முத்திரை-இந்தியன்படை :muthirai_indianarmy

இந்தியப் படை அமைச்சகத்தில் பணி! விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் படை (army) அமைச்சகத்தின் 14-ஆவது தளவாட நிலையத்தின் சார்பாகப் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 128 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி – காலியிடங்கள் விவரம்:

பணி: துணை வினைஞர் (Tradesman Mate) – 98

பணி: பல்வினைப் பணியாளர் (துப்புரவாள்) [MTS (Safaiwala)] – 01

பணி: தீயணைப்பு வீரர் (Fireman) – 07

பணி: கீழமைப் பிரிவு எழுத்தர் [Lower Division Clerk (LDC)] – 10

பணி: பொருள் உதவியாளர் (Material Assistant) – 12

அகவை (வயது) வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: துணை வினைஞர் (Tradesman Mate), தீயணைப்பு வீரர், பல்வினைப் பணியாளர் [MTS (Safaiwala)], கீழமைப் பிரிவு எழுத்தர் [Lower Division Clerk (LDC)] ஆகிய பணிகளுக்குப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருள் உதவியாளர் (Material Assistant) பணிக்குப் பொருள் மேலாண்மைப் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பட்டயம் (Diploma) முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.1800/-, 2,400/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க: http://indianarmy.nic.in/writereaddata/documents/14fad190216.pdf என்கிற இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, தன்னுறுதி (self-attested) செய்யப்பட்ட கடவுச்சீட்டு (passport) அளவுப் புகைப்படங்கள் இரண்டு, உறுதிமொழியுடன் கூடிய சான்றிதழ் நகல்கள், உரூ.25-க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட உங்கள் முகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்துக் கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் / பதிவு அஞ்சல் / விரைவு அஞ்சல் என ஏதேனும் ஒன்றில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப உறையின் மீது ‘Application for the Post of ____________ ‘என்று பதவிப்பெயரைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

The Commandant,

14 FAD, Pin-909714m

C/O 99 APO

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 10.03.2016 [விதிவிலக்கு மாநிலம் அறிய விளம்பரத்தைக் காண்க.]

 முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணைப்பைச் சொடுக்குங்கள்!

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan