வரும் ஆண்டில் தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு
தென் குமரியில் உலகத் திருக்குறள் மாநாடு மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்பு, சப்பானிய, கொரிய, சீனக் கூட்டுறவோடு சென்னையில் செயல்பட்டுவரும் ஆசியவியல் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களோடு இன்னும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைப்புக்களும் இணைந்து அனைத்துநாட்டுக் கூட்டு முயற்சியாகத் தமிழகத்தின் தென்கோடிக் குமரியில் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டினை அடுத்து வரும் வைகாசி 03-05 / 2048 / 2017ஆம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக நடத்தவிருக்கின்றன. அனைத்துலகு நோக்கிய திருக்குறளின்…
சிறப்புச் சொற்பொழிவு, அண்ணாமலைப் பல்கலைக்கழம்
புரட்டாசி 10, 2047 / செட்டம்பர் 26, 2016 முற்பகல் 10.30 திருக்குறளில் உணர்வுசார் நுண்ணறிவு – முனைவர் சந்திரிகா சுப்பி்ரமணியன் தமிழியற்புலம்
மறைமலையடிகள் விருது,பொற்கிழி வழங்கல், பல்லவபுரம், சென்னை
புரட்டாசி 09, 2047 / செட்டம்பர் 25, 2016 மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா விருது, பொற்கிழி பெறுநர் : பழ.நெடுமாறன் மறை.தி.தாயுமானவன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, மும்பை
புரட்டாசி 08, 2047 / செட்டம்பர் 24, 2016 மாலை 6.30
குறும்படப்போட்டி, பரிசு நூறாயிரம் உரூபாய்
நூல்கள் அறிமுக விழா, இலண்டன்
புரட்டாசி 29, 2047 / அட்டோபர் 15, 2016 மாலை 4.30 ஐ.தி.சம்பந்தன் எழுதிய நூலும் அவரின் முத்துவிழா மலரும் அறிமுக விழா
தந்தை பெரியார் அறக்கட்டளை விழா, திருவண்ணாமலை
புரட்டாசி 08, 2047 / செட்டம்பர் 24, 2016 மாலை 5.00 திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கம்
உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு – கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
இலங்கை இசுலாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருட இறுதிக்குள் உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ஆய்வரங்குகளுக்கான கட்டுரைத் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் கிடைப்பதற்குரிய இறுதி நாள் : புரட்டாசி 16, 2047 / செப்டம்பர் 30, 2016 கட்டுரைகளை எழுதுவதற்கும் பங்கேற்பதற்கும் தேச இன வரம்புகளில்லை. கட்டுரைகள் ஒரு குழுவினரால் ஆய்விடப்பட்டுச் சிறந்தவை ஏற்றுக் கொள்ளப்படும். கட்டுரைத் தலைப்புகள். 01. தற்கால இலக்கியம் 01. முசுலிம் படைப்பாளிகளின் வலைத்தளப்பதிவுகள் 02. 1970 களின் பின்னரான…
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் விழா
ஆவணி 31, 2047 / 16.09.2016 பிற்பகல் 2.30 தமிழ்மேம்பாட்டுச் சங்கப் பலகைத்துறை
பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை ஆவணி 31, 2047 / 16.09.2016 அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுக்கின்றது.
எம்.பி.நிர்மலுடன் பல்வழி அழைப்பில் உரையாடல்
தமிழ், தமிழென்று பேசுவோர்க்கும், தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும் அரிய மாலைப் பொழுது ! சிந்தனைச் செம்மல், செயல் வீரர் நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் . [https://youtu.be/pg2ANFKl1Cs Periyar International USA] சமூகவியல் சொற்பொழிவு தமிழகம்: சமூகநல களப்பணிகள். திரு. எம்.பி. நிருமல் உலகத்தின் மாசுவான சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி’ என்ற அமைப்பையும் உருவாக்கி…
உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா
வணக்கம்! உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று வணிக நோக்கமற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுவதுமாக உட்பட்டு, சிறப்பாக இயங்கிக், கடந்த 25ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகின்றது. தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்; உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும், உலகத் தமிழ் அமைப்பு கடந்த 25ஆண்டுகளாக அயராது உழைத்து வருகின்றது. உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து…
