காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!
காவல்துறைப் பணிச்சேர்க்கை 2017
காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!
காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவோர் காவல்துறையில் உள்ள புதிய காலிப் பணியிடங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை இங்கு காணலாம்.
இந்திய அரசுப் பணிகள் வலைப்பூ காவல்துறையிலுள்ள எல்லாக் காலிப் பணியிடங்களையும் பற்றிய முழுப் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தத் தகவலை ’அகரமுதல’ இதோ உங்களுக்கெனத் தமிழில் வழங்குகிறது.
துறை |
மொத்தப் பணியிடங்கள் |
பணி நிலை |
கடைசி நாள் |
முழு விவரம் |
சார்க்கண்டு காவல்துறை | 1500 | உதவிக் காவலர் | 05/04/2017 | இங்கே சொடுக்குக! |
மத்திய சேமக் காவல்படை (CRPF) | 219 | உதவித் துணை ஆய்வாளர் (எழுத்தர்) | 25/04/2017 | இங்கே சொடுக்குக! |
காவல்துறை ஆய்வு – வளர்ச்சிப் பிரிவு (BPRD) | 125 | – பல்வேறு பணிகள் – | 11/04/2017 | இங்கே சொடுக்குக! |
நாட்டுப் புலனாய்வு முகமை (NIA) | 53 | தகவல் தொழில்நுட்பப் பணியிடங்கள் (தூதுக்குழு) | 10/05/2017 | இங்கே சொடுக்குக! |
இமாசலப்பிரதேசச் சிறைத்துறை | 39 | ஆண் சிறைக்காவலர்கள் | 15/04/2017 | இங்கே சொடுக்குக! |
குசராத்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் (GPSC) | 28 | காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் | 31/03/2017 | இங்கே சொடுக்குக! |
எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) | 15 | உதவிப் படைத்தலைவர் | 10/04/2017 | இங்கே சொடுக்குக! |
நாட்டுப் புலனாய்வு முகமை (NIA) | 12 | காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் | 11/04/2017 | இங்கே சொடுக்குக! |
நாட்டுப் புலனாய்வு முகமை (NIA) | 02 | காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் | 10/05/2017 | இங்கே சொடுக்குக! |
வடகிழக்குக் காவல் மன்றம் | பல்வேறு | இயக்குநர்கள், எழுத்தர் | 25/04/2017 | இங்கே சொடுக்குக! |
மேற்கண்ட வேலைவாய்ப்புகளை வழங்கும் மத்திய, மாநில அரசுத் துறைகளின் விவரம் பின்வருமாறு:
மத்தியக் காவல்துறைப் பிரிவுகளின் பட்டியல்:
மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) -> எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), மத்திய சேமக் காவல் படை (CRPF), இந்தியா-திபெத்து எல்லைக் காவல்படை (ITBP), நாட்டுப் பாதுகாப்புக் காவலர் (NSG), தொடரிப் பாதுகாப்புப் படை (RPF), சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG), இந்தியா-நேபாளம் – இந்தியா-பூட்டான் எல்லைப் பாதுகாப்புப் படை (SSB).
மத்தியப் புலனாய்வு, துப்பறிவுக் அமைப்புகள் -> மத்தியப் புலனாய்வுத்துறை (CBI), வருவாய்த் துப்பறிவு இயக்ககம், இந்திய வருமான வரித்துறை, நாட்டுப் புலனாய்வு முகமை (NIA), நாட்டுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB), காவல்துறை ஆய்வு – வளர்ச்சிப் பிரிவு (BPRD), நாட்டுக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB).
மாநிலக் காவல்துறைப் பிரிவுகளின் பட்டியல்:
மாவட்ட, பிரிவு வாரியான காவல்துறைகள்: குற்றப் புலனாய்வுப் பிரிவு (CB-CID), மாநகரக் காவல்துறை, போக்குவரத்துக் காவல்துறை, மாநில ஆயுதக் காவல் படைகள்.
மாநிலக் காவல் பணித்தரங்கள் -> துணைக் காவல் பொது ஆய்வாளர் (DIG), காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP), காவல்துறை உதவி ஆய்வாளர் (ASI) அல்லது காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் (DSP), ஆய்வாளர் (Inspector), துணை ஆய்வாளர் (SI), தொடக்கநிலைக் காவலர்.
ஆங்கில மூலம்: இந்திய அரசுப் பணிகள்
மார்ச்சு 23, 2017
தமிழில் : இ.பு.ஞானப்பிரகாசன்
ஆந்திரமாநில இடைநிலை இரண்டாம் ஆண்டுத் தேர்விற்குப் பெயரைச் சொடுக்கித் தளத்தில் காண்க.