மலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்
மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத் தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில் தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு…
நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா
கனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது. நிகழ்வு : முற்பகல் 10.00 மணி. தொடர்புகளுக்கு : பிரபா – 416-402-1372, இரகு – 647-299-7443. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம்…
புதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா
ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 முற்பகல் 10.00 சாவகச்சேரி, ஈழம் புதிய சுதந்திரன் இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா
17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள்
17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு: செய்முறைப் பயிற்சிகள் உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு சூ லை 6,7,8, 2018 நாள்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600 உரூ அரைநாள் பயிற்சி, 900 உரூ முழு நாள் பயிற்சி) இதனுடன் ஒரு நிரலாக்கத் திருவிழாவும் உள்ளது….
உத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர்
ஆனி 22 – 24, 2049 : 6-8/07/2018 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
இங்கிலாந்து திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஆகிய நாள்களில் இங்கிலாந்தில் இலிவர்பூல் நம்பிக்கைப் பல்கலைக்கழகத்தில் (Liverpool Hope University) இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. ஆசியவியல் நிறுவனம், ஓப்பு பல்கலைக்கழகத்துடனும் பிற அமைப்புகளுடனும் நிகழ்த்தும் இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழகத் தமிழ்வளர்ச்சி அமைச்சர் ம.ப.பாண்டியராசன் சிறப்புரையாற்றுகிறார். இம்மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நண்பகல் 11.00-1.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அமர்வில் 4 ஆம் அரங்கில் …
நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை
புதன் கிழமை 13.06.2018 மாலை 5.00 சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14 உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் இலக்கிய வேந்தன் அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா
தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! ‘’யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’, ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் ! முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது. சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது. அந்தவகையில்…
தமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்
தமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் ! பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது. செருமன்…
தமிழ்ப்பேராய விருதுகள் 2018
தமிழ்ப்பேராய விருதுகள் 2018 திரு இராமசாமி நினைவு அறிவியல்-தொழில் நுட்பக் கல்விநிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு மடல் படவடிவில் உள்ளது. காண்க.
மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு
மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிசு ஆவணி 23 & 24, 2049 சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018 – சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும் – சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள் அன்புசால் தமிழுறவுகளே ! பாரிசு மாநகரில் ஆவணி 23 & 24, 2049 சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும். பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்) ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய இறுதி…
