இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு

இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு  உ.வே.சாமிநாத(ஐய)ர் உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு  சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல்   இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு,    ஆழ்வார்பேட்டை    தை 14,    சனிக்கிழமை 27 -01 – 2018          மாலை 6.00  மணி

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்  – பல்வழி அழைப்பு வழியாகக் கலந்துரையாடல்

பேரன்புடையீர், வணக்கம்.  பேரவையின் மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  வரும் தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28 அன்று, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கிய கூட்டத்தில் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் முனைவர் மு. இளங்கோவன். இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இலக்கியச்…

கருத்தில் வாழும் கவிஞர்கள் :  மாக்கவி பாரதி -சென்னை

அன்புடையீர், வணக்கம் .   இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து கருத்தில் வாழும் கவிஞர்கள் என்கிற தொடர் நிகழ்வை மாதந்தோறும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று நடத்த இருக்கிறோம். இந்தத் தொடரின் தொடக்க நிகழ்வு தை 13, 2049 26.01.2018 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நிகழ இருக்கிறது. நிகழ்ச்சிக்குத் தலைமை : திரு வானவில் க. இரவி மாக்கவி பாரதிபற்றிச் சிறப்புரை  : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா  ‘அன்னம் விருது’ பெற இருப்பவர்  : கவிஞர் நிரஞ்சன் பாரதி…

சனவரி 25 இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, திருச்சிராப்பள்ளி            

  தை 12, 2049  வியாழன் சனவரி 25, 2018 மாலை 3.00   உலகமய ஆதிக்கத்திற்கு எதிராக, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு ஒற்றை இந்திய ஆட்சிக்கு எதிராக…… மொழிப்போர் ஈகியர் நாளில்   தமிழ்த்  தேசியத் தன்னுரிமை மாநாடு இடம்: தமிழ்நாடு பல்நோக்கு சமுகப்பணி  மையம், பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி பொதுவுடைமைக்கட்சி (மா.இலெ.) மக்கள் விடுதலை 9443079552/7299999168

மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா

  தை 13, 2049  வெள்ளி  26.01.2018 மாலை 5.00 முதல் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் விழா புலவர் புஞ்சனையரசன் அரங்கம் திருவள்ளுவர் மன்றம் மறைமலைநகர் சிறப்புரை:  பேரா.க.அருணன் தமிழிசை நடனம் திருக்குறள் ஓதல் பாராட்டுகள் பரிசு வழங்கல்

பிரித்தானியப் பாராளுமன்றில் பொங்கல் விழா!

பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத் தைப்  பொங்கல் விழா!     தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு  முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன.   தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க…

உருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

  உருசிய  நாட்டிலுள்ள தமிழறிஞர்கள் சிலர் தமிழாய்வு தொடர்பான சில திட்டப் பணிகள் தொடர்பாகத் தமிழகம் வந்துள்ளனர். மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் உருசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி  (Prof Alexander Dubyanskiy)அவர்களின் தலைமையில் வருகை தரும் இவர்களுடன் சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்கும் ஆசியவியல் நிறுவனம், தை 10, 2049செவ்வாய்க் கிழமை 23-01-2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு (செம்மஞ்சேரியில் அமைந்துள்ள) ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…

உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிறு

ஞாயிறு தை 08, 2049  சனவரி 21, 2018 மாலை 4.30 வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்) உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் சிறப்புச்சொற்பொழிவு: புலவர் தெ.தட்சிணாமூர்த்தி   அன்புடன் புதுகை வெற்றிவேலன் பேசி 9444521773  

சைவ முன்னேற்றச் சங்கத்தின்  தைப்பொங்கல் திருநாள்

அன்புடையீர், அருள்மிகு சிவகாமி அம்பாள்  இணை  சிதம்பரேசுவரர் ஆலயத்தில்  சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள்  தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை 14.01.2018 மாலை  6.00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவுள்ளது.   தமிழர் திருநாளை – உழவர் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அனைவரையும் வரவேற்கிறோம். திருவாட்டி தயாளன்  செயற்பொறுப்பர் சைவமுன்னேற்றக்கழகம், ஐக்கிய அரசு.

திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு

தை 02-3, 2049  சனவரி 15-16, 2018 காலை வள்ளுவர் கோட்டம், சென்னை திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு உலகத்திருக்குறள் மையம்