மட்டுமல்ல இங்கே சமற்கிருத கல்விக்கூடங்கள் எல்லாவற்றையும் கருதுநிலை பல்கலைக்கழகங்களாக அஃதாவது டீம்டு யுனிவர்சிட்டி (Deemed University) என்று ஆக்கினார்களோ, அதே போன்று உலகின் பல நாடுகளில் ,பல…