தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு

ஆனி 26,2047/ சூலை 10, 2016 காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை குமரி மாவட்டம் பனம்பாரனார் நிலம்தரு திருவில் பாண்டியன் அதங்கோட்டாசான் ஆகியோர் திருவுருவப்படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவை

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 /  சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது. சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது? அப்போதிருந்த சூழல் என்ன? அவர்கள் செய்தது என்ன? அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன? நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது? அதற்கு…

பசும்பொன் நுண்கலைக்கழகம், படத்திறப்பு விழா, சென்னை

  ஆனி 19, 2047 / 03-07-2016 காலை 10.00 திருமிகு எசு.ஆர்.கருப்பண்ணன் இ.ஆ.ப.(ஓய்வு) தாமரைத்திரு மனோரமா பொறியாளர் பொன்னையா ஆகியோர் படத்திறப்பு படத்திறப்பாளர்கள்  : கே.மலைச்சாமி இ.ஆ.ப.(பணிநிறைவு) நீதிபதி இராசேசுவரன் நீதிபதி ஏ.இராமமூர்த்தி பசும்பொன் அறக்கட்டளை  

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா

அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா  ஆனி 19, 2047 /  2.7.2016  சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது. 6.00மணி – இறைவணக்கம் 6.05. வரவேற்புரை – பேராசிரியர் மு.பழனியப்பன் 6.10  உரை : முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய திரு. . இரா. மாது, திருச்சிராப்பள்ளி கம்பன் கழகச் செயலாளர். 6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி 6.55 –…

குறள்மலைச்சங்கத்தின் முதல் குறள்கல்வெட்டு திறப்பு, மலையப்பாளையம்

வணக்கம். பேரன்புடையீர்! 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன்  கல்வெட்டுகளாக்க வேண்டும் என்று  குறள் மலைச்சங்கம் பல ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக முதல் குறள் மலைமீது கல்வெட்டாகப் பொறிக்கப்படும் பணிகள் நிறைவடைந்து,  ஆனி 19, 2047 /  2016 சூலை 3 ஆம்  நாளன்று திறப்பு விழா நடைபெற உள்ளது.  குருமகாசந்நிதானங்களின் அருளாசியுடன், மதிப்புமிகு நீதியரசர். ஆர்.மகாதேவன் அவர்களும், உயர்திரு விஞ்ஞானி. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், உயர்திரு.மதிவாணன் அவர்களும், திரு வி.சி.சந்தோசம் அவர்களும் முதல் குறளைத்திறந்து வைத்து, சிறப்புரையாற்றவுள்ளார்கள். அதுசமயம்…

‘ழகரம்’ சிற்றிலக்கியத் தமிழ் இதழ் வெளியீடு

   வணக்கம். ‘ழகரம்’  சிற்றிலக்கியத் தமிழ் இதழ்  ஆனி 05, 2047  / சூன் 19, 2016  ஆம் நாள் மாலை 4 மணிக்கு  மார்க்கம் மக்கள் மையத்தில்  வெளியிடப்படவுள்ளது. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

போராளி வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு!

முன்னாள் பெண் போராளி வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு!   முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாமின் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் ஆனி 11, 2047 / சூன் 25, 2016  ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிடப்படவுள்ளது. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.