முத்திரை-கடல்சார்பல்கலைக்கழகம் : muthirai_indianmaritimeuniversity

பொறியியல் பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

  இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பர்(technician) பணியிடங்களை நிரப்பத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். IMU/HQ/Workshop-Lab/02/2016

பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (செயல்முறை இயந்திரவியல் ஆய்வகம்) [Senior Technician (Applied Mechanical Laboratory)] – 02

பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (இயந்திரக் கடை) [Senior Technician (Machine Shop)] – 02

பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (உருக்கியிணைத்தல்-வளிமுறை வெட்டுப் பட்டறை) [Senior Technician (Welding and Gas Cutting Workshop)] – 02

பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (நீர்மவியல்-காற்றழுத்தவியல் ஆய்வகம்) [Senior Technician (Hydraulics and Pneumatics Laboratory)] – 02

பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (கருவிமயமாக்கல்-தானியாக்கல்-கட்டுப்பாட்டுப் பொறியியல் ஆய்வகம்) [Senior Technician (Instrumentation, Automation and Control Engineering Laboratory)] – 02

பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (வெப்ப இயக்கவியல்-கொதிகலன் வேதியியல் ஆய்வகம்) [Senior Technician (Thermodynamics and Boiler Chemistry Laboratory)] – 01

ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.2,800/-

அகவை (வயது) வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் இயந்திரவியல் (Mechanical), உருவாக்கம் (Production), தானுந்து (Automobile), கருவிமயமாக்கம் (Instrumentation), தானியாக்கம் (Automation), கட்டுப்பாட்டுப் பொறியியல் (Control Engineering) போன்ற பிரிவுகளில் பட்டயத்துடன் (Diploma) தொடர்புடைய தொழிற்பயிற்சி (ITI) முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.imu.edu.in/index.php?sub_prod_id=98 என்கிற இணையப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கிப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் முழுமையான விவரங்களை மேற்கண்ட இணைப்பில் சென்று பார்க்கத் தவறாதீர்கள்!

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, IndiaN MARITIME UNIVERSITY, EAST COAST Road, Uthandi, Chennai – 600 119.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 18.03.2016.

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan