முத்திரை, இந்திய வங்கி - muthirai_indiavangi_bankofindia

பாங்கு ஆப் இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி

  மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாங்கு ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பட்டயக் கணக்காளர் (chartered accountant).

காலியிடங்கள்: 20

அகவை (வயது) வரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பட்டயக் கணக்காளர் படிப்பை (C.A) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுக் கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டின் சென்னை முதலான முதன்மைப் பெருநகரங்களில் இணைய வழியில் (online) நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்கிற இணையத்தளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: உரூ. 600/-

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 08.03.2016

விண்ணப்பிக்கும் முன் www.bankofindia.co.in/english/career.aspx என்கிற இணைப்பில் சென்று முழுமையான விவரங்களை அறியத் தவறாதீர்கள்!

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan