குவிகம் இல்லம்: அளவலாவல்

கார்த்திகை 16, 2049 / திசம்பர் 02, 2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவலாவல் ஒளிப்படக்கலைஞர் எழுத்தாளர் ‘கிளிக்கு’  இரவி திருவாட்டி இரவிச்சந்திரன் தொடர்பிற்கு : 97910 69435, 89396 04745   இல்லம் அடைய

சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019

தை 26, 2050   2019ஆம் வருடம் பிப்ரவரி 9 நேரம்:-11மணி முதல் 6 மணி வரை கொமட்சுகவா சகுரா அரங்கம் சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள் அனைவருக்கும் அன்புநிறைந்த இனிய வணக்கம்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 /   2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை…

இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு

மார்கழி 21, 2049  சனிக்கிழமை 05.01.2019 பிற்பகல் 2.00-5.00 உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் தலைமை: பேரா.நடராசா சிரீ கந்தராசா இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு கருப்பொருள்:  இலங்கை வடமாகாணக்கல்வி நிலை தொடர்பிற்கு: சச்சிதானந்தன், தலைவர் – 07788 196426 சிவலிங்கம், செயலாளர் – 07984 079371 திருவாட்டி தேவநாதன், பொருளாளர் – 07973 287038

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை

கார்த்திகை 14, 2049 வெள்ளி  30.11.2018 பிற்பகல் 3.00 பவளவிழா கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு பொழிஞர்:  கவிஞர் அ.வெண்ணிலா தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைக்கழகம்

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் – 6 ஆவது கூட்டம்

கார்த்திகை 13, 2049 / வியாழக்கிழமை / 29.11.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7 இராகவன் குடியிருப்பு 3 ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 6 ஆவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை: முனைவர் வ.வெ.சு (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து வருகிற நேர் தெரு; அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) பேசுவோர் குறிப்பு : விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இலக்கியப் பேச்சாளர்….

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் கார்த்திகை 11, 20149 / 17.11.2018 மாலை 4.00 இந்தியப் பன்னாட்டு மையம், புது தில்லி (India International centre. Lodhi Road, New Delhi.) புது தில்லியில் புரட்டாசி 06-07, 2049 /   செட்டம்பர் 23 – 24,  2019 நாள்களில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில்…

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம், பொன்விழா, சென்னை

சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் பொன்விழா, சென்னை கார்த்திகை 10, 2049 திங்கள் 26.11.2018 மாலை 5.30 இரசிய கலாச்சார மைய அரங்கம், சென்னை 18 விருதுகள் வழங்கு விழா  

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44

  கார்த்திகை 08, 2049  சனி 24.11.2018 மாலை 6.00  சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018  இலக்கியச் சிந்தனை நிகழ்வு    582  குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 44 ஓவியக்கலைஞன் அமுதோன் பன்முகக்கலைஞன் சுரேசு சீனு  

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இலக்கியச் சொற்பொழிவு

  பேரன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும்  இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  இம்மாதம்  கார்த்திகை 09, 2049  ஞாயிற்றுக்கிழமை 25-11.2018 அன்று கிழக்கு நேரம்  இரவு 9:00 மணி  முதல் 10:00 மணிவரை  பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத  இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டத்தில்   ‘இராசராச சோழன் – வரலாறும்,பண்பாடும்’  என்ற  தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார்  சிறப்புப் பேச்சாளர், பேராசிரியர் பா. இறையரசன் [தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)].  இந்த இலக்கியக்கூட்டத்தில்  நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு  இலக்கிய இன்பம் பெற  அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தில் வாழும் கவிஞர் தாராபாரதி

கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை  23.11.2018  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்  கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி  அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் கவிமுகில் கவிஞாயிறு தாராபாரதிபற்றிச்  சிறப்புரை  :  முனைவர் இரா. மோகன்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன் தகுதியுரை: செல்வி ப. யாழினி   உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதி   திரு. கிருட்டிணா இனிப்பகம்  

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்: கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018 பிற்பகல் 5 மணிக்கு (635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும். கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல்  கார்த்திகை 11 / 27.11.2018  வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு…

மாவீரர் நாள், அமெரிக்கா

  கார்த்திகை 11, 2049 / செவ்வாய்/ 27.11.2018 மாலை 6.05 80-51, 261ஆம் தெரு, கிளென் ஓக்கு, புதிய யார்க்கு – என்.ஒய்.11004 மாவீரர் நாள்   எழுச்சி உரை:  பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கம்  நினைவுரை: வி.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பிற்கு:   917 8800 320