பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

  தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தும், தாக்குதலை நிறுத்தக் கோரியும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை ஆவணி 31, 2047 / 16.09.2016 அன்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடை பெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுக்கின்றது.

எம்.பி.நிர்மலுடன் பல்வழி அழைப்பில் உரையாடல்

தமிழ், தமிழென்று பேசுவோர்க்கும்,  தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும் அரிய மாலைப் பொழுது ! சிந்தனைச் செம்மல், செயல் வீரர்  நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் . [https://youtu.be/pg2ANFKl1Cs Periyar International USA] சமூகவியல் சொற்பொழிவு தமிழகம்: சமூகநல களப்பணிகள். திரு. எம்.பி. நிருமல்    உலகத்தின் மாசுவான‌ சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி’ என்ற அமைப்பையும் உருவாக்கி…

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா

    வணக்கம்! உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று வணிக நோக்கமற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுவதுமாக உட்பட்டு, சிறப்பாக இயங்கிக்,  கடந்த 25ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகின்றது.   தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்;  உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும், உலகத் தமிழ் அமைப்பு கடந்த 25ஆண்டுகளாக அயராது உழைத்து வருகின்றது.   உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து…

பாரதியார் சங்கம் நடத்தும் பாரதியார் விழா, சென்னை 28

  ஆவணி 27, 2046 / செட்டம்பர் 12, 2016 பிற்பகல் 3.00 பாரதியார் விருது & பாரதி மணிச்செல்வர் விருதுகள் வழங்கல்

பாரதியின் பாதையிலே – நிகழ்வு 04, சென்னை 600 004

  ஆவணி 30, 20417 / செட்டம்பர் 15, 2016 மாலை 6.30 பாரதிச்செம்மல் விருது  பெறுநர் : முனைவர் க.இராமசீதாலட்சுமி் பாரதியார் சங்கம்   கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்

பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா . முனைவர் அரங்க.பாரி பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழியல்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் : தொடர் 79

வ.உ.சிதம்பரனார், மறைமலையடிகள், சி.இலக்குவனார் புகழ் போற்றும் விழா: புரட்டாசி 04, 2047 / செட்டம்பர் 20, 2016 மாலை 6.00 – இரவு 9.00 இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் ஆடற்கலையரங்கம் பேச்சுக்கலைப் பயிற்சி யரங்கம் பரிசுவழங்கிப் பாராட்டரங்கம் எண்கண்மணி

இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : தஞ்சை பிரகாசு

  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 28, 2047 / 13.09.2016 அன்று   மறு வாசிப்பில் தஞ்சை பிரகாசு    சிறப்புரை : திரு தஞ்சாவூர்க் கவிராயர் தலைமை: முனைவர் ப. சரவணன் அன்னம் விருது பெறுபவர்:  எழுத்தாளர் பொன்.வாசுதேவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: வழக்கறிஞர் அ .க. இராசாராமன் வழக்கம்போல் உறவும், நட்புமாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் உதவுக!

தமிழன்புடையீர் தனித்தமிழியக்கத் தந்தை, பன்மொழியறிஞர் எனப் போற்றப்பெறும் மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம்(1916-2016) நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் தமிழ் அறிஞர் பெருமக்களால் தனித் தமிழ்இயக்க நூற்றாண்டு விழா பொலிவுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்பொருட்டு தனித்தமிழ் இயக்கநூற்றாண்டு விழா, திருவள்ளுவராண்டு       2047 கன்னி 09 (25-9-2016) ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு  அடிகளார் வாழ்ந்த பல்லவபுர மாளிகையில் சிறப்பாக நடை பெறவுள்ளது.    அவ்வமயம் புகழ்பெற்ற இக்குடும்பத்தின் பிறங்கடையினர்கள் (வழித் தோன்றல்கள்) கலந்துகொண்டு அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினை மகிழ்வுடன் நினைவுகூர…

தமிழர் ஓவியங்களும் நவீன மாற்றங்களும் – தகவலாற்றுப்படை

ஆவணி 24, 2047 / செட்டம்பர் 09, 2016 மாலை 4.30 தமிழ் இணையக்கல்விக்கழகம் தொடர் சொற்பொழிவு 17 : ஓவியர் புகழேந்தி ஓவியர்  திரு. புகழேந்தி  குறித்து  ஓவியர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர்.  குடந்தை  கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டமும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவியத்துறைப்  பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமான ‘எரியும் வண்ணங்கள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அதனைத்…

பெரியார் நூலக வாசகர் வட்டம்: 2191 ஆம் நிகழ்வு, சென்னை-7

ஆவணி 23, 2047 / செட்டம்பர் 08, 2016 மாலை 6.30 கலைஞர் தந்த மறுமலர்ச்சிகள் தொடர்பொழிவு 6 முனைவர் பொற்கோ முனைவர் ம.இராசேந்திரன்