முத்திரை-தேசிய உணவூடட நிலையம் : muthirai_nationalinstituteofnutrition

தேசிய உணவூட்ட நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி

  ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய உணவூட்ட நிலையத்தில் (nutrition) காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NIN/Rectt/T&E-Posts/1/2015-16

மொத்தக் காலியிடங்கள்: 10

பணி: தொழில்நுட்ப அலுவலர் ‘அ’ (Technical Officer ‘A’), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant).

தகுதி: தாவர-விலங்கு-வேதி இயல் (BZC), கணித-இயல்பு-வேதி இயல் (MPC) பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றவர்கள், தாவர-விலங்கு-வேதி இயல் (BZC) பாடப்பிரிவில் இளநிலை அறிவியல் (B.Sc) பட்டமும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பட்டயமும் (DMLT) பெற்றவர்கள், ஊட்டம் (Nutrition), தாவரவியல் (Botany), வேதியியல் (Chemistry) பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் முடித்தவர்கள், இளநிலை அறிவியல் (கணினி) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பணிப் பட்டறிவும் (அனுபவம்) தேவை. விண்ணப்பிக்கும் முன் முழுமையான விவரங்களை http://ninindia.org/employment.htm என்ற இணையப்பக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளத் தவறாதீர்கள்!

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: உரூ.100/- இதனை Director, NiN, Hyderabad என்ற பெயரில் ஐதராபாதில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக (D.D) எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://ninindia.org/employment.htm என்ற இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கிப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 15.03.2016

 

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan